Saturday, November 7, 2009

பதிவர்களைப் பாதிக்கும் பயங்கர நோய்கள் . . . 2

அன்புள்ள பதிவுலகக் குடிமக(ன்/ள்)களே!, பதிவுலகில் நுழைய எழுதும் தகுதியோ எண்ணும் தகுதியோ இருந்தால் மட்டும் போதாது. இங்கே இருக்கும் பயங்கர நோய்களை எதிர் கொள்ளும் திறமையும் வேண்டும்.

சென்ற பதிவில், பின்னூட்டஃபோபியா, ஃபாலோமேனியா, நட்சத்திரைடீஸ், ஹிட்டீரியா, முதலிய நோய்களைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தப் பதிவில், சூடெங்கு, சர்ச்சையோபியா, தொடரோயன்சா, பிரபலூ போன்றவற்றைப் பற்றி பார்ப்போம்.




சூடெங்கு:-


இந்த நோய் இப்போது அழிக்கப்பட்டுவிட்டது!. கடந்த ஆறு மாதங்களுக்குள் பதிவுலகிற்குள் நுழைந்தவர்களுக்கு இந்த நோயைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதாவது, தமிழ்மணம் திரட்டியின் இடது ஓரத்தைக் கவனித்திருப்பீரேயானால் அது வாசகர் பரிந்துரை என்று காட்டும். அங்கே மதிப்பெண்களும் வழங்கப்பட்டிருக்கும். சிலகாலத்திற்கு முன்பு வரை அங்கே "சூடான இடுகைகள்" என்ற பகுதி இருந்ததை பழைய பதிவர்களால் மறக்கவே முடியாது. அந்த சூடான இடுகைப் பகுதியில் தன் இடுகையை எப்பாடு பட்டாவது இடம் பெறச் செய்துவிட வேண்டுமென்று நினைக்க வைக்கும் நோயே "சூடெங்கு". இது முழு நேர / முக்கிய பதிவர்களை இயல்பாகவே தாக்கக்கூடியது. மற்றவர்கள் விவகாரமான தலைப்பை வைத்து தனது பதிவுகளை சூடேற்றிக்கொள்வார்கள். பலர், சூட்டுக்காக சூடு போட்டுக்கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறியதை பழம்பெரும் பதிவர்கள் இதைப் படிக்கும் போது நினைத்துக் கொள்வார்கள்!!!

இப்போது இந்த நோய் ஒழிக்கப்பட்டு விட்டதால், புதிய பதிவர்களுக்கு இதன் வீரியம் தெரிய வாய்ப்பில்லை. இப்போது இருக்கும் பரிந்துரையும் முதலில் காமெடியாக ஆரம்பித்ததுதான். ஒரு சிலருக்கு நூற்றுக்கும் மேல் பரிந்துரை எண் வரும்!!. இப்போது இந்த முறை சரி செய்யப்பட்டு விட்டதாக அறிகிறேன்.



சர்ச்சையோபியா:-


நீங்கள் அனைவருமே திருவிளையாடல் (சிவாஜி & கோ) பார்த்திருப்பீர்கள். குறைந்த பட்சம் தருமி எபிசோட்-ஆவது கட்டாயம் பார்த்தோ / கேட்டோ / அறிந்தோ இருப்பீர்கள். அதில் நக்கீரன் என்று ஒரு தாத்தாவுக்கும், சிவாஜி தாத்தாவுக்கும் ஒரு போட்டி வரும். அப்போது முத்துராமன் தாத்தா, "புலவர்களே, சண்டை போடாதீங்க" என்று சமாதானம் பேச வருவார். உடனே சிவாஜி தாத்தா "நாங்கல்லாம் ஒரே ஜாதி, இன்னிக்கி அடிச்சிக்குவோம், நாளைக்கு சேந்துக்குவோம். எங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி.. நீ எட்ட நின்னுக்கோ. இல்லன்னா டரியலாயிடும்" னு சொல்லுவார். முத்துராமன் தாத்தாவோ, மனதிற்குள் "இதுதான் சொ.செ.சூ" போல இருக்குன்ற மாதிரியே பாத்துக்கிட்டு, "எங்களையும் வாழவிடுங்கள்" விலங்குகள் போல போஸ் கொடுப்பார்.

இப்போது எதற்கு இந்தக் கதை என்று கேட்கிறீர்களா? அப்படிக் கேட்டால், நீங்கள் ஒரு அப்பாவி, உங்களுக்கும் பதிவுலகிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. தயவு செய்து இந்தப் பதிவைப் படித்தவுடன் அப்படியே 'அப்பீட்' ஆகிவிடுங்கள்.

