பிளாக்கர்கள் என்று செல்லமாக அழைக்கப்படும் வலைப்பதிவர்களாகிவிட்டால் ஒரு சில வியாதிகளும் தொற்றிக்கொண்டுவிடுகின்றன. என்னதான் நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், மனதைத் திடப்படுத்திக்கொண்டாலும், இவை தாக்குவதைத் தடுக்க முடியாது. குறைந்த பட்சம் ஒரு நோயாவது ஒவ்வொரு பதிவரையும் தாக்கியிருக்கும். அனைத்து நோய்களும் தாக்கியவரை முழு நேர பதிவர் என்று அழைக்கலாம்.
பின்னூட்டஃபோபியா, ஃபாலோமேனியா, நட்சத்திரைடீஸ், ஹிட்டீரியா, சூடெங்கு, சர்ச்சையோபியா, தொடரோயன்சா, பிரபலூ போன்றவையே பதிவர்களைத் தாக்கும் பயங்கர நோய்களாகும்!
இவற்றைப் பற்றி ஒரு சிறு குறிப்பு இதோ !!!
பின்னூட்டஃபோபியா:-
தான் எவ்வளவும் மொக்கையாக, படிக்கவே முடியாத பதிவுகளைப் போட்டாலும், குறைந்தபட்சம் நாற்பது கமெண்டுகளாவது வந்து நாற்பது பிளஸ் டேபில் தமது பதிவு வந்து விட வேண்டும் என்று நினைப்பது இந்த மாதிரி போபியா.
கும்மியடிப்போர் இந்த ஃபோபியாவால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். ஒருவர் மற்றவருடன் கூட்டு சேர்ந்து இவர் பிளாக்கில் அவர் பின்னூட்டம் போடுவதும், அவர் பிளாக்கில் இவர் பின்னூட்டம் போடுவதும் நடக்கும். சில நேரங்களில் ஒரே பின்னூட்டத்திற்கு பத்து பதில் பின்னூட்டம் போடும் ஆசையும் தோன்றும்.
அனானியாக வந்து தனக்குத் தானே பின்னூட்டம் இட்டுக்கொள்பவர்களும் உண்டு. இதையே பின்னூட்டக்கயமை அல்லது பின்னூட்ட டுபுரித்தனம் என்று சொல்வார்கள்.
பின்னூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நல்ல பதிவுகள் போட வேண்டும் என்ற தெளிவு பெற்றுவிட்டால் இந்த ஃபோபியா போய் விடும்.
ஃபாலோமேனியா:-
நமது பதிவுகளை தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகள் மூலம் படிப்போர் தவிர்த்து, நமது எழுத்து நடையில் மயங்கி (?!) நம்மை ஃபாலோ செய்பவர்கள் உண்டு. அந்த வகையில் அதிகம் ஃபாலோயர்களைப் பெற்றவர்கள் நன்றாக எழுதுவார்கள் என்ற எண்ணம் பதிவர்களிடையே உண்டு.
அதிகம் ஃபாலோயர்கள் வரமாட்டார்களா என்ற ஏக்கம் அதிகமாக அதிகமாக இந்த மேனியா வந்து துன்புறுத்தும். இங்கேயும் கூட்டுக் கும்மிக்கு இடம் உண்டு. என் ஃப்ரென்ட்சும் நானும் உனக்கு ஃபாலோயர்கள். உன் ஃப்ரென்ட்சும் நீயும் எனக்கு ஃபாலோயர்கள் என்று மாற்றி மாற்றி ஃபாலோவிக்கொள்வார்கள்.
என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன், இப்பொழுதுதான் எனக்கு ஐம்பது ஃபாலோயர்கள் சேர்ந்திருக்கிறார்கள்! இது தேடிப்பிடித்த கூட்டமல்ல, தன்னால் வந்த கூட்டம் என்று கொள்கை முழக்கம் செய்தால் இந்த மேனியா, நம் மேனியை விட்டு ஓடிவிடும்.
நட்சத்திரைடீஸ்:-
தமிழ்மணத்தின் முகப்பில் ஒரு வாரம் நம் பதிவை ஏற்றிவைக்கும் நிகழ்வுக்கு நட்சத்திரம் என்று பெயர். மற்ற திரட்டிகளும் இதைச் செயல் படுத்தினாலும், தமிழ்மண நட்சத்திரம் என்பதன் ரேன்ஜே தனி. எப்படி நட்சத்திரமாக தேர்வு செய்கிறார்கள் என்பது ஜீ பூம்பா ரகசியத்தை விட ரகசியமானது. இதை விமர்சிக்காத பதிவர்களே இல்லை.
பதிவர்கள் எல்லாருக்கும் நாமும் நட்சத்திரமாக வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக இருக்கும். இது ஒரு காமன் (கவனம் தேவை. பொதுவான என்ற கருத்தில் வரும்) நோய்.
சிறுவயதிலேயே (அதாவது பிளாக் தொடங்கி நான்கு மாதங்களுக்குள்ளாகவே ) எனக்கு நட்சத்திரம் போட்டுவிட்டதால் இந்த நோய் என்னை வாட்டாது !
