Tuesday, July 14, 2009

வானவில் 14-07-2009

அன்பும் பண்பும் நிறைந்த என் இனிய வலை வா(சி)(சகர்)களே.. நீண்ட காலத்திற்குப் பிறகு வானவில்லைக் காணும் வாய்ப்பை ஏற்படுத்திய எனக்கு நானே நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வானவில்லைப் பார்ப்போம்.

====

முன்பெல்லாம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு தமிழ்மணம் இருந்தது. கூடவே தேன் கூடும் இருந்தது. இப்போ எல்லாரும் ஒரு திரட்டி வச்சிக்க ஆரம்ப்பிச்சிட்டாங்க. எல்லாப்பதிவுலயும் திரட்டியில சேக்கச்சொல்லி கமெண்டு வரும்.

இதுனால யாருக்கு லாபமோ நட்டமோ தெரியாது. ஆனா என்ன மாதிரி உள்ளவங்களுக்கு நிச்சயமா லாபம்தான். ஏன்னா ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் வந்து பொட்டிய ரொப்புதே! வாழ்க புதுத் திரட்டியாளர்கள்.

அய்யாமார்களே, அம்மாமார்களே.. தொடர்ந்து புது திரட்டிகளை ஆரம்பித்து உங்கள் விளம்பரத்தை பின்னூட்டம் மூலம் செய்து என்னைப் போன்றோரை வாழவையுங்கள்.

====

சென்னையில் இருப்பவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும். மேகமூட்டமான வானம் என்பதுதான் அது. இப்போது ரமணன் வந்து சொல்கிறாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் டி.வி.பார்த்தே கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. மழை வரும் அறிகுறியே தெரியவில்லை. இது எல் நினோவா, லா நினாவா என்று யாராவது யோசித்தீர்களா??

====

இந்த முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு யாருமே கண்டனம் தெரிவிக்காதது ஆச்சரியமூட்டுகிறது. இது இப்படித்தான் என்று விட்டுவிட்டார்கள் போல. கடைசியில் முழிபிதுங்குவதென்னவோ நாம் தான். இந்த ரெஸ்பான்ஸ் கொடுத்த தெம்பால் அடுத்த உயர்வை விரைவில் எதிர்பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட் இன்டியன்ஸ்.

====

சட்டசபை நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடை பெறுவது பாராட்டத்தக்கது. தினமும் செய்தித்தாள்களில் வரும் சட்டமன்ற நிகழ்ச்சிகள் மனதிற்கு நிறைவைத் தருகிறது. பாராளுமன்றம் போலன்றி நல்ல விவாதங்கள் நடைபெறுகின்றன. சுவாரசியமாகவும், நகைச்சுவையாகவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஆரோக்கியமான சூழல் தொடர வேண்டும்.

====

கமலா திரையரங்கில் லுங்கி அணிந்து வரத்தடை என்ற செய்தியைப் பார்த்தேன். லுங்கி அணிந்து வருபவர்கள் பாட்டிலுடன் வந்து கலாட்டா செய்கிறார்களாம். அடடடடடா.. புல்லரித்துவிட்டது. ஏன். பாண்டுக்குள் மறைத்து எடுத்து வர மாட்டார்களா? உள்ளே வரும் போதே செக் செய்யலாமே. என்னவோ... ஹூம்.

====

சென்னைக்கு வந்து பல மாதங்களாகியும் ஒரு பதிவர் சந்திப்பில் கூட கலந்து கொள்ளாதது வருத்தத்தையே அளிக்கிறது. என்ன செய்வது. வீட்டில் குழந்தைகள் முழித்திருக்கும் போது சந்திப்பதே பெரிய விஷயமாக இருக்கிறதே. ஆனாலும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்.


====

எவ்வளவுதான் திரட்டிகள் வந்தாலும், எப்போதும் தமிழ்மணத்தைத்தான் திறக்கத் தோன்றுகிறது. எனக்கு மட்டும்தானா? எல்லோருக்குமா?

===

மீண்டும் ஒரு வானவில்லில் சந்திப்போம்.

11 comments:

இராகவன் நைஜிரியா said...