மற்றவர்களுக்கு நான் மேற்கொண்டு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சர்ச்சையில் சிக்கி, ஆலையிட்ட கரும்பாக ஆனவர்களும், காணாமல் போனவர்களும் அதிகம் பேர். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், கலைஞர்கள்தான், பதிவர்கள் அல்ல. பதிவர்கள் வேறு, கலைஞர்கள் வேறு என்பதை பதிவர்கள் புரிந்து கொண்டால், இந்த நோய் மீண்டும் வர வாய்ப்பில்லை. அதற்கு எல்லோரும் "பிளாக்"என்னும் பழம் தந்த கூகிளாண்டவரைப் பிரார்த்தனை செய்வோம்.



தொடரோயன்சா:-


இது ஒரு ஒட்டுவாரொட்டி நோய். ஏதாவது ஒரு தொடர் பதிவு வந்தால் நம்மை யாராவது தொடர அழைக்கமாட்டார்களா என்று ஏங்க வைக்கும். இரண்டு மூன்று சுற்றுக்களிலேயே நாம் முக்கியப்பதிவர்களுக்கு வேண்டப்பட்ட பதிவர்களாகி விட்டோம் என்று எண்ண வைக்கும். தொடர் பதிவு வர ஆரம்பித்த உடனேயே தலைப்பை முடிவு செய்துவிடுவோம். நாம் யோசித்துவைத்திருக்கும் தலைப்பில் யாராவது பதிவு போட்டுவிட்டால் பற்றிக்கொண்டு வந்துவிடும்.

என்னைப் போல் பதிவே போட முடியாதவர்கள் கூட தொடரோயன்சாவால் பாதிக்கப்பட்டு பதிவு போட்டுவிடுவார்கள்! இப்படியாக தொடரோயன்சா அவ்வளவு கடுமையான நோய அல்லவென்றாலும் சற்று பயங்கரமான நோய்தான்.

தொடரைத் தொடராமல் இருந்தால் தொடரோயன்சா உங்களைத் தொடாது!!


பிரபலூ:-


ஸ்வைன் ஃப்லூ என்ற ஒரு வியாதி உலகெங்கிலும் உள்ளவர்களைப் பிடித்து ஆட்டுவது போல், பதிவுலகில் உள்ளவர்களைப் பிடித்து ஆட்டும் ஒரு வியாதிதான் பிரபலூ. இது வந்துவிட்டால் நான் தான் 'பிரபல பதிவர்' என்ற எண்ணம் வந்து விடும். யாராவது 'பிரபல பதிவரே' என்று அழைக்க வேண்டும், மற்றவர்கள் தங்களை விட ஒரு படி கீழேதான், தன்னுடைய கருத்துதான் இறுதி மற்றும் நாட்டாமை தீர்ப்பு என்ற எண்ணங்கள் தானாகத் தோன்றி விடும். இதில் என்ன வேடிக்கை என்றால், பிரபலூ பிடித்தவர்கள், அது ஒரு வியாதியல்ல, பெரிய பட்டம் என்று நினைப்பதுதான்.

மக்களே, பிரபலூ பிடித்துக் கொண்டால் அவ்வளவுதான். உங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச 'கிரியேட்டிவிட்டி'யும் உங்களை விட்டு ஓடிவிடும்.

பிரபலூவுக்கான அறிகுறி இருப்பவர்களிடம் சற்று கவனத்துடன் பழகுங்கள். எட்டி நிற்பது இன்னும் பயன் தரும். இல்லையென்றால் தொற்றிக்கொண்டு விடும். எப்போதும் நாம் பதிவராக இருந்தால் போதும். பிரபலூவை விரட்டி விடுவோம்.

====

இதுவரை உங்களுக்கு பதிவுலகில் நிலவும் பயங்கர வியாதிகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்கு இந்த நோய் இருந்தால் உடனே நான் சொன்ன மருத்துவ முறைகளைக் கையாளுங்கள். நோய்கள் "போயே போச்".

====

வாழ்க தமிழ்ப்பதிவுகள்!

வளர்க தமிழ்ப்பதிவுலகம்!!

ஓங்குக தமிழ்ப்பதிவர்கள் ஒற்றுமை!!!

நீங்குக தமிழ்ப்பதிவுலக நோய்கள்!!!!


20 comments:

சென்ஷி said...

அசத்தல் பதிவு இளைய பல்லவன் :)

சென்ஷி said...

இப்ப புதுசா வந்திருக்கற வோட்டோக்ராஃபி மெத்தட்ல எந்த நோய் வந்திருக்குன்னு கண்டுபிடிச்சுட முடியுமா :))

மணிஜி said...

எனகு அந்த வியாதி இல்லையப்பா.(கொஞ்சம் பொய் சொல்வேன்)

அன்புடன் அருணா said...

