வலையுலகில் சர்ச்சை அலை ஓயாது போலிருக்கிறது. சிறிது காலம் கும்மியும், மொக்கையுமாகப் போய்க்கொண்டிருந்த பதிவுலகில் சர்ச்சையானது தனிமனித்தாக்குதலாகப் பரிணாமித்திருக்கிறது. இது உண்மையா? பொய்யா? உளறலா?
எது உண்மை,
எது பொய்,
எது உளறல்.
உளறல் தான் உண்மையா?
உண்மை உளறலா?
இரண்டுமே பொய்யா?
பொய்யென்பதுதான் நிஜமா?
இது அடுத்த நிலையை எப்போது எப்படி எடுக்கும்.
என்னைப் போன்ற புதிய பதிவர்களாகிய அர்ஜுனர்களுக்கு, பீஷ்ம பிதாமகர்களும், கிருஷ்ண பரமாத்மாக்களும் கூறும் அறிவுரைகள் என்ன?.
கொஞ்சம் வந்து வெவரமா வெளக்கிட்டு போனீங்கன்னா, நாங்களும் இந்த ஜோதியில ஐக்கியமாகறதுக்கு வசதியா இருக்கும் ! ! !
6 comments:
நானும் உங்க கட்சி தான். ஆனா ஒண்ணு நிச்சயம். இப்படி இந்தக் கேள்விகளுடனேயே சில வருஷங்களை ஓட்டிட்டா அப்புறம் நீங்க தான் கிருஷ்ண பரமாத்மா.
எதற்கு இவன் அவனை திட்டுறான்.
பதிவு ஹிட்டாவதற்கு.
எதற்கு அவன் இவனை மதிக்குறான்.
பின்னூட்டம் வாங்குறதுக்கு.
பழைய பதிவு திரும்பி வந்தா அது மீள்பதிவு..
அதுல ஏதும் உள்குத்து இருந்தா அது கீழ்பதிவு.
நீ போட்டது நல்ல கமெண்டுன்னா,
அதுக்கு நான் ரிப்பீட்டே போடுவேன்.
இன்னொருத்தர் எனக்கு ரிப்பீட்டே போடுவாரு..
இப்படியே மாத்தி மாத்தி போட்டிட்டு இருந்தா அது கும்மியா மாறுது.
இதுவே தமிழ்மணத்தின் நியதியும் நேர்மையுமாகும்..
ரம்பா யுக்தா முகி..முகி..
சென்ஷி
உங்கள் நல்லவ்ருன்னு சொன்னா நான் நல்லவன் இல்லாட்டி எப்பயும் போல
//
RATHNESH கூறியது...
//
அப்போ ரெண்டு வருஷத்துல ப்ரமோஷன் உண்டுன்றீங்க.
தாங்க்ஸ்.
//
சென்ஷி கூறியது... //
கண்ணைத்திறந்த சென்ஷி பரமாத்மா வாழ்க.
//
ரம்பா யுக்தா முகி..முகி..
//
ரிப்பீட்டே! ! !
நான் அப்பீட்டே ! ! !
//
குடுகுடுப்பை கூறியது...
உங்கள் நல்லவ்ருன்னு சொன்னா நான் நல்லவன் இல்லாட்டி எப்பயும் போல
//
நீங்க நிச்சயமா நல்லவருதாண்ணே.
உங்க மனம் திறந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
Post a Comment