Saturday, November 1, 2008

3 மாதம் 25 பதிவுகள்.. இனி என் வழி என்ன

இது 26வது பதிவு. நண்பர் ஆதவன் தனது 25வது பதிவைப் பற்றி எழுதிய பிறகுதான் என் பதிவுக் கணக்கைப் பார்த்தேன். இதை எப்படிச் சொல்வது மூன்றே மாதத்தில் 25 பதிவுகள் என்றா?. மூன்று மாதத்தில் 25 பதிவுகள்தான் என்றா?

பதிவெழுதலாம் என்று முடிவு செய்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு ஒரு சுபயோக சுப நாளில், பதிவெழுதத் தொடங்கினேன். முதலில் இவ்வளவு எழுத வேண்டும் என்றெல்லாம் இல்லை. நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்றுதான் தொடங்கினேன். அதுவும் பற்பல பணிச்சுமைகளுக்கிடையே எழுத முடிந்ததென்றால் அதற்கு பதிவெழுதவேண்டுமென்ற ஈடுபாடும், உங்களது ஊக்கமுமே காரணம்.

சிலர் எந்தப் பதிவு போட்டாலும், குறைந்தது 100 பின்னூட்டங்களை அள்ளிவிடுகின்றனர். பின்னூட்டமென்பது ஒரு பதிவனுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து. நமக்கோ கடுமையான ஊட்டச்சத்துப் பற்றாக்குறை :((. பத்தைத் தாண்டுவதற்குள் நாக்கைத் தள்ளிவிடுகிறது. கோவியாரின் புதிய பதிவர்களுக்கான பதிவில் துளசி மேடம் பின்னூட்டத்தைப் பற்றி கவலைப்படக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள். ஆனாலும் கவலைப் படாமல் இருக்க முடியவில்லையே.

நான் சிறுகதை எழுதினேன். இப்பொழுது சரித்திரத் தொடர்கதை எழுதிவருகிறேன். இது பற்பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப் படுகிறது. ஆனால் இதற்கான வரவேற்பைப் பார்த்தோமானால், குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர யாரும் வருவதாகத் தெரியவில்லை. எழுத்துலகில் உள்ள அனைவருக்கும் வரலாறும் சரித்திர நாவலும் பிடித்தமான ஒன்றுதான் என்றாலும், இதற்கான வரவேற்பு இல்லாதது ஒரு பின்னடைவையும் சோர்வையும் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.ஆனாலும் இத்தொடருக்குத் தொடர்ந்து வரும் ஒரு சிலருக்காகவும் என்னுடைய திருப்திக்காகவும் நிச்சயமாகத் தொடர்வேன். அதற்கான கருவும் அடுத்த பல அத்தியாயங்களுக்கான அவுட்லைன்களும் தயாராக உள்ளன.

ஆனால் சினிமா பற்றிய தொடர் பதிவிற்கு கிடைத்த பின்னூட்டம் 40. இது என்னைப் பொறுத்த வரை மிகப் பெரிய பின்னூட்டம். ஆகவே, பதிவெழுதிப் பேர் (பின்னூட்டம்) வாங்க வேண்டுமென்றால் ஒன்று, சினிமாவைப் பற்றி எழுத வேண்டும் இல்லையென்றால் மொக்கை போட வேண்டும்.

ஆண்பாவம் படத்தில் வி.கே.ராமசாமி சொன்னதை இங்கு எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ' நான் குளம் வெட்டினேன். நீங்க யாரும் தண்ணி எடுக்க வரல. நான் கோயில் கட்டுனேன். நீங்க யாரும் சாமி கும்பிட வரல. நான் பள்ளிக்கூடம் கட்டுனேன். நீங்க யாரும் உங்க பசங்கள படிக்கறதுக்கு அனுப்பல. ஆனா இப்போ தியேட்டர் கட்டியிருக்கேன். நீங்கல்லாம் கும்பலா வந்திருக்கீங்க. இதப் பாக்கும் போது அடடா இத முன்னாலயே செஞ்சிருக்கலாமேன்னு தோணுது'

நீங்க சொல்லுங்க. நான் எப்படி போகணும், லெப்டா, ரைட்டா, நடுசென்டரா?

55 comments:

Venkatesh said...

Me the first

Venkatesh said...

CONGRATS>

REPLIES OR NOREPLIES>

KEEP POSTING AND KEEP SMILING

முரளிகண்ணன் said...

wishes for silver jubliee

இளைய பல்லவன் said...

