Showing posts with label நட்சத்திரவாரம். Show all posts
Showing posts with label நட்சத்திரவாரம். Show all posts

Tuesday, December 9, 2008

25க்கு 90, 25க்கு 30, மொத்தம் 50

இந்தப் பதிவு ஐம்பதாவது பதிவு என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மிக மகிழ்ச்சியடைகிறேன். மற்றொரு மகிழ்ச்சியான விஷயம் இந்த ஐம்பதாவது பதிவு நட்சத்திர வாரத்தில் வெளிவருவது. இது இரட்டைச் சந்தோஷத்தைத் தருகிறது.சென்ற மாதம்தான் 25வது பதிவை முடித்து '3 மாதம் 25 பதிவுகள்' என்ற பதிவைப் போட்டேன்.

முதல் 25க்கு 3 மாதம். அடுத்த 25க்கு 30 நாட்கள். ஒரு ரிதமிக்காக இருக்கவேண்டுமென்பதற்காக 3 மாதம் 30 நாட்கள் என்று போட்டிருக்கிறேன். உண்மையில் சற்று அதிக நாட்கள்தான்:). வேகம் கூடியிருக்கிறது. இந்த வேகம் தொடருமா என்று தெரியவில்லை. ஆனால் பதிவுகள் நிச்சயம் தொடரும்.

அதிலும் இந்த நட்சத்திர வாரம் ஆரம்பித்த இரு நாட்களில் ஐந்து பதிவுகள். நடுவில் தினம் ஒரு பதிவென்று முடிவெடுத்து வழக்கம் போல் செயல்படுத்த முடியாமல் விட்டிருக்கிறேன்.

இடையிடையே சில மொக்கைப் பதிவுகள், (நானே ஒரு பதிவை அதிமொக்கையாக இருக்கிறதென்று நீக்கிவிட்டேன்:)..) இரு மீள்பதிவுகள் இருந்தாலும் பெரும்பாலும் மன நிறைவைத் தரும் பதிவுகளாகத் தான் இருக்கின்றன.

புள்ளியியல் அடிப்படையில் சக்கரவியூகம் இரட்டை இலக்கத்தை அடைந்திருக்கிறது. (இடையில் ஒரு மன்னிப்புப் பதிவு:(..).

ஐந்து கேள்விப்பதிவுகள் இட்டிருக்கிறேன். ஆடிட்டரல்லவா. நமக்கு கேட்பதுதான் அல்வா கொடுப்பது போலாயிற்றே!(இப்போதெல்லாம் அல்வா சாப்பிடுவது தவறாமே..)

மூன்று சிறுகதைகள் - நான்கு பதிவுகள் (டேய்.. நிஜமல்ல கதை - இரு பாகங்களாக வந்தது.)

வானவில் என்று வாராந்திரியை ஆரம்பித்தேன். அது தற்சமயம் குறைப் பிரசவமாக இருக்கிறது.

மற்றவை பொதுவானவை.

மாதவாரியாகப் பார்த்தால் ஆகஸ்டில் 4, செப்டம்பரில் 8, அக்டோபரில் 13, நவம்பரில் 14, டிசம்பரில் இதுவரை 11.

இதுவரை 6000 சொச்சம் முறை இந்தப் பதிவு பார்க்கப் பட்டிருக்கிறது. நானே 1000முறைக்கும் மேல் பார்த்திருக்கலாம்.


இது சாத்தியமானதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி.