Friday, October 30, 2009

நானும் தீபாவளியும் . . .

ஒரு முன் குறிப்பு:- இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உண்மையாகவே உண்மையான பதிலைத் தரவேண்டுமா என்பது என் கேள்வி. இதற்கு யாராவது பதில் தந்தால் பரவாயில்லை.

இனி....


1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

வயது-37, திருமணம் ஆகி இரு குழந்தைகள். காஞ்சிபுரம் சொந்த ஊர். பிழைப்புக்காக விசாகப்பட்டினம், ஆக்ரா, புதுவை, திருச்சி என்று சுற்றி இப்போது சென்னையில் நிரந்தர வாசம்.

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

என் தலை தீபாவளிதான். ஒரு முக்கியமான தேர்வு இருந்ததால், தலை தீபாவளிக்கு முதல் நாள் இரவு 9 மணிக்கு மாமியார் வீட்டுக்குச் சென்று விட்டு தீபாவளி காலை 7 மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிட்டேன் :((!.



3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

வேறெங்க தருமமிகு (?!) சென்னையில்தான்!


4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

எல்லா ஊரையும் போல் இங்கும் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். பட்டாசு வெடித்து, பலகாரம் தின்று, படங்களைக் கண்டு, பட்டாடை உடுத்தி...


5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

நங்க நல்லூரிலேயே சிவன்மலை ஆண்டவர் ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை இருக்கிறது. துணி வகைகள் திருப்தியாக இருக்கின்றன. அங்கே வாங்கி வி.எஸ் டைலர்ஸ் என்ற கடையில் காற்சட்டை தைக்கக் கொடுத்தேன். சட்டை மட்டும் ரெடிமேட். ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சில் ஒன்றுக்கு இரண்டு ஆஃபரில் எடுத்தது. பேண்ட் வகைகள் ஜெயச்சந்திரன், போத்தீஸ், சரவணா, மற்றும் இதர பெரிய கடைகளில் நன்றாக இருப்பதில்லை என்பது என் கருத்து. சென்ற வருடம் திருச்சியில் இருந்த போது சாரதாஸில் துணிகள் எடுத்தோம். எனக்குத் தெரிந்து மிக நல்ல நாணயமான கடை திருச்சி சாரதாஸ்தான்.


6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

அம்மணி செய்தது முள்ளு முறுக்கும், குலோப் ஜாமூனும். வாங்கியது ஜாங்கிரி. வந்தவை மிக்சட் ஸ்வீட்ஸ். கம்பேனியில் தந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸின் முந்திரி கேக் (காஜூ கத்லி)



7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

நேரில், மின்னஞ்சல், தொலைபேசி, குறுஞ்செய்தி, வாழ்த்து அட்டை அனைத்திலும் தெரிவித்தேன்.


8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. குழந்தைகளின் நலன் கருதி கேபிள் இணைப்போ, டி.டி.எச் ஓ வாங்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. எங்களுக்கும், குழந்தைகளுக்கும் பழகிவிட்டது. பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. ஆகவே தொலைக்காட்சியில் தொலையும் தொல்லை இல்லை. கோவிலுக்கும் உறவினர்கள் இல்லத்திற்கும் வழமையாகச் செல்வது உண்டு.



9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

இதுவரை நேரடியாக உதவி செய்யும் வாய்ப்பு வரவில்லை :((



10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

சுரேஷ் (பழனியிலிருந்து)
- எப்போது தொடர் அழைப்பு வந்தாலும் நான் உடனே அழைப்பது இந்த மருத்துவரைத்தான்!!

இராகவன், நைஜீரியா - என் துறையைச் சார்ந்தவர்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

19 comments:

☀நான் ஆதவன்☀ said...

//அம்மணி செய்தது முள்ளு முறுக்கும், குலோப் ஜாமூனும். வாங்கியது ஜாங்கிரி. வந்தவை மிக்சட் ஸ்வீட்ஸ். கம்பேனியில் தந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸின் முந்திரி கேக் (காஜூ கத்லி)///


அண்ணிகிட்ட சொல்லிவைங்க உங்கள பார்க்க வரும் போது இதெல்லாம் கிடைக்கனும் சொல்லிபுட்டேன் :)

☀நான் ஆதவன்☀ said...

//
நேரில், மின்னஞ்சல், தொலைபேசி, குறுஞ்செய்தி, வாழ்த்து அட்டை அனைத்திலும் தெரிவித்தேன்.//

அட!

☀நான் ஆதவன்☀ said...

//எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. குழந்தைகளின் நலன் கருதி கேபிள் இணைப்போ, டி.டி.எச் ஓ வாங்கவில்லை. //

அடடா!!!! ரொம்ப நல்ல காரியம் பல்லவன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உண்மையாகவே உண்மையான பதிலைத் தரவேண்டுமா என்பது என் கேள்வி//

நல்ல கேள்வி.., தேர்வில் சிறந்த பதிலை தரவேண்டும் என்றே எங்களை தயார் படுத்தி இருக்கிறார்கள். சரியான பதிலைத் தரவேண்டும் என்று ஆரம்ப வகுப்புகளில்தான் சொல்லி இருக்கிறார்கள்.