Thanks Murali Kannan

Presently I am away from my computer. Hence, I could not reply in Tamil:(

உருப்புடாதது_அணிமா said...

25க்கு வாழ்த்துக்கள்

உருப்புடாதது_அணிமா said...

11///நீங்க சொல்லுங்க. நான் எப்படி போகணும், லெப்டா, ரைட்டா, நடுசென்டரா?///

ஆமா, இதுல் எது லெப்ட், எது ரைட் ??

பரவால்ல, நீங்க நடு சென்டர்லயே போங்க...

உருப்புடாதது_அணிமா said...

///சிலர் எந்தப் பதிவு போட்டாலும், குறைந்தது 100 பின்னூட்டங்களை அள்ளிவிடுகின்றனர்.///

கவலையே படாதீங்க... அடிச்சி ஆடிடுவோம்...

( ஆம்மாம் இது என்னை பத்தி சொல்லலியே??)

உருப்புடாதது_அணிமா said...

/// இதை எப்படிச் சொல்வது மூன்றே மாதத்தில் 25 பதிவுகள் என்றா?. மூன்று மாதத்தில் 25 பதிவுகள்தான் என்றா?////

வாழ்த்துக்கள்/..

மூன்று மாதத்தில் குவாட்டர் ஹிட்

உருப்புடாதது_அணிமா said...

///சினிமாவைப் பற்றி எழுத வேண்டும் இல்லையென்றால் மொக்கை போட வேண்டும்.////

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நண்பரே..
உங்களுக்காக எழுதுங்கள்..
கண்டிப்பாக ஒருநாள் உங்களின் எழுத்தை கண்டு பலர் வருவார்கள்..

உருப்புடாதது_அணிமா said...

///ஆனாலும் இத்தொடருக்குத் தொடர்ந்து வரும் ஒரு சிலருக்காகவும் என்னுடைய திருப்திக்காகவும் நிச்சயமாகத் தொடர்வேன்.////

இதை இதை தான் எதிர்பார்த்தேன்...
நன்றி

உருப்புடாதது_அணிமா said...

///பின்னூட்டமென்பது ஒரு பதிவனுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து. நமக்கோ கடுமையான ஊட்டச்சத்துப் பற்றாக்குறை :(////

நல்ல தமாஸ் போங்க...

உருப்புடாதது_அணிமா said...

///முதலில் இவ்வளவு எழுத வேண்டும் என்றெல்லாம் இல்லை. நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்றுதான் தொடங்கினேன்..///

ஆனால், இன்று உங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து கொண்டுள்ளீர்கள் .
வாழ்த்துக்கள்

உருப்புடாதது_அணிமா said...

///அதுவும் பற்பல பணிச்சுமைகளுக்கிடையே எழுத முடிந்ததென்றால் அதற்கு பதிவெழுதவேண்டுமென்ற ஈடுபாடும், உங்களது ஊக்கமுமே காரணம்.///

தொடர்ந்து எழுதுங்கள்..
நாங்கள் இருக்கிறோம்...

உருப்புடாதது_அணிமா said...

///துளசி மேடம் பின்னூட்டத்தைப் பற்றி கவலைப்படக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள். ஆனாலும் கவலைப் படாமல் இருக்க முடியவில்லையே.////

அவங்க எல்லாம் பெரியவங்க..
அதுனால அப்படி தான் சொல்லுவாங்க..

உருப்புடாதது_அணிமா said...

///ழுத்துலகில் உள்ள அனைவருக்கும் வரலாறும் சரித்திர நாவலும் பிடித்தமான ஒன்றுதான் என்றாலும், இதற்கான வரவேற்பு இல்லாதது ஒரு பின்னடைவையும் சோர்வையும் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.////

இனி இந்த சோர்வு உங்களுக்கு வராமல் இருக்க நான் கியாரண்டி

நான் ஆதவன் said...

முதலில் வாழ்த்துக்கள் பல்லவன்.
கும்மி அல்லாத பின்னூட்டம் என்பது கண்டிப்பாக ஒரு பதிவனுக்கு ஊட்டச்சத்தே. அது எதிர்மறையான பின்னூட்டமானாலும் சரி.
உங்களுடைய வரலாற்றுத் தொடர் பலரை சென்றடையாததற்கு காரணம் நாம் பதிவர் வட்டத்திற்குள் பிரபலமாகாததே. நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பதிவுகளை வாசித்துவருவதாக கூறியுள்ளீர். அப்போதே நீங்கள் பின்னூட்டம் மட்டும் இட்டு வந்தீர்களானால் (விஜய் ஆனந்த் மாதிரி) இவ்வலைப்பூ தொடங்கியிருக்கும் போது பிரபலமாக சாத்தியம் உள்ளது.
இனி வரும் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முயற்சி செய்யவும்.
இருந்தாலும் இதெற்கெல்லாம் கவலைப்படாமல் உங்களின் வரலாற்றுத் தொடரை எங்களைப் போன்ற வரலாற்று பிரியர்களுக்குகாக தொடர்ந்து ஆற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மறுபடியும் வாழ்த்துக்கள் பல்லவன்.

