Thursday, January 7, 2010

ஊட்ல சொல்னு வன்ட்டியா..

ஆ. குந்திகினுகீற அல்லா சனங்களுக்கும் வணக்கம்ப்பா. நா நல்லாகீறேன். நீங்கோ அல்லாரும் நல்லாகீறீங்களா. அப்பாலிக்கா நம்பள பேச கூப்ட நான் ஆதவரு அண்ணாத்தக்கி டாங்க்ஸ் சொல்லிக்கிறேன்.

புது வர்ச மொத தேதிலருந்து இன்னி வரிக்கும் ஏதோ கொண்டாடிகினு கீறாங்களாம்.அதும்பேரு 'சாலை பாதுகாப்பு வாரமின்னு சொல்றாங்கோ. அத்தபத்திதான் பேசற்துக்கு வந்துகீறேன். அதுக்கு பேர்தான் 'ஊட்ல சொல்னு வண்ட்டியா..'

நீங்கோ எப்பனா பட்ணத்துக்கு வந்திரிக்கசொல்லோ ஆட்டோல, ரிக்சால போசொல்லோ, இத்த கேட்டிரிப்பீங்கோ. இதுங்கூடவே, டேய்.. பேமானி, நாதாரி, கய்தே, கஸ்மாலம்னு கூட கேட்டிருப்பீங்கோ. நாங்கல்லாம் வாயதொறந்தாலே இதுலாம் ஆட்டமாடிகா வந்து உயுந்துடும்.

இதுல இன்னா கூத்துன்னா இதுமாரி கேக்றவன்தான் ராங்கா வந்துர்ப்பான். பட்ணத்துல மொதல்லயே உஜாராயிட்டம்னாக்கா அப்பாலிக்கா பேஜாராவதேவல. இல்லாங்காட்டி பஜார்லயே நிஜார உருவி சொம்மா பேஜார் பண்டுவானுங்கோ காவாலிப் பசங்கோ. அப்டித்தான், நம்ம மாவா மனோகரு ஒர் தபா எங்கைல ராங் காட்னான். உட்டனா நானு. ரோட்லயே ஊடு கட்னதுல அவனோட டகுலு பிகிலு ஊதிட்சி. அப்பாலிக்கா அவன் எங்கண்லயே மாட்ல. உன்னோருதபா, காஜா கபாலி இப்பிடிதான்...அட. ரூட் மாறி போயினேகிறம்போலகீதே..

அதாவுது இன்னா சொல்றன்னா, நாமோ ரோட்ல போசொல்லோ, அது நம்ம அப்பன் ஊட்டு ரோடுன்னு நென்சிகினே போகூடாது. அப்டி போனாக்கா ரோட்ல வற்ரவன்லாம் நம்ம மேல உயுந்து எயுந்து பூடுவான். அப்பாலிக்கா நம்ம பொயப்புதான் பேஜாரா பூடுமேகண்டி நம்ம மேல உயுரவனுக்கு ஒண்ணியும் ஆவாது. அட அவுனுக்கு எதுனா ஆனா இன்னா ஆவாட்டி நமக்கின்னா. மொதல்லோ நம்ம லுங்கி கயலாம பாத்து நாஜுகா இர்ந்துகுணம்பா. நாம ஒயுங்கா இர்ந்தா ஊட்ல புள்ள குட்டிங்கல்லாம் குஜாலா இர்க்குன்றத்த மன்சுல வச்சிகினா அல்லாமே ரைட்டாபூடும்பா..

அப்பாலிக்கா, இந்த டாணாகாரங்கல்லாம் ரோட்ல தெனம்பூறா நின்னுகினே இர்க்காங்கோ. நம்புளுக்கு ரெண்டு நிம்சம் நின்னாலே கண்ணுல்லாம் சல்பேட்டா அட்ச்ச கணக்கா செவுந்து பூடுது. அதுலயா இந்த வண்டிகாரனுங்கோ பண்ற கலாட்டால டெம்பர் ஸ்டெயிட்டா எல்லைசி மேலே ஏறி குந்திக்குது. அதுனால அவுங்க நிக்க சொன்னா நின்னு போ சொன்னா போயிகினே இருண்ட்டா டிராபிக் ஜாம்லா ஆவாதுன்றேன்.

