Friday, September 19, 2008

டேய் ! ! ! (நிஜமல்ல கதை) ... ... (1)

எழும்பூர்... மதியம் 3.25.

அடித்து பிடித்து, முட்டி மோதி, விழுந்து எழுந்து ஒரு வழியாக பல்லவன் எக்ஸ்ப்ரசில் ஏறியாகிவிட்டது. அப்பாடா.

இ-டிக்கட் இருப்பதால் டிக்கட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டியதில்லை. விண்டோ சீட் செலக்ட் செய்தால் பெரும்பாலும் கிடைத்து விடுகிறது. ஆனால் யாராவது குடும்பத்தோடு வந்து விட்டால் முதலில் நமது விண்டோ சீட்டுக்குத்தான் ஆபத்து. எனக்கு பெரும்பாலும் இது நேர்ந்திருக்கிறது.

அன்றும் அப்படித்தான். குடும்பத்தோடு யாரும் இல்லை. ஆனால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஹூம் என்று நினைத்துக் கொண்டேன். அவள் நிலையைப் பார்த்து சிறு சங்கடப் பட்டாலும்,

'எக்ஸ்கியூஸ் மீ, இது என் சீட்' என்றேன்.

'சாரி சார். எனதும் வின்டோதான். எதிர் சீட். எனக்கு எதிர் காத்து ஒத்துக்காது. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. தாங்க்ஸ்.'...

பல்லவனை (எக்ஸ்ப்ரஸ்) விட வேகமாகப் பேசிவிட்டு புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.

'அடிப்பாவி, நான் மட்டும் எதிர் காற்றுக்கு பிரண்டா, என்ன கொடுமை சார் இது.' - மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் ஓகே என்று எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டேன்.

'இதுவே ஒரு பையனா இருந்தா இப்படி விட்டு கொடுத்திருப்பியா?' - மிஸ்டர் மனசாட்சியின் குரல் கேட்டது.

'அந்தப் பெண்ணின் நிலையில் யார் இருந்தாலும் விட்டு கொடுத்திருப்பேன், மிஸ்டர் மனசாட்சி..' என்று பதில் சொல்லி அடக்கினேன்.

வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு வந்தது. அந்தப்பெண் யாரையோ எதிர் பார்த்து டென்ஷனாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு கை பேசியை எடுத்து, ஒரு நம்பரை அழுத்தி.....

'டேய் ய் ய் ய்.... எங்கடா இருக்கே' என்று சத்தமாகக் கேட்ட போது நான் உட்பட அருகில் இருந்தவர்கள் சற்று ஆடித்தான் போனார்கள்.

அவள் பின்னாலிருந்து ஒரு பையன் ..'இதோ வந்துட்டேன்' என்றான்.

'ஏன்டா டென்ஷன் பன்ற.. ஒவ்வொரு தடவையும் ஒன்னோட இதே தொல்லையா போச்சுடா...' அலுத்துக் கொண்டாள்.

பல்லவன் ஒரு வழியாக கிளம்பியது...


(தொடரும்)

4 comments:

Anonymous said...

good

CA Venkatesh Krishnan said...

புதிய வடிவில் பிளாக்

யூர்கன் க்ருகியர் said...

டி.வி சீரியல் மாதிரி போகும் போலேருக்கே !

CA Venkatesh Krishnan said...

//
ஜுர்கேன் க்ருகேர் கூறியது...
//
வாங்க ஜுர்கேன் க்ருகேர்

//
டி.வி சீரியல் மாதிரி போகும் போலேருக்கே !
//

இதை அடுத்த பகுதியிலேயே முடித்து விட்டேன். அதையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க

நெடுந்தொடர் எழுதும் திட்டமும் உள்ளது.

உங்கள் மேலான ஆதரவுக்கு இப்போதே நன்றிகள்.