Thursday, February 19, 2009

புத்தகங்கள் நாட்டுடைமையாவதால் பயன் என்ன? தமிழ் செம்மொழியானதால் பயன் என்ன?

தமிழ் வளர வேண்டும் என்பதை விட வாழ வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். வாழ வேண்டுமெனில் தமிழின் செம்மையையும் பண்டைய தமிழறிஞர்களின் படைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

நாட்டுடைமையாக்கப் படுவதால் காபி ரைட் பிரச்சனைகள் தீர்கின்றன. யார் வேண்டுமானாலும் எந்த மீடியத்திலும் இவர்களின் படைப்புகளை வெளியிடலாம்.

இதனால் ரீச் அதிகமாகிறது. கல்கியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப் படாத வரை வானதி பதிப்பகம் மட்டும்தான் பொ.செ. மற்றும் அவரது மற்ற முக்கிய படைப்புகளை வெளியிட்டு வந்தது. அப்போது பொ.செ. ஐந்து பாகங்களும் சேர்த்து ரு.800க்கும் மேல். ஆனால் நாட்டுடைமையாக்கப் பட்ட பிறகு அதிகமான மலிவு விலைப் பதிப்பு ரூ.135க்கே கிடைத்தது. இதனால் பெரும்பாலோர் கல்கியின் எழுத்துக்களைப் படிக்க முடிந்தது. இன்று இதன் மின் பதிப்புகளும் இலவசமாகக் கிடைக்கின்றன. மற்ற எழுத்தாளர்களின் எழுத்துகளும் அப்படித்தான்.

இப்போது சாண்டில்யன், கண்ணதாசன் ஆகியோரின் எழுத்துகள் நாட்டுடைமையாக்கப் படுவதால் இதை யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம். மின் பதிப்புகளும் செய்யலாம். அனைவரும் படித்து மகிழலாம். எழுத்தாளர்களின் சந்ததியினருக்கும் தக்க சன்மானம் கிடைத்து விடுகிறது.


தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, பற்பல பல்கலைக் கழகங்களில் ஒரு தனி துறையை ஏற்படுத்த உதவும். இதுவரை சமற்கிருதம் மட்டுமே செம்மொழியாக இருந்து வந்துள்ளது. அது வாழும் மொழியல்ல. அதற்கிணையான அல்லது ஒரு படி மேலான நிலையில் உள்ள தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்காதது தமிழுக்கு ஏற்பட்ட இழுக்காக இருந்து வந்தது. தற்போது அது களையப்பட்டுள்ளது. இவை தவிர்த்து மற்றைய உபயோகங்கள் தெரியவில்லை.


இன்றைய நிலையில் தமிழில் சிலப்பதிகாரம், திருக்குறள், தேவாரம், திவ்யப்ரபந்தம் போன்ற இலக்கியங்களோ / காப்பியங்களோ இல்லாத நிலை நிலவுகிறது. இவற்றைக் கொள்வாரில்லை ஆகவே கொடுப்பாரில்லை. இந்த நிலை மாற வேண்டும். நாம் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அடிப்படையில் தமிழால் நாம் இணைந்துள்ளோம். அந்தத் தமிழுக்கு நாம் செய்யும் கைம்மாறு அதன் சுவையை உணர்வதேயாகும்.


பாரதத்தாயைப் பற்றி பாரதியார் கீழ்கண்டவாறு பாடினாலும் இம்முதல் வரிகள் தமிழின் தொன்மையையும், இளமையையும் போற்றும்:-

தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும்
இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள்தாய்.
யாரும் வகுத்தற்கரிய பிராயத்தள் ஆயினுமே எங்கள்தாய்
இந்தப் பாரில் என்னாளும் ஓர் கன்னிகை எனத் திகழ்ந்திடுவாள் எங்கள்தாய்.

இந்தப் பதிவை எழுதத் தூண்டிய "தலைவர்" நான் ஆதவனுக்கு நன்றிகள் பல.

5 comments:

புருனோ Bruno said...

இது குறித்த என் இடுகை http://www.payanangal.in/2009/02/blog-post_18.html

இளைய பல்லவன் said...

ஆமாம் ப்ரூனோ சார். இத எழுதினப்பறம் தான் அதைப் பார்த்தேன். மிக விளக்கமான பதிவு.

நானும் தெளிவா "நாட்டுடைமையாவதால்"னு தான் போட்டிருக்கேன். நாட்டுடைமையானதால்னு போடல!

நான் ஆதவன் said...

நன்றி தலைவரே...ரிப்ளே எதிர்பார்த்தேன்..பதிவே போட்டுட்டீங்க. ரொம்ப நன்றி

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

இளைய பல்லவன் said...

எதப் பதிவா போடலாம்னு தேடிட்டிருக்கும் போது இது மாதிரி ஒரு மேட்டர் கொடுத்தீங்களே. அதுக்கு நன்றி !!