முன்குறிப்பு:- என் பதிவை யாரும் 'ஹேக்' செய்யவில்லை. நான் தான் என் கம்பெனியால் ஹேக் செய்யப்பட்டுள்ளேன்! சில காலம் இந்த உப்புமா பதிவுகளைப் பொறுத்துக்கொள்ளுங்கள்!!
ரவை உப்புமா போன்ற செய்வதற்கு எளிமையான உணவு இதுவரை எதுவும் இல்லை. அதை டேஸ்டி (?!)யாக எப்படி செய்வதென்று பார்ப்போம்.
முதலில் ரவை உப்புமா செய்யத் தேவையான பாத்திரங்கள், உபகரணங்கள்.
1. வாணலி
2. கரண்டி
3. கத்தி (காய்கறிகளை நறுக்க)
4. காய்கறி நறுக்கும் பலகை
5. தட்டு - இரண்டு, மூன்று
இனி ரவை உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்.
1. பாம்பே ரவை - 200 கிராம்
2. வெங்காயம் - பெரியது 1
3. தக்காளி - மீடியம் 1
4. உருளைக்கிழங்கு - மீடியம் 1
5. கேரட் - சிறியது 1
6. பச்சைப் பட்டாணி - கொஞ்சம்.
7. பச்சை மிளகாய் - 2 - 3
8. இஞ்சி - 1 துண்டு
9. கருவேப்பிலை
10. கொத்தமல்லி
தாளிக்க
1. கடுகு
2. கடலை பருப்பு
3. உளுத்தம் பருப்பு
4. பெருங்காயம்
5. ரீஃபைண்டு ஆயில்
6. உப்பு - தேவையான அளவு
7. தண்ணீர் - ரவையின் அளவைப்போல் இரண்டிலிருந்து இரண்டரை பங்கு
செய்முறை.
பார்ட் 1.
1. வாணலியை அடுப்பில் வைக்கவும்.
2. அடுப்பைப் பற்ற வைக்கவும்.
3. சிறிதளவு எண்ணெயை விடவும்.
4. ரவையைக் கொட்டி கிளறி வறுக்கவும்.
5. சற்று சிவப்பாக வரும் போது அதை ஒரு தட்டில் ஆர வைக்கவும்.
6. அடுப்பை அணைக்கவும்.
பார்ட் 2
1. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
4. பச்சைப்பட்டாணியை உரித்து வைத்துக்கொள்ளவும்.
5. பச்சை மிளகாயை 'ஸ்லிட்' செய்து வைத்துக்கொள்ளவும்.
6. இஞ்சியை தோல் சீவி சிறிய சைசில் கட் செய்யவும். அல்லது 'கிரேட்' செய்யலாம்.
7. கருவேப்பிலை, கொத்தமல்லையை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
பார்ட் 3
1. அடுப்பைப் பற்ற வைக்கவும்.
2. வாணலியை அடுப்பின் மேல் வைக்கவும்.
3. எண்ணெயை விடவும்.
4. எண்ணெய் சூடானவுடன் கீழ்கண்ட வரிசையில் பொருட்களை எண்ணெயில் போடவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு.
5. இவை சற்று பொன்னிறமாக வதங்கியபின், உருளைக்கிழங்கையும், கேரட்டையும் சேர்க்கவும்.
6. தண்ணீர் விடாமல் வதக்கவும்.
7. பட்டாணி சேர்க்கவும்.
8. தக்காளி சேர்த்து வதக்கவும்.
9. இவை அனைத்தும் ஒரு பதமாக திரண்டு வரும் போது, தண்ணீரை விடவும். கருவேப்பிலை, கொத்தமல்லியையும் சேர்க்கவும்.
10. தண்ணீர் கொதிக்கும் போது, ரவையை மெதுவாக விட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் கட்டி கட்டிவிடும்.
11. அடுப்பை சிம்மில் வைத்து மேலே ஒரு தட்டு போட்டு மூடி, ஆவியில் வேக வைக்கவும்.
இறக்கினால் சூடான ரவை உப்புமா தயார்.
இது கிச்சடி அல்ல. கிச்சடிக்கு, மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இது வெஜிடபுள் உப்புமா. இதற்கு சர்க்கரை தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். ஊறுகாய், சட்னி, சாம்பார் என்ற ஆர்டரில் தொட்டுக்கொள்ளலாம்.