உருப்புடாதது_அணிமா said...

///ஆனால் இதற்கான வரவேற்பைப் பார்த்தோமானால், குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர யாரும் வருவதாகத் தெரியவில்லை////

பலர் வருவார்கள்..
பின்னூட்டம் தான் இட மாட்டார்கள்..

உருப்புடாதது_அணிமா said...

:-0)))))))

உருப்புடாதது_அணிமா said...

சினிமாவைப் பற்றி எழுத வேண்டும் இல்லையென்றால் மொக்கை போட வேண்டும்.////

ஹி ஹி மறுபடியும் என்னை தானே ??

உருப்புடாதது_அணிமா said...

//பதிவெழுதலாம் என்று முடிவு செய்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு///

எதுக்கு அவ்ளோ நாள் வெயிட் பண்ணீங்க??
அத பத்தி கூட ஒரு பதிவு போடலாமே ??

புருனோ Bruno said...

//ஆனால் இதற்கான வரவேற்பைப் பார்த்தோமானால், குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர யாரும் வருவதாகத் தெரியவில்லை. //

அப்படியெல்லாம் இல்லை.

வருபவர்கள் அனைவரும் மறுமொழி எழுத வேண்டும் என்று இல்லை

புருனோ Bruno said...

//ஆனால், இன்று உங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து கொண்டுள்ளீர்கள் .//

வழிமொழிகிறேன்.

உருப்புடாதது_அணிமா said...

///இது பற்பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப் படுகிறது. ////

அதை படிக்கும் எவரும் அதை அறிவார்கள் ...

உருப்புடாதது_அணிமா said...

தொடரட்டும்...

இரா. வசந்த குமார். said...

அன்பு காஞ்சித் தலைவன்...

பசியறிந்து பந்தியிட பதிவுலகம், அம்மா உழைக்கும் சமையற்கட்டு அல்ல; ருசியறிந்து வருவோர் தமக்கு வேண்டிய இடம் தேடிச் சென்று உண்ணும் ஹோட்டல்கள் நிறைந்த வீதி;

நீங்கள் எழுதுவதை எழுதுங்கள்; பிறருக்காக எழுதுவதில் உங்கள் சுயத்தை இழக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா..?

நீங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை யாரும் சொல்ல முடியாது. செம்பியன் மாதேவி வாயிலாக கல்கி அவர்கள் சொன்னது போல், அதற்கு உங்கள் அந்தராத்மா என்ன சொல்கின்றதோ, அதைத் தொடருங்கள்.

வாழ்த்துக்கள்.

உருப்புடாதது_அணிமா said...

பாருங்க இப்போ 25

இளைய பல்லவன் said...

// Venkatesh கூறியது...
Me the first
//

நன்றி வெங்கடேஷ்.

இளைய பல்லவன் said...

//
Venkatesh கூறியது...
CONGRATS>

REPLIES OR NOREPLIES>

KEEP POSTING AND KEEP SMILING
//

நீங்க சொல்றது புரியுது.

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
25க்கு வாழ்த்துக்கள்
//

ரொம்ப நன்றி அணிமா .ரெண்டு நாளா ஊர்ல இல்லாததுனால ப்ளாக் பக்கமே வர முடியல.

இங்க வந்து பாத்தா இன்ப அதிர்ச்சி. 26 கமென்டுகள். உள்ள போனா உங்க வேலன்னு தெரிஞ்சது.

விடமினுக்குத் தாங்க்சு :)

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...

ஆமா, இதுல் எது லெப்ட், எது ரைட் ??

பரவால்ல, நீங்க நடு சென்டர்லயே போங்க...
//

ஆமா நடு சென்டர்தான் சரி.

ஒண்ணு லெஃப்டுன்னா இன்னொண்ணு ரைட்டுதானே :)

அதாவது வரும்போது ரைட்டா இருக்கறது போகும்போது லெஃப்டாவுமில்ல.

