காற்றின் மெல்லசைவும்
கடலின் நல்லலையும்
சங்கின் வெண்ணிறமும்
சலங்கை ஒலிக்குரலும்
தேனின் தீஞ்சுவையும்
தீயின் தண்ணொளியும்
நிலவின் தண் பொழிவும்
நீரின் இன் சுவையும்
பனியின் இளங்குளிரும்
பாலின் நறுசுவையும்
மானின் மருள்விழியும்
மயிலின் சிறு நடையும்
மழையின் சிறுதுளியும்
மலையின் பெருவெளியும்
யாழைப் பழித்த மொழியும்
வாளைப் பழித்த விழியும்
ஆஹா... கண்ணே...உன்னை உலகிலுள்ள அத்துணைபொருளாகவும் பார்க்கக்கற்றுக் கொடுத்து விட்டார்கள்....
..
.
.
.
பெண்ணாகத் தவிர...
7 comments:
ஆகா கவிஞரே :))
வெல்கம் பேக் தலைவரே
மார்ச் முடிஞ்சிருச்சு.... சும்மா உங்களுக்கு நியாபகப்படுத்துறேன்
ஆதவன் !
எப்படி போயிட்டிருக்கு பிளாக் உலகமெல்லாம்.
மார்ச் முடிஞ்சிருக்கலாம்.
ஆனா மார்ச் முடியல..
ஆஹா!
அருமையான பதிவு!!
இது இந்த மாத கோட்டாவா?
நன்றி ரேஷன் ஆபீசர்!
SUREஷ் (பழனியிலிருந்து) said...
இது இந்த மாத கோட்டாவா?
///
நச்சுன்னு அடிச்சிட்டீங்க தல!!!
Post a Comment