தடுப்பூசி கண்டுபிடிச்சாச்சா?

Chittoor Murugesan said...

இந்த பட்டியலில் மேலும் சில வியாதிகளை சேர்க்க விரும்புகிறேன்


பார்ப்பனர்கள் வர்ணாசிரம‌ தருமத்தை ஏதோ ஒரு முகமூடியுடன் இறக்குமதி செய்ய பார்ப்பனர்கள் அ அவர்களால் கொட்டி கொட்டி குளவிகளாக்கப்பட்ட சூத்திரர்களை பதிவு போடச்செய்யும் வியாதி காட்ராக்டியா

பார்ப்பனர்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு புராண இதிகாச , வேதங்களை மேற்கோள் காட்டுவது போல் எழுதும் பதிவுகளுக்கு காரணமான வியாதி
மாதிரி பெரியாரியா

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு அடப்பம் தூக்கிய மத்திய மானில அரசுகளுக்கு ஆதரவாக வாக்குகள் விழுவதை தடுப்பதை கோட்டைவிட்டு அவர்களின் அவதிகள் குறித்து தொடர்பதிவுகள் போடச்செய்யும் வியாதி பார்ஷல் அம்னீஷியா

Prabhu said...

சொ.செ.சூ?

CA Venkatesh Krishnan said...

நன்றி சென்ஷி !!

வோட்டோக்ராஃபி புதுசா இருக்குறதுனால ஆராய்ச்சி தீவிரமா நடந்துக்கிட்டிருக்கு!!!!

CA Venkatesh Krishnan said...

வாங்க தண்டோரா!

பொய்தான் எல்லாரும் சொல்வோமே!! (நான் அப்பப்ப உண்மை சொல்வேன்!)

CA Venkatesh Krishnan said...

வாங்க அருணா!

தடுப்பூசியெல்லாம் இல்ல. செல்ஃப் இம்யூனைசேஷன் தான்!!

CA Venkatesh Krishnan said...

வாங்க சித்தூர் முருகேசன்!

அதப்பத்தியெல்லாம் சொல்லணும்னா பி.எச்.டி. பண்ணியிருக்கணும். நான் கம்பவுண்டர்தான் :((

CA Venkatesh Krishnan said...

வாங்க பப்பூ!

சொ.செ.சூ தெரியாதா!!! அவ்வளவு அப்பாஆஆஆஆவியாஆஆஆஅ நீங்க???

ஹய்யோ ஹய்யோ!

சொ.செ.சூன்னா, சொந்த செலவில் சூனியம்னு அர்த்தம் !!

☀நான் ஆதவன்☀ said...

அட ரெண்டாவதும் சூப்பரா இருக்கு பல்லவன். உங்களுக்கு பதிவுலக டாக்டர் அப்படின்னு பட்டமே கொடுக்கலாம் போலயே :)

CA Venkatesh Krishnan said...

நன்றி ஆதவன்.

பதிவுலக டாக்டர்ன்றதுல்லாம் கொஞ்சம் ஓவர்..

இருந்தாலும் நீங்க கொடுத்தா பெருந்தன்மையா ஏத்துக்கிறேன்.
ஹி.! ஹி.!!

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு ............புதிய பதிவராக இருந்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது

லெமூரியன்... said...

\\வாழ்க தமிழ்ப்பதிவுகள்!

வளர்க தமிழ்ப்பதிவுலகம்!!

ஓங்குக தமிழ்ப்பதிவர்கள் ஒற்றுமை!!!

நீங்குக தமிழ்ப்பதிவுலக நோய்கள்!!!!//

புல்லரிக்க வைக்கறீங்க..!

ஊர்சுற்றி said...

//சென்ஷி said...

அசத்தல் பதிவு இளைய பல்லவன் :)// ரிப்பீட்டேய்....

அருண். இரா said...

கலக்கல்ஸ் மச்சி..!
அருமை அருமை..வாய் விட்டு சிரிச்சேன்..

CA Venkatesh Krishnan said...

நன்றி வெண்ணிற இரவுகள் !

நன்றி லெமூரியன் !

நன்றி ஊர்சுற்றி !

நன்றி அருண்.இரா!

புகழன் said...

அப்பா நல்லவேளை எனக்கு இதுபோன்ற எந்த நோயும் இல்லை
அப்படீன்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தாலும் டாக்டருக்குதானே அது தெரியும்
அதுனால எனக்கு என்ன நோயின்னு ஆய்வு செய்து சொல்லுங்கள் (எங்கிட்ட மட்டும் தனியா)

நிஜமா நல்லவன் said...

/சென்ஷி said...

அசத்தல் பதிவு இளைய பல்லவன் :)/


ரிப்பீட்டேய்ய்ய்ய்.....