அப்படி.

நல்லா இருக்கா:))

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
///சிலர் எந்தப் பதிவு போட்டாலும், குறைந்தது 100 பின்னூட்டங்களை அள்ளிவிடுகின்றனர்.///

கவலையே படாதீங்க... அடிச்சி ஆடிடுவோம்...

( ஆம்மாம் இது என்னை பத்தி சொல்லலியே??)
//

மறுபடியும் வளர நன்னி.

உங்களுக்கு ஆவரேஜ் எத்தனை? நீங்க நூறுக்கு மேலன்னா உங்களையும் சேத்துதான். இல்லைன்னா இல்லை.

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
/// இதை எப்படிச் சொல்வது மூன்றே மாதத்தில் 25 பதிவுகள் என்றா?. மூன்று மாதத்தில் 25 பதிவுகள்தான் என்றா?////

வாழ்த்துக்கள்/..

மூன்று மாதத்தில் குவாட்டர் ஹிட்
//

அதான் கேக்கறேன்.

மூணு மாசத்தில குவார்ட்டர் ஜாஸ்தியா கம்மியா.

இளைய பல்லவன் said...

// உருப்புடாதது_அணிமா கூறியது...
///சினிமாவைப் பற்றி எழுத வேண்டும் இல்லையென்றால் மொக்கை போட வேண்டும்.////

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நண்பரே..
உங்களுக்காக எழுதுங்கள்..
//

ஆம் அணிமா. நாம் பெரும்பாலும் நமக்காகத்தான் எழுதுகிறோம். ஆனாலும் நம்மைக் களப்படுத்துவதற்கான கருவிதான் மொக்கையும் சினிமாவும். ஏனெனில் பொழுதுபோக்கிற்காகவும், கடும் வேலைக்கிடையே மேய்வதற்காகவும் வரும் வலையுலக வாசகர்களால் பெரிதும் வரவேற்கப் படுகின்றன. இவ்வாறு செய்வதால் கிடைக்கும் அடையாளமானது நமது தரமான எழுத்துக்களையும் ஏந்திச் செல்லும் தரவாக மாறுகிறது. இது என் புரிதல். இது தவறாகவும் இருக்கலாம்.

//
கண்டிப்பாக ஒருநாள் உங்களின் எழுத்தை கண்டு பலர் வருவார்கள்..
//

உங்களைப் போன்றவர்களின் ஆதரவால் இந்த நம்பிக்கை எனக்கு நிச்சயம் உள்ளது. எனினும் இந்தப் பதிவு என் மன ஓட்டத்தின் வெளிப்பாடன்றி வேறல்ல.

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
///ஆனாலும் இத்தொடருக்குத் தொடர்ந்து வரும் ஒரு சிலருக்காகவும் என்னுடைய திருப்திக்காகவும் நிச்சயமாகத் தொடர்வேன்.////

இதை இதை தான் எதிர்பார்த்தேன்...
நன்றி
//

உங்கள் எதிர்ப்பார்ப்புக்கு மிக்க நன்றி அணிமா. நாளை அடுத்த பகுதியைப் படித்து விட்டு உங்கள் கருத்துரையை வழங்குங்கள்.

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
///பின்னூட்டமென்பது ஒரு பதிவனுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து. நமக்கோ கடுமையான ஊட்டச்சத்துப் பற்றாக்குறை :(////

நல்ல தமாஸ் போங்க...
//

இதுக்கு நானும் ஒரு அவ்வ்வ்வ்வ்வ் போட்டுக்கிறேன்:(((

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
///முதலில் இவ்வளவு எழுத வேண்டும் என்றெல்லாம் இல்லை. நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்றுதான் தொடங்கினேன்..///

ஆனால், இன்று உங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து கொண்டுள்ளீர்கள் .
வாழ்த்துக்கள்
//

நீங்க சொல்றீங்க. ரொம்ப டாங்கிஸ். நன்றிகள் பல.

இளைய பல்லவன் said...