ஹிட்டீரியா:-
நன்றாக கவனிக்கவும். எழுத்துப் பிழை அல்ல. ஹிட்டுகளுக்காக ஏங்கும் மக்கள் நிறைந்த உலகமல்லவா இந்த பிளாக் உலகம்? இது ஒரு பொதுவான வியாதி. ஹிட்டு அதிகமாக அதிகமாக பிட்டு (நல்ல பதிவு) ஓட்டலாம் என்று எண்ணுவோர் பலர். சிலர் பிட்டு (உண்மையான பிட்டு) போட்டால் ஹிட்டு அதிகமாகும் என்றும் நினைப்பர்.
ஹிட்டுக்களை அதிகமாக்கிக்காட்ட பேஜ் ரெஃப்ரெஷ் செய்வோரும் உண்டு. சிலர் ரெஃப்ரெஷ் பட்டன் மீது செங்கல் கூட ஏற்றி வைத்து விடுவார்களாம்! இதுதான் ஹிட்டீரியாவின் உச்சக்கட்டம். இதுவரை லட்சாதிபதிகளும், மில்லியனர்களும் மட்டுமே பிளாக் உலகில் உண்டு. இன்னும் கோடீஸ்வரர்கள் உருவாகாத ஏழை உலகம் பிளாக் உலகம்:((
ஹிட்டீரியா அதிகமாகும் போது சிலருக்கு ஹிட் கவுண்டர் (சரியாகப் படிக்கவும், சாதிப்பெயர் அல்ல) மேலேயே சந்தேகம் வந்துவிடும். அத்தகையோர் இரண்டு மூன்று ஹிட் கவுண்டர்களை சேர்த்துவிடுவார்கள்!
ஹிட் கவுண்டரை இழுத்து மூடுவதே இந்த நோய்க்கு சிறந்த மருந்து.
மற்ற நோய்களான, சூடெங்கு, சர்ச்சையோபியா, தொடரோயன்சா, பிரபலூ பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்...
உங்களுக்குத் தெரிந்த வேறு நோய்கள் பற்றி பின்னூட்டத்தில் தெரிவித்தால் அதைப்பற்றியும் விரிவாக அலசப்படும்...
31 comments:
nice , cute , humorous blog
// sornavalli said...
nice , cute , humorous blog//
ரீபீட்டு
ஆமாம் கொஞ்ச நாளாவே எனக்கு இப்படி இருக்கு டாக்டர்....
சூப்பர் பதிவு. இதை படிக்கும் போது 'நம்மை பற்றி இருக்குமோ' என்று எல்லாருக்கும் தோன்றும் என்றே நினைக்கிறேன்:))
ஒரே ஒரு suggestion. 'எனக்கு இந்த நோய்கள் இல்லை' என்று கூறுவதை தவிர்த்து இருக்கலாமோ..?
தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
//sornavalli said...
nice , cute , humorous blog
//
நன்றி சொர்ணவள்ளி அவர்களே
//
SUREஷ் (பழனியிலிருந்து) said...
ரீபீட்டு
//
ரிப்பீட்டுக்கு நன்றி தல!
//அமுதா கிருஷ்ணா said...
ஆமாம் கொஞ்ச நாளாவே எனக்கு இப்படி இருக்கு டாக்டர்...
//
வாங்க அமுதா கிருஷ்ணா,
எல்லாருக்கும் இருக்கறதுதான். ஒவ்வொரு நோய்க்கும் தீர்வும் சொல்லியிருக்கேனே!!
//
பிரசன்ன குமார் said...
சூப்பர் பதிவு. இதை படிக்கும் போது 'நம்மை பற்றி இருக்குமோ' என்று எல்லாருக்கும் தோன்றும் என்றே நினைக்கிறேன்:))
ஒரே ஒரு suggestion. 'எனக்கு இந்த நோய்கள் இல்லை' என்று கூறுவதை தவிர்த்து இருக்கலாமோ..?
//
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி பிரசன்ன குமார்..
ஏற்கனவே நட்சத்திரம் ஆகி விட்டதால் 'நட்சத்திரைடீஸ்' மட்டும் வராதுன்னு சொன்னேன். இது சிக்குன் குனியா மாதிரி. ஒரு தடவை வந்தா மறுபடியும் ரிப்பீட்டாது!!
மத்ததெல்லாம் எனக்கும் உண்டு..
//
பிரசன்ன குமார் said...
சூப்பர் பதிவு. இதை படிக்கும் போது 'நம்மை பற்றி இருக்குமோ' என்று எல்லாருக்கும் தோன்றும் என்றே நினைக்கிறேன்:))
ஒரே ஒரு suggestion. 'எனக்கு இந்த நோய்கள் இல்லை' என்று கூறுவதை தவிர்த்து இருக்கலாமோ..?
//
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி பிரசன்ன குமார்..
ஏற்கனவே நட்சத்திரம் ஆகி விட்டதால் 'நட்சத்திரைடீஸ்' மட்டும் வராதுன்னு சொன்னேன். இது சிக்குன் குனியா மாதிரி. ஒரு தடவை வந்தா மறுபடியும் ரிப்பீட்டாது!!
