இது 'மில்லி' மேட்டர் இல்லிங்கோ.
நான் ஒரு புதிய பதிவன். ஹிட் கவுண்டர், ஆன் லைன் யூசர்ஸ் முதலிய கோடுகளை எப்படி சேர்ப்பது என்பது கூட தெரியாமல் இருந்தது.
என்னுடைய மற்றொரு பதிவான 'கணக்கு வழக்கில்' இதற்கான உதவியைக் கேட்டிருந்தேன்.
சக பதிவர் 'பாரிஸ் திவா' வழி சொல்லிக் கொடுத்தார்.
போன வாரம் ஒரு கதை இரண்டு பகுதிகளாக எழுதினேன்.
இன்னிக்குதான் ஒரு நல்ல 'மொக்கை' பதிவு முதல் முதலாக போட்டேன்.
பாருங்க, ஹிட்டு ஒரே நாளில் 100 ஐ தாண்டி விட்டது ! ! !
ஒரு மாதத்தில் 100 ஹிட்டுகள்தான் கிடைத்தது.
காலையில் 111 ஆக இருந்தது, இப்பொழுது 200 ஐ தாண்டி விட்டது.
இந்த சந்தோஷமான சமாசாரத்தை பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பதிவு.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு . . .
டிஸ்கி:-
இதில் உட்டாலக்கடி வேலையெல்லாம் இல்லிங்கோ.
(அட நம்புங்க ! ! !)
5 comments:
கவுண்ட் +1
தமிழை ஆண்டவன் பெயரில் பதிவு அமைத்து, சாண்டில்யன் கதையின் நாயகன் பெயரில் உலா வர இருக்கிறீர்கள். நல்ல தமிழ்ச் சொற்களை உபயோகித்து தளம் அமைத்திருக்கிறீர்கள். நிறையவும், நிறைவாகவும் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
//
RATHNESH கூறியது...
//
வாங்க RATHNESH ...
//
தமிழை ஆண்டவன் பெயரில் பதிவு அமைத்து, சாண்டில்யன் கதையின் நாயகன் பெயரில் உலா வர இருக்கிறீர்கள்.
//
அருமையான மொழி ஆளுமை !.!.!. மிக்க நன்றி
காஞ்சி எனது ஊர். எனவே அதனுடன் தொடர்புடைய இருவரின் பெயரை பயன் படுத்துகிறேன்.
அறிஞர் அண்ணாவின் எழுத்துக்களும் பேச்சுக்களும் என்றும் இனியவை.
கடல் புறாவின் இளைய பல்லவன் எனக்குப் பிடித்த நாயகன். யவன ராணியின் இளஞ்செழியனை விட சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான் என்பது என் கருத்து.
//
நல்ல தமிழ்ச் சொற்களை உபயோகித்து தளம் அமைத்திருக்கிறீர்கள். நிறையவும், நிறைவாகவும் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
//
மீண்டும் நன்றி.
:-))))))))))))
//
முரளிகண்ணன் கூறியது...
:-))))))))))))
//
வாங்க முரளி கண்ணன்,
உங்களுடைய பெரிய சிரிப்புக்கு நன்றி.
Post a Comment