நேற்று (17.02.2009) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அன்பழகன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேல் வாசிக்கப்பட்ட அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்களும், அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
இவையனைத்தும் ஒரு புறம் இருக்க என்னைப் போன்ற தமிழார்வலர்களுக்கும், வரலாற்றார்வலர்களுக்கும் இனிப்பான செய்தி ஒன்றுண்டு. அதுதான் சாண்டில்யன், கண்ணதாசன் மற்றும் பலரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப் படுவது.
தி.மு.க. அரசில்தான் பல்வேறு அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன. இது தமிழகத்தில் தமிழையும், இலக்கியத்தையும் வளர்க்கும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.
ஒரு இலக்கிய வரலாற்று ஆர்வலனாக இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி !
நன்றி !!
நன்றி !!!
2 comments:
"தமிழக அரசுக்கு நன்றி ! ! !"
நானும் கூறிவிடுகிறேன்.. நன்றி.
இனிமேல் சாண்டில்யன் நூல்கள் இனி இணையத்தில் கிடைக்கும் அல்லவா... ஏற்கன்வே ஏதேனும் லின்க் இருந்தால் கொடுங்கலேன்.................
டாக்டர் ப்ரூனோ இதப்பத்தி ஒரு தெளிவான பதிவு போட்டிருக்காரே.
சந்ததியாளர்கள் ஒப்புக்கொண்டால் இணையத்தில் வர இன்னும் இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகலாம்.
Post a Comment