Showing posts with label (பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு. Show all posts
Showing posts with label (பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு. Show all posts

Wednesday, August 20, 2008

புதிய பதிவர் சங்கம் (பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு

கும்மி, மொக்கை தோன்றி, பின்னூட்ட டுபுரித்தனம் தோன்றாக்காலத்திலிருந்து பதிவிட்டு வரும் மூத்த வலைஞர் கோவியாரின் பதிவு தமிழ்மணத்தையே சூடாக்கி இருப்பது யாவரும் அறிந்ததே.

அந்தப் பதிவின் எதிர்வினைதான் இந்தப்பதிவு.

ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே எதற்கெதற்கோ சங்கங்கள் இருக்கின்றன.
சங்கம் துவக்குவதும், கலாய்ப்பதும், கும்முவதும், பின்னூட்ட டுபுரித்தனம் உள்ளிட்ட அனைத்தும் பதிவர்களின் வாழ்வாதார உரிமை.

கும்மி, மொக்கை, சொசெசூ முதலிய சகல விஷயங்களையும் புதிய பதிவர் அறிந்து கொள்ள இந்த பு ப ச துவக்க உள்ளேன்.

இதில் புதிய பதிவர்கள் கற்றுக்கொள்ளலாம்.
சீனியர் பதிவர்கள் கற்றுக்கொடுக்கலாம்.

அனைவரும் வந்து அட்டெண்டன்ஸ் போட்டு உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள் வலைஞர்களே ! ! !

ஆரம்பம் இசை (ஸ்டார்ட் மீஜிக் - இன் தமிழாக்கம்).