Monday, August 30, 2010

இளைய பல்லவன்:- முடிவில்லா மௌனத்தின் மொழி. . .


உள்ளே உறங்கா
மௌனம்...
பேசாமல் பேசும்
கவனம்...

எண்ணங்கள் . . .
வார்த்தை உலகின்
வார்த்திடாத வண்ணங்கள் . . .

அவை..
உள்ளே உறங்கா மௌனம்
காலம் தொடாத கோலம்...


பார்வையின் வழியே பயணம் - யாரும்
பார்த்திட முடியாத ஜனனம் . . .
கேள்வியின் முடிவில் மீளாத பதிலின்
அடிநாத சலனம். . .

அது..
உள்ளே உறங்கா மௌனம்
காற்றும் புகாத உலகம்..


மீண்டும் ஒரு கவிதை! (முயற்சி)

2 comments:

CA Venkatesh Krishnan said...

டெஸ்ட்

ADMIN said...

மௌனத்தின் மொழி மகிழ்ச்சி அளிக்கிறது.

நல்லதொரு கவிதை தந்தமைக்கு வாழ்த்துகள்..