மிகவும் டேஸ்டியான ஐட்டம்!!
16 comments:
//ஊறுகாய், சட்னி, சாம்பார் என்ற ஆர்டரில் தொட்டுக்கொள்ளலாம்.//
என் சாய்ஸ் ஊறுகாய். காரம் அதிகமாயிருந்தா வாழைப்பழம்.
இவ்வளவு எளிமையாகவா?
அண்ணி இன்னும் ஊர்லயிருந்து வரல போலயே... :)
@ சின்ன அம்மிணி said...//
உப்புமாவுக்கு வாழைப்பழமா
புதுசா இருக்கே!!
//
SUREஷ் (பழனியிலிருந்து) said...
இவ்வளவு எளிமையாகவா?//
தல இதுல எதாச்சும் உள்குத்து இருக்கா??
// ☀நான் ஆதவன்☀ said...
அண்ணி இன்னும் ஊர்லயிருந்து வரல போலயே... :)//
எனக்கெல்லாம் அவ்வளவு கஷ்டம் வக்கமாட்டாங்க. ஒரு நாள் ரெண்டு நாளைக்கு மேலே தனியா விட்டதில்ல!
அரிசி உப்புமா-ரவை உப்புமா. வேறுபாடு காணுக!
சாஸ் தொட்டு உப்புமா சாப்பிட்டிருக்கீங்களா? அதுவும் ரவைக்கு செமயா இருக்கும்!
//
pappu said...
அரிசி உப்புமா-ரவை உப்புமா. வேறுபாடு காணுக!
//
அடுத்த பதிவுக்குத் தலைப்பு!!!
//
சாஸ் தொட்டு உப்புமா சாப்பிட்டிருக்கீங்களா? அதுவும் ரவைக்கு செமயா இருக்கும்!
//
என் பையன் சாப்பிடுவான் (அவனுக்கு எட்டு வயது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)
//என் சாய்ஸ் ஊறுகாய். காரம் அதிகமாயிருந்தா வாழைப்பழம்.//
எங்க வீட்டு அம்மிணிக்கு டிப்ஸ் கொடிக்கலாமேன்னு வந்தா சின்ன அம்மணி சேச்சி எந்தா பறயனு:)
உப்புமா காரமா!அவ்வ்வ்வ்வ்வ்!அது கூட வாழைப்பழம் கூட்டா!அவ்வ்வ்வ்வ்
(மலையாளம் பறஞ்ச காரணம் எனிக்கு புட்டு ஞாபகம் வந்தில்லோ:))
பார்ட் 3 செய்து முடித்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டுமா அலல்து அப்படியே விட்டு விடலாமா? இது விஷயமாக பதிவில் எந்த தகவலும் இல்லாததால் உப்புமா செய்யாமல் காத்திருக்கிறேன். . தயவு செய்து உடனே சொல்லுங்கள்.
அப்பா சூப்பர் விளக்கம், நல்ல டிரெயினிங்க் தான் ஹிஹி
வாங்க ராஜ நடராஜன்
மலையாளத்திலயெல்லாம் பறையறீங்களே!! நன்னி நன்னி!!
வாங்க கல்யாண்,
///
பார்ட் 3 செய்து முடித்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டுமா அலல்து அப்படியே விட்டு விடலாமா? இது விஷயமாக பதிவில் எந்த தகவலும் இல்லாததால் உப்புமா செய்யாமல் காத்திருக்கிறேன். . தயவு செய்து உடனே சொல்லுங்கள்.
///
அவ்வ்வ். இவ்வளவு உன்னிப்பா கவனிப்பீங்கன்னு தெரியலையே>>
அடுப்பை அணைச்சா சுட்டுடும்..
அதனால ஆஃப் பண்ணிடுங்க.
//
Jaleela said...
அப்பா சூப்பர் விளக்கம், நல்ல டிரெயினிங்க் தான் ஹிஹி
//
சொந்த முயற்சியா இருக்கக் கூடாதா??
Ama Uppuma Epdi sapidarathunu Sollave illiye...
இளைய பல்லவன்,
அடுத்த சக்கர வியூகம் தொடர் எப்போது வருகிறது? ஆவலாக இருக்கிறோம்..
Post a Comment