நேற்றைய டிராஃபிக் ஜாம் தான் சென்னை வரலாற்றிலேயே முதன் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்த ஜாமாகும். சென்னையில் நேற்று கடும் மழையுடன் டிராஃபிக் ஜாமும் சேர்ந்து கொண்டது.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல குறைந்தது 3 முதல் 5 மணி நேரங்களானது.
அம்பத்தூரில் மாலை 5 மணிக்குப் புறப்பட்ட ஒருவர் தாம்பரம் சேரும் போது மணி இரவு பனிரெண்டரை.
பலரும் பேருந்து, தொடர்வண்டி, விமானம் முதலியவற்றைத் தவறவிட்டனர். இவர்களில் பெரும்பாலோர் தீபாவளிக்காக ஊருக்குச் செல்பவர்களாவார்கள்.
இது தான் சென்னை வரலாற்றிலேயே முதன் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்த ஜாமாகும்.
அருஞ்சொற்பொருள் : ஜாம் - கூழ்.
12 comments:
//பலரும் பேருந்து, தொடர்வண்டி, விமானம் முதலியவற்றைத் தவறவிட்டனர். இவர்களில் பெரும்பாலோர் தீபாவளிக்காக ஊருக்குச் செல்பவர்களாவார்கள்//
ஆமாங்க ரொம்ப பாவம். திங்கள் தீபாவளி எல்லோரும் நேற்று தான் முன்பதிவு செய்து கிளம்பி இருப்பார்கள்..
பாவம் எத்தனை பேர் இதனால் கஷ்டப்பட்டார்களோ..
//அருஞ்சொற்பொருள் : ஜாம் - கூழ்.//
:-))) இதற்க்கு வேறு விளக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
"ஜாம்"மைத்தான் கூழ் என்று மொழிபெயர்த்திருக்கிறீர்களா? என்ன கொடுமை பல்லவன் சார் இது?!
//அருஞ்சொற்பொருள் : ஜாம் - கூழ்.//
என்ன கொடுமை பல்லவன் இது...நம்ம குழலிகிட்ட கேட்டா சரியான பதில் கிடைக்கும்..
Jam என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது jamming என்பதை குறிக்கிறது. அதாவது அடைத்து கொண்டு மேலே நகர முடியாமல் இருப்பதை குறிக்கும். உதாரணத்துக்கு இஞ்சின் ஜாம் ஆகிவிட்டது என்று கூறுவார்கள்.
அதற்கு சரியான தமிழ் சொல் நெரிசல் என்றுதான் கூறவேண்டும். அதாவது போக்குவரத்து நெரிசல் அல்லது அடைப்பு. ஜாமை கூழாக்கினால் தமிழும் கூழாகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
கிரி கூறியது...

நன்றி கிரி.
ஆமாம் தீபாவளிக்கு ஊருக்கு சென்றவர்கள் தான் பாவம்.
இத்தனைக்கும் அவர்கள் 90 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து இருப்பார்கள் :(
இதை யாருமே எதிர் பார்த்திருக்க முடியாது.
இந்தப் பதிவில் கூழ் என்ற சொல் ஸடையரிஸ்டிக் (கலாய்த்தல்) காக பயன் படுத்தப் பட்டிருக்கிறது.
என் மெய்ப்புல அறைகூவலர் பதிவைப் பார்த்தால் தெரியும்.
இங்கு நெரிசல் என்பதே சரியான வார்த்தை.
// யோசிப்பவர் கூறியது...
"ஜாம்"மைத்தான் கூழ் என்று மொழிபெயர்த்திருக்கிறீர்களா? என்ன கொடுமை பல்லவன் சார் இது?!
//
வாங்க யோசிப்பவர்
இந்தப் பதிவில் கூழ் என்ற சொல் ஸடையரிஸ்டிக் (கலாய்த்தல்) காக பயன் படுத்தப் பட்டிருக்கிறது.
என் மெய்ப்புல அறைகூவலர் பதிவைப் பார்த்தால் தெரியும்.
இங்கு நெரிசல் என்பதே சரியான வார்த்தை.
//
நான் ஆதவன் கூறியது...
//அருஞ்சொற்பொருள் : ஜாம் - கூழ்.//
என்ன கொடுமை பல்லவன் இது...நம்ம குழலிகிட்ட கேட்டா சரியான பதில் கிடைக்கும்..
//
மேலே சொன்னது போல் இந்தப் பதிவில் கூழ் என்ற சொல் ஸடையரிஸ்டிக் (கலாய்த்தல்) காக பயன் படுத்தப் பட்டிருக்கிறது.
என் மெய்ப்புல அறைகூவலர் பதிவைப் பார்த்தால் தெரியும்.
இங்கு நெரிசல் என்பதே சரியான வார்த்தை.
//
dondu(#11168674346665545885) கூறியது...
Jam என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது jamming என்பதை குறிக்கிறது. அதாவது அடைத்து கொண்டு மேலே நகர முடியாமல் இருப்பதை குறிக்கும். உதாரணத்துக்கு இஞ்சின் ஜாம் ஆகிவிட்டது என்று கூறுவார்கள்.
அதற்கு சரியான தமிழ் சொல் நெரிசல் என்றுதான் கூறவேண்டும். அதாவது போக்குவரத்து நெரிசல் அல்லது அடைப்பு. ஜாமை கூழாக்கினால் தமிழும் கூழாகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
வாங்க டோண்டு சார்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மேலே சொன்னது போல் இந்தப் பதிவில் கூழ் என்ற சொல் ஸடையரிஸ்டிக் (கலாய்த்தல்) காக பயன் படுத்தப் பட்டிருக்கிறது.
என் மெய்ப்புல அறைகூவலர் பதிவைப் பார்த்தால் தெரியும்.
இங்கு நெரிசல் என்பதே சரியான வார்த்தை.
Happy Diwali to you and your family
போக்குவரத்து நெரிச்சல் அல்லது நெரிபாடு ஆகியவை பொருத்தமான சொற்கள் என்று நினைக்கிறேன்
--
தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொடர்வண்டிகள் பல காலியாக சென்றதாக கூறினார்கள்
--
//
suba கூறியது...
Happy Diwali to you and your family
//
நன்றி சுபா,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
//
புருனோ Bruno கூறியது...
போக்குவரத்து நெரிச்சல் அல்லது நெரிபாடு ஆகியவை பொருத்தமான சொற்கள் என்று நினைக்கிறேன்
--
//
நெரிசல் என்பதே சரியான வார்த்தையாகப் படுகிறது.
//
தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொடர்வண்டிகள் பல காலியாக சென்றதாக கூறினார்கள்
--
//
ஆமாம்
Post a Comment