//

உருப்புடாதது_அணிமா கூறியது...
///அதுவும் பற்பல பணிச்சுமைகளுக்கிடையே எழுத முடிந்ததென்றால் அதற்கு பதிவெழுதவேண்டுமென்ற ஈடுபாடும், உங்களது ஊக்கமுமே காரணம்.///

தொடர்ந்து எழுதுங்கள்..
நாங்கள் இருக்கிறோம்...
//

அந்த தெகிரியம் தானே எழுதத் தூண்டுது :))

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
///துளசி மேடம் பின்னூட்டத்தைப் பற்றி கவலைப்படக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள். ஆனாலும் கவலைப் படாமல் இருக்க முடியவில்லையே.////

அவங்க எல்லாம் பெரியவங்க..
அதுனால அப்படி தான் சொல்லுவாங்க..
//

நாளைக்கு நாமளும் இத மாதிரி ஏதாவது சொல்ல மாட்டமா என்ன?;-)

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
///ழுத்துலகில் உள்ள அனைவருக்கும் வரலாறும் சரித்திர நாவலும் பிடித்தமான ஒன்றுதான் என்றாலும், இதற்கான வரவேற்பு இல்லாதது ஒரு பின்னடைவையும் சோர்வையும் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.////

இனி இந்த சோர்வு உங்களுக்கு வராமல் இருக்க நான் கியாரண்டி
//

நன்றி. வேறென்னத்தைச் சொல்ல.

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் கூறியது...
முதலில் வாழ்த்துக்கள் பல்லவன்.
கும்மி அல்லாத பின்னூட்டம் என்பது கண்டிப்பாக ஒரு பதிவனுக்கு ஊட்டச்சத்தே. அது எதிர்மறையான பின்னூட்டமானாலும் சரி.
உங்களுடைய வரலாற்றுத் தொடர் பலரை சென்றடையாததற்கு காரணம் நாம் பதிவர் வட்டத்திற்குள் பிரபலமாகாததே. நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பதிவுகளை வாசித்துவருவதாக கூறியுள்ளீர். அப்போதே நீங்கள் பின்னூட்டம் மட்டும் இட்டு வந்தீர்களானால் (விஜய் ஆனந்த் மாதிரி) இவ்வலைப்பூ தொடங்கியிருக்கும் போது பிரபலமாக சாத்தியம் உள்ளது.
இனி வரும் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முயற்சி செய்யவும்.
இருந்தாலும் இதெற்கெல்லாம் கவலைப்படாமல் உங்களின் வரலாற்றுத் தொடரை எங்களைப் போன்ற வரலாற்று பிரியர்களுக்குகாக தொடர்ந்து ஆற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மறுபடியும் வாழ்த்துக்கள் பல்லவன்.
//
வாழ்த்துக்களுக்கு நன்றி ஆதவன்.

மிகச் சரியாகச் சொன்னீர்கள். இனிமேல் பெரும்பாலான பதிவுகளுக்குச் சென்று நல்ல பின்னூட்டங்களை வழங்குகிறேன்.

அடுத்த பதிவர் சந்திப்பிலும் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

ஏற்கனவே சொன்னது போல், சக்கரவியூகம் தொடர்ந்து வரும்.

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
///ஆனால் இதற்கான வரவேற்பைப் பார்த்தோமானால், குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர யாரும் வருவதாகத் தெரியவில்லை////

பலர் வருவார்கள்..
பின்னூட்டம் தான் இட மாட்டார்கள்..
//

கரெக்ட்.

நானே அப்படித்தான் மற்ற பதிவுகளுக்குப் போவேன். பின்னூட்டம் இட மிகவும் யோசித்திருக்கிறேன். மாற்றிக்கொள்ள வேண்டும்.

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
:-0)))))))
//

இது எதுக்கு.

பொத்தாம் பொதுவாகவா?

அப்படின்னா

:-))))))))))))))

இளைய பல்லவன் said...

//

உருப்புடாதது_அணிமா கூறியது...
சினிமாவைப் பற்றி எழுத வேண்டும் இல்லையென்றால் மொக்கை போட வேண்டும்.////

ஹி ஹி மறுபடியும் என்னை தானே ??
//

உங்கள மட்டுமில்ல. உங்களப் போல் பதிவெழுதிப் பேர் வாங்கிய எல்லாரையும் ;-))

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
//பதிவெழுதலாம் என்று முடிவு செய்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு///

எதுக்கு அவ்ளோ நாள் வெயிட் பண்ணீங்க??
அத பத்தி கூட ஒரு பதிவு போடலாமே ??
//

நல்ல யோசனையா இருக்கே.

முயற்சிக்கிறேன்.

இளைய பல்லவன் said...

//
புருனோ Bruno கூறியது...
//ஆனால் இதற்கான வரவேற்பைப் பார்த்தோமானால், குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர யாரும் வருவதாகத் தெரியவில்லை. //

அப்படியெல்லாம் இல்லை.

வருபவர்கள் அனைவரும் மறுமொழி எழுத வேண்டும் என்று இல்லை
//

வாங்க டாக்டர் ப்ரூனோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இது சரிதான்.