இராகவன் நைஜிரியா said...

வணக்கம் தலைவா. நல்லா இருக்கீங்களா.

அடுத்த இடுகைக்கு வழி செய்து கொடுத்த நீர் வாழ்க, நிம் கொற்றம் வாழ்க.

இன்னும் இரண்டு நாளில் போட்டுவிடுவோம்.

இராகவன் நைஜிரியா said...

// இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உண்மையாகவே உண்மையான பதிலைத் தரவேண்டுமா என்பது என் கேள்வி. //

நீங்க பட்டய கணக்கர் என்பதை நாங்க ஒத்துகிட்டோம். அதுக்காக கேள்வி கேட்கும் போது நீங்க கேள்வி கேட்கக் கூடாது. பதில் தான் சொல்லணும்.. அவ்..அவ்....

இராகவன் நைஜிரியா said...

// வயது-37, திருமணம் ஆகி இரு குழந்தைகள். காஞ்சிபுரம் சொந்த ஊர். பிழைப்புக்காக விசாகப்பட்டினம், ஆக்ரா, புதுவை, திருச்சி என்று சுற்றி இப்போது சென்னையில் நிரந்தர வாசம். //

கூடவே பட்டய கணக்கர் என்பதை சொல்லாம விட்டுடீங்களே.

இராகவன் நைஜிரியா said...

// என் தலை தீபாவளிதான். //

இந்த வருஷம் கொண்டாடியது எந்த தீபாவளிங்க... கை வரை வந்துட்டீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// வேறெங்க தருமமிகு (?!) சென்னையில்தான்! //

தருமமிகு - கேள்விகுறி போட்டது சரி.. அது என்ன ஆச்சர்யகுறி..

CA Venkatesh Krishnan said...

//அண்ணிகிட்ட சொல்லிவைங்க உங்கள பார்க்க வரும் போது இதெல்லாம் கிடைக்கனும் சொல்லிபுட்டேன் :)//
ஆதவன், அப்ப இதெல்லாம் ரொம்ப பழசாயிருமே !! பரவால்லையா??

CA Venkatesh Krishnan said...

//
//
நேரில், மின்னஞ்சல், தொலைபேசி, குறுஞ்செய்தி, வாழ்த்து அட்டை அனைத்திலும் தெரிவித்தேன்.//

அட!
//

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா, சிலருக்கு ரெண்டு மூணு விதமா...ஆனா யாருக்கும் எல்லாவிதமாவும் இல்ல..

CA Venkatesh Krishnan said...

//
அடடா!!!! ரொம்ப நல்ல காரியம் பல்லவன்//

நன்றி !!!

CA Venkatesh Krishnan said...

//சுரேஷ்...
நல்ல கேள்வி.., தேர்வில் சிறந்த பதிலை தரவேண்டும் என்றே எங்களை தயார் படுத்தி இருக்கிறார்கள். சரியான பதிலைத் தரவேண்டும் என்று ஆரம்ப வகுப்புகளில்தான் சொல்லி இருக்கிறார்கள்.
//

வாங்க தல. நச்- னு சொல்லிக்கொடுத்திருக்காங்க..

CA Venkatesh Krishnan said...

இராகவன் சார்,, வாங்க வாங்க..

//நீங்க பட்டய கணக்கர் என்பதை நாங்க ஒத்துகிட்டோம். அதுக்காக கேள்வி கேட்கும் போது நீங்க கேள்வி கேட்கக் கூடாது. பதில் தான் சொல்லணும்.. அவ்..அவ்....//

என்ன பண்றது? அப்படி போட்டு நம்மள மூளைச்சலவை செஞ்சுப்புட்டாங்க. (பதில் சொல்லும் போது கூட கேள்வி கேளு)

CA Venkatesh Krishnan said...

//கூடவே பட்டய கணக்கர் என்பதை சொல்லாம விட்டுடீங்களே.//

எல்லாம் ஒரு அவையடக்கம்தான்!!!

CA Venkatesh Krishnan said...

//இந்த வருஷம் கொண்டாடியது எந்த தீபாவளிங்க... கை வரை வந்துட்டீங்களா?//

அதுக்குள்ள 'கை'யா? இப்பதான் தோள் வரை வந்திருக்கு..

CA Venkatesh Krishnan said...

//
தருமமிகு - கேள்விகுறி போட்டது சரி.. அது என்ன ஆச்சர்யகுறி..
//

தருமமிகுவா என்ற கேள்வியில் ஆச்சரியமும் தொக்கி நிற்பதைக் காண்க!!

இராகவன் நைஜிரியா said...

அண்ணே உங்க அழைப்பை ஏற்று இடுகைப் போட்டாச்சு... வந்துப் பாருங்க

ஊர்சுற்றி said...

:) நங்கநல்லூரிலா இருக்கிறீர்கள்! நாங்கள் அங்கு திரைப்படம் பார்க்க அவ்வப்போது வருவது உண்டு.