அப்றமேல்ட்டு, சிக்னலாண்ட ரொம்ப நேரம் நிக்கறா மாரி ஆயிட்சின்னா டுர்ரு டுர்ருன்னு சவுண்டு குடுக்காதிக்கி வண்டிய ஆப் பண்டாக்கா, பெட்ரோலுக்கு துட்டு அயவேண்டியிர்க்காது.

உன்னோண்ணு ரொம்போ முக்கியமான சமாசாரம். டாஸ்மாக்ல சரக்கட்ச்சிட்டு கேரா இருக்கசொல்லோ வண்டியெடுக்கவே கூடாது. எட்த்தா அவ்ளோதான். நேரா கண்ணம்மா பேட்டயோ, கிஷ்ணாம்பேட்டயோதான். அது கூட நீ போதாவல. அவுங்களே தூக்கினு பூடுவானுங்கோ. அதுனால இந்த மேட்டர்ல மட்டும் அல்லாரு ரொம்ப ஸ்ரிக்டா இர்ந்துகுங்கோ.

இதே மாறி ரோஜனலாம் அல்லாருக்கும் வந்திட்சினா அல்லாரும் ரோட்ல ஒயுங்கா அவங்கவுங்கோ ரூட்ட பாத்துகினு ஸ்டெய்ட்டா போய்கினே இர்ப்பானுங்கோ. ஊட்ல சொல்னு வண்டியான்ற பேச்சே இல்லாமபூடுமே. அப்பாலிக்கா ஆஸ்டண்டுன்ற பேச்சே இர்க்காதே. இதாம்பா நா சொல்னும்னு வந்தது.

அட்த்த தபா ரோட்ல போசொல்லோ யாராது சைடு வாங்குனா 'ஊட்ல சொல்னு வண்ட்டியான்னு கேக்கற்த உட்டு 'இன்னா நைனா நல்லாகீறியா. ஊட்ல அல்லாரும் நல்லாகீறாங்களா. அப்பாலிக்கா இன்னா சொல்லுன்னு சொன்னேன்னு வச்சிக்கயேன், சைடுவாங்குனவனுக்கு எப்பிடி இர்க்கும் தெரிமா, தலிவரு சொன்னாமேரி 'ச்ச்ச்சும்மா அதிருதுல்ல' ந்னு நம்ம தலய தட்டிகாம்சிட்டு நம்ம ரூட்ல ஜில்ப்பா போய்கினே இருக்கலாம்.

ஏதோ எனக்கு தோண்ச்சி. அத்தல்லாம் சொல்ட்டேன். ரைட்டா இர்ந்தா எட்துக்குங்கோ. தப்பா இர்ந்திச்சின்னா சொல்லுங்கோ. என்னிய மாத்திக்கிறேன்.

வ்வ்வ்வர்ட்ட்டாஆஆ.

(சாலை பாதுகாப்பு வாரத்திற்கான சிறப்பு பேச்சாளர் திரு. இளையபல்லவன் வழங்கிய சிறப்புரையைப் படித்தீர்கள். உங்கள் மேலான கருத்துக்களையும், ஆதரவுகளையும் தெரிவியிங்கள். அவ்வப்போது அவரை சிறப்புப் பேச்சாளராக அழைக்கலாம்)

17 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஐ யாம் தமிழ் மீடியம்.., ஐ யாம் பாவம்..,

☀நான் ஆதவன்☀ said...

கலாசிட்டப்பா... மெர்சலாகிட்டேன்னா பாத்துகயேன்.

☀நான் ஆதவன்☀ said...

//அவ்வப்போது அவரை சிறப்புப் பேச்சாளராக அழைக்கலாம்//

இனிமே கூப்பிடுவ ஆதவா? ம்ஹூம் :)))

இளைய பல்லவன் said...

//
SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஐ யாம் தமிழ் மீடியம்.., ஐ யாம் பாவம்..,
//

ஐ யாம் சாரி. ஐ யாம் மெட்றாஸ் தமில் மீடியம்.

