Friday, February 27, 2009

சக்கர வியூகம் எட்டா(ம்) இடத்தை எட்டியது எப்படி?

என் இனிய வலையுலக மக்களே, தமிழ்மணம் விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்களாயினும் இன்று வலைப்பூவைத் திறந்திட்ட பிறகுதான் நான் இந்த நிகழ்வை அறிய நேர்ந்தது.

யார் யார் வென்றுள்ளார் என்று பார்த்ததில் நல்ல பதிவுகளும் பதிவர்களுமே வெற்றி பெற்றுள்ளனவென்றுணர்ந்துகொண்டேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் தமிழ்மண நிர்வாகிகளுக்கு உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

மேலும், முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட தலைசிறந்த பத்து பதிவுகளின் பட்டியலில் "தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்" பிரிவில் என் சக்கர வியூகமும் இருக்கக் கண்டு வியப்புற்றேன். இந்தப்பிரிவில் எட்டாவதாகக் காலடி எடுத்து வைத்துள்ளது சக்கர வியூகம்.

வாக்குகள் வழங்கி சிறப்புச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதை முதற்கண் கடமையாகக் கருதுகிறேன்.

=====

இப்ப பாருங்க எட்டாவது இடத்தை எட்டிப் பிடிச்சிருக்கு சக்கர வியூகம். எப்படி? இப்படித்தான். இவங்கல்லாம் முந்திகிட்டாங்க.


1. பயணங்கள் - புருனோ Brunoதமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை

2. பல்சுவை! - SP.VR. SUBBIAHStar Posting செட்டிநாட்டு வீடுகள்

3. முத்துச்சரம் - ராமலக்ஷ்மி‘திண்ணை நினைவுகள்’-கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்

4. காலம் - கோவி.கண்ணன்இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

5. விவசாயி - ILA(a)இளாஇந்த மொழித் திணிப்பை என்னான்னு சொல்ல?

6. இசை இன்பம் - ஜீவா (Jeeva Venkataraman)தமிழிசை வரலாறு - 1 : சங்க காலம்

7. வாழ்க்கைப் பயணம் - VIKNESHWARANஆண் விந்தில் எழுதப்பட்ட சரித்திரம்இவங்களுக்கப்புறமா நான் எட்டாவதா வந்திருக்கேன். எனக்கப்புறம் இவங்க வந்திருக்காங்க.


9. தமிழரங்கம் - தமிழரங்கம் பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

10 ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்! - ஜெய. சந்திரசேகரன்பண்டைய கோவில் ஓவியங்கள் அழிகின்றன

11. மறந்து போகாத சில - டொக்டர்.எம்.கே.முருகானந்தன்விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்

12. பழமைபேசியின் பக்கம் - பழமைபேசி“தம்பிடி”, “வராகன்”ன்னா என்ன?

13. காலப்பெருங்களம் - ஆதித்தன்தடுமாறும் தமிழினம்!மற்ற பிரிவுகளில் சேர்த்த பதிவுகள் என்னவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.


இப்பதிவினை இட வாய்ப்பளித்த தமிழ்மணம் மற்றும் ரசிகக் கண்மணிகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொண்டு இப்போதைக்கு விடை பெறுவது உங்கள் 'இளைய பல்லவன்'

10 comments:

’டொன்’ லீ said...

வாழ்த்துகள் :-)

இளைய பல்லவன் said...

நன்றி 'டொன்'லீ !!!

சதீசு குமார் said...

மனமார்ந்த வாழ்த்துகள் பல்லவன்..

இளைய பல்லவன் said...

உங்கள் ஊக்கத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சதீசுகுமார் அவர்களே !!!

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் நண்பரே ...

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

இளைய பல்லவன் said...

நன்றி நசரேயன்

இளைய பல்லவன் said...

நன்றி ஜமால்

இளைய பல்லவன் said...

நன்றி திகழ்மிளிர்