மத்ததெல்லாம் எனக்கும் உண்டு..
சிரிப்பு..சிரிப்பா வருதுங்க. எல்லா வியாதிக்கும் மறக்காம மருந்து சொல்லிடுங்க.
என்னைய நேரடியாவே திட்டியிருக்கலாம் தலைவரே. இப்படி பதிவே போட்டுடீங்களே :)
ரொம்ப நாள் கழிச்சு உங்ககிட்ட இருந்து ஒரு காமெடி பதிவு. நல்லா சிரிச்சேன் பல்லவன் :)
ஆஹா தொடர்ச்சியா ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டேனே.... ஒருவேளை இது “பின்னூட்டஃபோபியா”வா இருக்குமோ....
எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்
//பின்னோக்கி said...
சிரிப்பு..சிரிப்பா வருதுங்க. எல்லா வியாதிக்கும் மறக்காம மருந்து சொல்லிடுங்க.//
வாங்க பின்னோக்கி. நன்றி. அந்தந்த நோய்க்கான குறிப்பிலேயே மருந்தும் சொல்லப்பட்டிருக்கு!
//
☀நான் ஆதவன்☀ said...
என்னைய நேரடியாவே திட்டியிருக்கலாம் தலைவரே. இப்படி பதிவே போட்டுடீங்களே :)
//
ஆதவன், தமிழ்ல ஒரு சொலவடை உண்டு. ....... நெஞ்சு குறுகுறுக்கும்னு! !!
//
☀நான் ஆதவன்☀ said...
ரொம்ப நாள் கழிச்சு உங்ககிட்ட இருந்து ஒரு காமெடி பதிவு. நல்லா சிரிச்சேன் பல்லவன் :)
//
மிக மிக நன்றி !!!
//
☀நான் ஆதவன்☀ said...
ஆஹா தொடர்ச்சியா ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டேனே.... ஒருவேளை இது “பின்னூட்டஃபோபியா”வா இருக்குமோ....
எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்
//
ம் ஹூம்.. ஒண்ணும் பண்ண முடியாது! ரொம்ப அட்வான்ஸ்டு ஸ்டேஜ் !!!
ஹா..ஹா.. பிரமாதம் போங்க.. இது எல்லாருக்கும் பொதுவான ஃபோபியாங்க. பின்னிட்டீங்க.
-Toto
www.pixmonk.com
செம கலாய்!
ஆஜர் ஆஜர் !
:)
//சூடெங்கு, சர்ச்சையோபியா, தொடரோயன்சா, பிரபலூ பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்...//
ரொம்ப ஆவலை ஏற்படுத்தீட்டீங்க நண்பா...
//
Toto said...
ஹா..ஹா.. பிரமாதம் போங்க.. இது எல்லாருக்கும் பொதுவான ஃபோபியாங்க. பின்னிட்டீங்க.
//
நன்றி டோடோ !
நன்றி பப்பு !
நன்றி கோவி.கண்ணன்!
நன்றி பரிசல் !
கலக்கல் ஜி,,,,
இப்போ நீங்க எதுக்கு மருந்து எடுத்துகீரிங்க??
எல்லா நோயும் எனக்கு இருக்கு.
ரொம்பப் புதுமையான சிந்தனை. பாராட்டுக்கள். பின்னூட்ட போபியாவுக்கு பதில் பின்னூட்ட மேனியாதான் பொருத்தமா இருக்கும். அனானிகளும், பெண் விடுதலை ஆர்வலர்களும் வரும் போது அது போபியாவா மாறிடும்!
http://kgjawarlal.wordpress.com
//பின்னூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நல்ல பதிவுகள் போட வேண்டும் என்ற தெளிவு பெற்றுவிட்டால் இந்த ஃபோபியா போய் விடும்.//
நீங்கள் மேற்கூறிய வரிகள் எனக்கு பொருந்தும் என நினைக்கிறேன். பொதுவாக நிஜத்தை சொல்லியுள்ளீர்கள்.
இதுல எந்த நோயுமே எமக்கு இருக்குற மாதிரி தெரியலயே...
ஹைய்யோ.. நான் பதிவர் இல்லையா?? இல்ல இதுவும் ஒரு நோயா??
பதிவுலக டாக்டரே பதில் தேவை :-)
நன்றி ஜெட்லீ ! எல்லா மருந்தும் எடுத்துக்கறேன். ஏன்னா நான் ஒரு முழு நேர பதிவர் !!
வாங்க திருமதி ஜெயசீலன்! அப்ப நீங்களும் ஒரு முழு நேர பதிவர் தான்! சந்தேகமே வேண்டாம்!!!
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி ஜவஹர் அவர்களே!!
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி செல்வராஜ் அவர்களே!!
கடைக்குட்டி!! நீங்க பதிவர்தான். ஆனா உங்க நோய் உங்களுக்கு இருக்கான்னு உங்களுக்கே தெரியலன்னு உங்களுக்குச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஏன்னா ... என்னை பதிவுலக டாக்டர்னு சொல்லிட்டீங்களேஏஏஏஏஏ!
Post a Comment