இளைய பல்லவன் said...

//
☀நான் ஆதவன்☀ said...

கலாசிட்டப்பா... மெர்சலாகிட்டேன்னா பாத்துகயேன்.
//

ரொம்ப டாங்க்ஸ்பா.

இளைய பல்லவன் said...

//
☀நான் ஆதவன்☀ said...

//அவ்வப்போது அவரை சிறப்புப் பேச்சாளராக அழைக்கலாம்//

இனிமே கூப்பிடுவ ஆதவா? ம்ஹூம் :)))
//

இன்னாபா இது. இதுக்கே மெரண்ட்டா இன்னும் நெறய வச்சிகினு கீறனே. அத்தல்லாம் யாராண்ட சொல்றது..

இளைய பல்லவன் said...

அலோஓஓஓ மைக் டெஸ்டிங்க்

ஒற்றன் said...

என்ன பாங், பேச்சுல கீறல் உழுவுது... ஜோக்கா!

(இது எங்க ஊர்ல அல்லக்கைங்க பேசற பாஷைங்கோ.. :)

henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

கடைக்குட்டி said...

அட்ச்சு தூள் பண்ட மாமே...

சின்ன அம்மிணி said...

இந்த மொழி எனக்கு தெரியாதுங்கோவ் :)

இளைய பல்லவன் said...

//
ஒற்றன் said...

என்ன பாங், பேச்சுல கீறல் உழுவுது... ஜோக்கா!

(இது எங்க ஊர்ல அல்லக்கைங்க பேசற பாஷைங்கோ.. :)
//

ஐயா ஒற்றரே..

பாங் - மச்சி ?
கீறல் - சரியில்லாம போகுது

அவ்வ்வ்வ்வ்,
இதுக்கு சிங்காரச்சென்னைச்செந்தமிழே ஆயிரம் மடங்கு மேலாயிற்றே அய்யா....

இளைய பல்லவன் said...

// henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$
//

நன்றி
ஹென்றி!! (அட எகன மொகன...)

இளைய பல்லவன் said...

//
கடைக்குட்டி said...

அட்ச்சு தூள் பண்ட மாமே..

///

அ. அப்டீன்ற. சர்தாம்பா. ரொம்ப டாங்கீஸ் மச்சி...

இளைய பல்லவன் said...

//சின்ன அம்மிணி said...

இந்த மொழி எனக்கு தெரியாதுங்கோவ் :)
//

வாங் அம்மிணியக்கா, உங்ளுக்குண்டே தமிழ்ல இதய மறுக்கா போட்ருக்கர்னுங்கோ. படிச்சிப்போட்டு ரெண்டு வரி சொல்லிப்போட்டு போங்கோவ்.

நாஞ்சில் பிரதாப் said...

இன்னாத்தல நான் வச்ச தலைப்பையே நீங்களும் வச்சா எப்படிதல,

பராவல்ல தல நான் போட்டா என்ன நீங்கோ போட்டா இன்னா நல்லது நடந்தா சரி தல,,

அப்பால பதிவு டாப்புகீதுபா... ரொம்ப டாக்சுபா அக்காங்...

இளைய பல்லவன் said...

//
நாஞ்சில் பிரதாப் said...

இன்னாத்தல நான் வச்ச தலைப்பையே நீங்களும் வச்சா எப்படிதல,

பராவல்ல தல நான் போட்டா என்ன நீங்கோ போட்டா இன்னா நல்லது நடந்தா சரி தல,,

அப்பால பதிவு டாப்புகீதுபா... ரொம்ப டாக்சுபா அக்காங்...
//

இன்னா பண்றத்துபா.. ரோடுன்னு வன்ட்டாலே இதான காதுல வந்து உயுது.

உன்னோட கர்த்து கூட நல்லாவே கீதுபா. வாய்த்துக்கு டாங்க்ஸ்பா.

(அடுத்த வாரம் சக்கரவியூகத்தில் யாராவது சென்னைத்தமிழ் பேசினால் நான் பொறுப்பல்ல!)