Tuesday, August 24, 2010

நாட்டாமைகள் - கதை

ஒரு ஊர். அதில் இரு பங்காளிக் குடும்பங்கள். அவர்கள் தான் அந்த ஊர் நாட்டாமைகள். சின்ன நாட்டாமை இறந்துவிட பெரிய நாட்டாமை தம்பியின் நாட்டாமைத் தனத்தையும் சேர்த்து கவனித்து வருகிறார். தம்பியின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்குரிய நாட்டாமை உரிமையை அளித்து விடுகிறார்.

இதில் பெரிய நாட்டாமையின் மகனுக்கு ஏக பொறாமை. எப்படியாவது சித்தப்பா மகன்களை ஏமாற்றி அவர்களுடைய நாட்டாமையைப் பறித்துவிடவேண்டுமென்று தன் தாய்மாமனுடன் சதிசெய்கிறான். அதன் படி அவர்களை ஏமாற்றி ஊரை விட்டுத் துரத்தியும் விடுகிறான்.

காலங்கள் பல கடந்த பின், மீண்டும் ஊருக்குத் திரும்பும் தம்பி பிள்ளைகள், தங்கள் நாட்டாமைத்தனத்தைக் கேட்கின்றனர். ஆனால் பெரிய நாட்டாமையின் மகன் அவர்களை அவமானப்படுத்தி விடுகிறான். ஊரில் சிலர் சின்ன நாட்டாமையின் மகன்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

சமரசம் செய்ய ஒரு ஜகஜால கில்லாடி வருகிறார். அவருக்கும் அல்வா கொடுக்கிறான் பெரிய நாட்டாமையின் மகன். இனி பேசிப்பயனில்லை என்று சண்டைக்கு அழைக்கின்றனர் சின்ன நாட்டாமையின் மகன்கள். ஜகஜால கில்லாடி இவர்கள் பக்கம்.

இந்த ஜஜாகியின் தில்லாலங்கடி வேலைகள் மூலமாக சின்ன நாட்டாமையின் மகன்கள் பெரிய நாட்டாமையின் மகனையும் மற்றவர்களையும் அழித்து விடுகின்றனர். பெரிய நாட்டாமை, மகன் இறந்த துயரத்தில் ஊரை விட்டே சென்று விடுகிறார்.

இறுதியில் மொத்த ஊரும் சின்ன நாட்டாமையின் மகன்களின் கட்டுப்பாட்டில் வருகிறது.

பி.கு:- கதையைப் படித்து விட்டு தயை கூர்ந்து உங்கள் விமர்சனங்களை பின்னூட்டங்களாகத் தெரிவிக்கவும். இந்தக் கதையை திரைப்படமாக எடுக்க விரும்புவோர்க்கு திரைக்கதை அமைத்துத் தரப்படும்!

6 comments:

sriram said...

மகா பாரதத்தின் காப்புரிமையை வியாசர் வாங்காம விட்டதின் பலன் இது.

அப்புறம், உங்க கிட்ட யாராவது திரைக்கதை எழுதக் கேட்டு நீங்க எழுதினால், கர்ணன் வேசம் எனக்கு வாங்கிக் கொடுங்க.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

CA Venkatesh Krishnan said...

அய்யா சாமி,

இப்படி மொதல்லயே போட்டு ஒடச்சிட்டீங்கன்னா நான் எங்க போறது.

எல்லா கதையிலயும் மகாபாரதத்தின் சாயல் இருப்பதை மறக்கவே முடியாது..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மாத்ரியின் காதல்.,


வியாசர் பிறந்த கதை இதெல்லாம் பட்டையக் கிளப்பும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அது விதுரர்.,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

விதுரர் வில் உடைத்த கதை,

விதுரர் போர்காட்சிகளை மன்னருக்கு விளக்கும் கதை


குருடனுக்கு கட்டிவைத்ததால் வெறுத்துப் போய் உலகத்தையே பார்க்க மறுத்த காந்தாரியின் கதை,


அண்ணன்களை கொன்றவர்களின் வம்சத்தை அழித்த தம்பியின் கதை,

CA Venkatesh Krishnan said...

tteesstt