Sunday, February 28, 2010

வழக்கம் போல்....

வழக்கம் போல் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைந்து கொண்டிருக்கிறான்.

வழக்கம் போல் நிலவு வளர்ந்து தேய்ந்து வருகிறது

வழக்கம் போல் புவி தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது

வழக்கம் போல் தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும், மொழி,மத,பிராந்திய வெறியர்களும் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வழக்கம்போல் விலைவாசி உயர்ந்துகொண்டேஏஏஏஏஏஏ இருக்கிறது.

வழக்கம் போல் மன்மோகன்சிங் கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறார்

வழக்கம் போல் சிதம்பரம் கடைசிக் கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

வழக்கம் போல் கலைஞருக்கும், அம்மையாருக்கும் அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

வழக்கம்போல் போக்குவரத்து நெரிசலில் சென்னை சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

வழக்கம்போல் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வழக்கம்போல் பதிவுலகில் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.


அட..

எல்லாமே வழக்கமாக இருக்கும் போது நான் மட்டும் மாறினால்?

அதனால்தான்..


வழக்கம் போல் . . .

நான். . .

பதிவுகளைத் தொடர்ந்து தராமல் இருக்கிறேன்.

14 comments:

அண்ணாமலையான் said...

ஏன் ஏன் இப்டி? தாங்கலே

Rajkumar said...

வழக்கம் போல் நாங்களும் வந்து செல்கிறோம்.
வல்லாளனையும், பாண்டியனையும் காணாமல் கொஞ்சம் கனத்து நிற்கிறோம்.

சீக்கிரம் வாங்க.

Jerry Eshananda said...

ரசித்தேன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வழக்கம்போல் பதிவு மிக அருமை :-)

☀நான் ஆதவன்☀ said...

Elango said...

வழக்கம் போல் நாங்களும் வந்து செல்கிறோம்.
வல்லாளனையும், பாண்டியனையும் காணாமல் கொஞ்சம் கனத்து நிற்கிறோம்.

சீக்கிரம் வாங்க.


ரிப்பீட்டே :)))

சீக்கிரம் வாங்க தலைவரே

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வெல்க நாடு..,

Prabhu said...

வொய்? வொய் மி?

CA Venkatesh Krishnan said...

//
அண்ணாமலையான் said...

ஏன் ஏன் இப்டி? தாங்கலே
//

அப்டீன்றீங்க???

சரி இனிமே வேற மாதிரி பண்ணுவோம்.!

CA Venkatesh Krishnan said...

//
Elango said...

வழக்கம் போல் நாங்களும் வந்து செல்கிறோம்.
வல்லாளனையும், பாண்டியனையும் காணாமல் கொஞ்சம் கனத்து நிற்கிறோம்.

சீக்கிரம் வாங்க.
//

நன்றி இளங்கோ! தயவு செய்து மன்னியுங்கள். அடுத்த முறை இரண்டாம் பாகம் முழுவதும் பதிவேற்றிவிடுகிறேன்.

CA Venkatesh Krishnan said...

Blogger ஜெரி ஈசானந்தா. said...

ரசித்தேன்.//

நன்றி!!

CA Venkatesh Krishnan said...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வழக்கம்போல் பதிவு மிக அருமை :-)
//

வழக்கம்போல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல

CA Venkatesh Krishnan said...

☀நான் ஆதவன்☀ said...

Elango said...
ரிப்பீட்டே :)))

சீக்கிரம் வாங்க தலைவரே
//


//நன்றி இளங்கோ! தயவு செய்து மன்னியுங்கள். அடுத்த முறை இரண்டாம் பாகம் முழுவதும் பதிவேற்றிவிடுகிறேன்.//

ரிப்பீட்டே!!!
(பின்னூட்டத்திற்கு முதல் முறையாக பதிலை ரிப்பீட்டியவன் நானாகத்தான் இருப்பேன்!!)

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் (பழனியிலிருந்து) said...

வெல்க நாடு..,
//

என்னாச்சு தல?!?!

CA Venkatesh Krishnan said...

pappu said...

வொய்? வொய் மி?//

வொய்? வொய் நாட் யூ?