இளைய பல்லவன் said...

//
புருனோ Bruno கூறியது...
//ஆனால், இன்று உங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து கொண்டுள்ளீர்கள் .//

வழிமொழிகிறேன்
//

மிக்க மகிழ்ச்சி (கம்) நெகிழ்ச்சி :)

இளைய பல்லவன் said...

//

உருப்புடாதது_அணிமா கூறியது...
///இது பற்பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப் படுகிறது. ////

அதை படிக்கும் எவரும் அதை அறிவார்கள் ...
//

மீண்டும் நன்றிகள் பல.

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
தொடரட்டும்...
//

எது.

பதிவுப் பணியா.

ஓக்கே.

இளைய பல்லவன் said...

//

இரா. வசந்த குமார். கூறியது...
அன்பு காஞ்சித் தலைவன்...

பசியறிந்து பந்தியிட பதிவுலகம், அம்மா உழைக்கும் சமையற்கட்டு அல்ல; ருசியறிந்து வருவோர் தமக்கு வேண்டிய இடம் தேடிச் சென்று உண்ணும் ஹோட்டல்கள் நிறைந்த வீதி;

நீங்கள் எழுதுவதை எழுதுங்கள்; பிறருக்காக எழுதுவதில் உங்கள் சுயத்தை இழக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா..?

நீங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை யாரும் சொல்ல முடியாது. செம்பியன் மாதேவி வாயிலாக கல்கி அவர்கள் சொன்னது போல், அதற்கு உங்கள் அந்தராத்மா என்ன சொல்கின்றதோ, அதைத் தொடருங்கள்.

வாழ்த்துக்கள்.

//

அருமையான விளக்கவுரை வசந்த்.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

நமது கடைக்குக் கஸ்டமர்கள் வரவேண்டுமென்றால் என்னென்ன வெரைட்டிகள் வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்ளத்தான் இந்தப் பதிவு.

இளைய பல்லவன் said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
பாருங்க இப்போ 25
//

அட..

என்னோட இருவத்தஞ்சுக்கு உங்களோட இருவத்தஞ்சு.

உங்க ஆசிகளோட இப்ப அம்பதாயிடுச்சே.

நம்பவே முடியல.

ஸோ, 25ல் 50. க்ரேட்.

புதுகை.அப்துல்லா said...

dear brother,

weather you believe me or not, i have seen all your postings.but because of lack of time i didnt write any comments. dont worry about the comments.

appuram left la signal pottu right la kaiya kaatti strieght ta poikkitte irunga :)))

இளைய பல்லவன் said...

//
புதுகை.அப்துல்லா கூறியது...
dear brother,

weather you believe me or not, i have seen all your postings.but because of lack of time i didnt write any comments. dont worry about the comments.
//

Thanks a lot brother.

முதல் கமெண்டுக்கு மிக்க நன்றி, அப்துல்லா. தொடர்ந்து வாங்க.

//
appuram left la signal pottu right la kaiya kaatti strieght ta poikkitte irunga :)))
//

ஜூப்ப்ப்ப்பர், அப்படியே செய்து விடுவோம்.

வருங்கால முதல்வர் said...

தொடர்ந்து எழுதுங்க, வரலாற்று பதிவு படிக்க நேரமின்மை காரணமாக இருக்கும்.புத்தக வடிவில் படிப்பது எளிது.நெட்ல மொக்கை தான் பெரிய அளவில் ஆனால் நிலைக்காது, அதுனால நீங்க எழிதிட்டே இருங்க, இனிமேல் நானும் பின்னூட்டம் போடுறேன்
(குடுகுடுப்பை)

இளைய பல்லவன் said...

//
வருங்கால முதல்வர் கூறியது...
தொடர்ந்து எழுதுங்க, வரலாற்று பதிவு படிக்க நேரமின்மை காரணமாக இருக்கும்.புத்தக வடிவில் படிப்பது எளிது.நெட்ல மொக்கை தான் பெரிய அளவில் ஆனால் நிலைக்காது, அதுனால நீங்க எழிதிட்டே இருங்க, இனிமேல் நானும் பின்னூட்டம் போடுறேன்
(குடுகுடுப்பை)

//

நன்றி வருங்கால முதல்வர் குடுகுடுப்பை அவர்களே.

ரமேஷ் said...

நல்லா எழுதுங்க. தொடர்ந்து எழுதுங்க.

வாழ்த்துக்கள்.