Wednesday, September 24, 2008

ஆர்டிகிள்ஸ் கழிஞ்ஞு . .(உனக்கு 24, எனக்கு 21)

சி. ஏ. முடிக்க வேண்டும் என்றால், ஒரு ஆடிட்டரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டே தேர்வையும் எழுத வேண்டும். இந்தப் பயிற்சிக்குப் பெயர்தான் ஆர்டிகிள்ஸ் ஷிப். சுருக்கமாக ஆர்டிகிள்ஸ்.

இந்தக் கதைக்கான காலம் 90களின் பிற்பகுதியின் முற்பகுதி ! ! !

அப்போது +2 முடித்து விட்டு நேரடியாக சி.ஏ. சேரலாம் (ஃபவுன்டேஷன் என்று பெயர்)என்றிருந்தாலும் பெரும்பாலும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுத்தான் சி.ஏ. வில் சேர்வார்கள். சேரும் போது 20 - 21 வயது என்றால், ஆர்டிகிள்ஸ் முடிக்கும் போது 23-24 வயது இருக்கும். சி.ஏ. முடிப்பது அவரவர் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

சி.ஏ. படிக்க சிறந்த பயிற்சிப் பள்ளிகள் தென்னிந்தியாவில் சென்னையில்தான் உள்ளன. இங்கு பயிற்சி எடுக்க தங்கத்தமிழ் மகன்கள் மட்டுமின்றி, மனவாடுலு, சேட்டன்கள், கன்னடர்களோடு (இவர்களை எப்படி அன்புடன் விளிப்பது?), ஒரிசாவில் இருந்தும் மக்கள் வருவார்கள்.

அதே போல, தமிழ் நாட்டுத் தேவதைகள், சுந்தரத் தெலுங்குக் குயில்கள், சேர நன்னாட்டிளம் பெண்கள் மற்றும் கன்னடத்துப் பைங்கிளிகளும் உலா வருவார்கள். இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தினால் கொஞ்ச நஞ்ச சி.ஏ. பாஸும் ஃபணால் தான் என்பதால் மக்களும் சைடு கேப்பில் ஒரு லுக் விட்டு விட்டு பாடத்தைத் தொடர்வார்கள்.

எங்களது குழுவில் ஒருவன் (நான் அல்ல) அப்படிப்பட்ட பயிற்சிப் பள்ளியில் நாங்கள் படிக்கும் போது, ஒரு சேச்சியை மானசீகமாகக் காதலித்தான். அவன் அந்த வருடம் தான் காலேஜ் பாஸ் அவுட். இத்தனைக்கும் போகும் போதும் வரும் போதும் ஒரு புன்னகை ஃப்ரம் சேச்சி. அவ்வளவே.

'டேய் மச்சான், இன்னிக்கி எப்படியாவது டாபிக்கை ஓப்பன் பண்ணிரனும்டா' - நன்பண் (ந)

'இது வரைக்கும் ஒரு ஹலோவாவது சொல்லியிருக்கியா? இப்படி நேரடியா ஓப்பன் பண்ணா, இமேஜ் என்னடா ஆகும்?' - நண்பனின் நண்பர்கள் (ந ந).

'அப்போ ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேண்டா' - ந

'மொதல்ல போய் இன்ட்ரொடியூஸ் ஆயிக்க. அப்பறமா பில்டப் பண்ணு.' - ந. ந.

'சரி பாக்கலாம். குருவாயூரப்பா, காப்பாத்தப்பா' - ந.

நண்பன் ஒரு வழியாக சேச்சியிடம் சென்று கனெக்ஷன் செட் செய்து விட்டான்.

சேச்சிக்கு எர்ணாகுளம். என்பது முதல் தகவல்.

அடுத்த நாள் நண்பன் அவசரமாக ஊருக்குச் சென்று விட்டு, ஒரு வாரம் கழித்து தான் வந்தான்.

'மச்சான், என் ஆளு கிட்ட நோட்ஸ் வாங்கப் போறேன்டா' - ந.

'டேய். அவள விட நான் நல்ல நோட்ஸ் வச்சிருக்கண்டா' - நான்.

'இதெல்லாம் ஒரு பில்டப் டெக்னிக்குடா' - ந.

'ஓ கே, ஓ கே, கேரி ஆன்' - ந.ந.

சேச்சி வந்ததும்,

'ஹாய். குட் மார்னிங்க்' - ந.

'ஹாய். குட் மார்னிங்க்' - சே.

'க்ளாசெல்லாம் நல்லா போயிட்டிருக்கில்ல. ஒரு அர்ஜன்ட் வேலையா ஊருக்குப் போயிட்டதனால க்ளாசுக்கு வரமுடியல. உங்க நோட்ஸ தர்ரீங்களா? காபி பண்ணிட்டு குடுத்துர்றேன்?'. - ந.

'ஓ கே. இன்னிக்கு க்ளாஸ் முடிஞ்சதும் வாங்கிக்கங்க' - சே.

'ரெம்ப தேங்க்ஸ். நீங்க ரொம்ப யங்கா இருக்கீங்க. ஃபவுன்டேஷனா? ஆர்டிகிள்ஸ் சேர்ந்துட்டீங்களா?' - ந.

'நோ நோ. ஞான் எம்.காம் - ஆணு. எனக்கு ஆர்டிகிள்ஸ் கழிஞ்ஞு' - சே
மீ த எஸ்கேஏஏஏஏப்ப்ப்ப்ப் (மனசுக்குள் நண்பன்)

'ஓ. ..ஓ... ஓ...' - ந.

'ஓ. . . ஹோ. . .' - ந.ந.

7 comments:

புதுகை.அப்துல்லா said...

:0)

குடுகுடுப்பை said...

அவரு யாரு கிலிம்பரசனா

nathas said...

:)

இளைய பல்லவன் said...

//
புதுகை.அப்துல்லா கூறியது...
:0)
//

வாங்க புதுகை அப்துல்லா

வாய் விட்டு சிரிச்சதுக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவைத் தந்து கொண்டிருங்க.

இளைய பல்லவன் said...

//

குடுகுடுப்பை கூறியது...
அவரு யாரு கிலிம்பரசனா
//

வாங்க குடுகுடுப்பை

கிலம்பரசனா என்றுதானே கேட்க வந்தீர்கள்?!

இவருக்கு அவ்வளவு தைரியம் இல்ல.

இவர் வேற.

இளைய பல்லவன் said...

//
nathas கூறியது...
:)
//

வாங்க நாதஸ்,

சிரிப்புக்கு நன்றி.

Anonymous said...

வணக்கம்,
சிறூகதை மிக நன்றாக உள்ளது
ஸூபா.