// அய்யாமார்களே, அம்மாமார்களே.. தொடர்ந்து புது திரட்டிகளை ஆரம்பித்து உங்கள் விளம்பரத்தை பின்னூட்டம் மூலம் செய்து என்னைப் போன்றோரை வாழவையுங்கள். //

அவ்வப்போது அவங்க கொடுக்கின்ற ஓட்டுப் பட்டைகளையும் இணைக்க வேண்டும் நண்பரே...

// சென்னைக்கு வந்து பல மாதங்களாகியும் ஒரு பதிவர் சந்திப்பில் கூட கலந்து கொள்ளாதது வருத்தத்தையே அளிக்கிறது. என்ன செய்வது. வீட்டில் குழந்தைகள் முழித்திருக்கும் போது சந்திப்பதே பெரிய விஷயமாக இருக்கிறதே. ஆனாலும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். //

இப்படி ஒரு சால்ஜாப்பா... நைஜிரியாவில் இருந்து வந்து நான் இங்கு ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துகிட்டேன். பதிவர் சந்திப்பு நடப்பது ஞாயிற்றுக் கிழமைகளில் தானேங்க..

CA Venkatesh Krishnan said...

நன்றிங்க. அப்படி இணைச்சாத்தான் வைரஸ் டயமன்ட்ஸ்னு என்னன்னமோ வருதாமே!!

நைஜீரியால இருக்கிற நீங்க கலந்துக்கலாம். ஏன்னா நீங்க நைஜீரியாலேருந்து வர்றீங்க. நான் கலந்துக்குறது கஷ்டம் ஏன்னா நான் நங்க நல்லூர்லந்துல்ல வரணும்!!!

Anonymous said...

//அய்யாமார்களே, அம்மாமார்களே.. தொடர்ந்து புது திரட்டிகளை ஆரம்பித்து உங்கள் விளம்பரத்தை பின்னூட்டம் மூலம் செய்து என்னைப் போன்றோரை வாழவையுங்கள்.//

ஹிஹி , join the club.
நமக்கும் அதெ நிலமைதான்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//முன்பெல்லாம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு தமிழ்மணம் இருந்தது. கூடவே தேன் கூடும் இருந்தது//


மக்களே..., பதிவர் எவ்ளோ அனுபவசாலி பாத்தீங்களா.....,

இவரும் ஒரு திரட்டி ஆரம்பிக்கவேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//. ஏன்னா நீங்க நைஜீரியாலேருந்து வர்றீங்க. நான் கலந்துக்குறது கஷ்டம் ஏன்னா நான் நங்க நல்லூர்லந்துல்ல வரணும்!!!//


நச்..,

உண்மை நிலவரம் அதுதான்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வானவில் அப்படின்னா நிறைய கலர்ஸ் இருக்கணும்..,

கலர்னா என்னன்னு கேட்கக் கூடாது..,

☀நான் ஆதவன்☀ said...

அட திரும்பவும் வானவில் வந்தாச்சா. அதென்ன க்ரெக்ட்டா மழைகாலத்துல வானவில் வருது. மேட்சிங்கா?

ஏழு வேணும்ங்கிறதுக்காக ஏழாவது மேட்டர் திணிச்ச மாதிரி இருக்கே.

CA Venkatesh Krishnan said...

வாங்க சின்ன அம்மணி,

நாம மட்டுமில்ல. இங்க நெறய பேர் இப்படித்தான். அதான் வாழவைக்கும் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் விதமா இந்தப் பதிவு!!

CA Venkatesh Krishnan said...

என்ன கொடுமை சுரேஷ் இது. நான் இந்த ஒண்ண வச்சிக்கிட்டு படற பாடே பெருசா இருக்கு. இதுல போயி திரட்டி அது இதுன்னா..

அவ்வ்வ்வ்

CA Venkatesh Krishnan said...

கலர்ஸ்? யூ மீன் ஃபிகர்ஸ்?

CA Venkatesh Krishnan said...

மழைக்காலம் சார்ந்து இருக்கலாம் ஆதவன். ஏதோ இப்ப கொஞ்சம் ஃபிரீயாயிட்டதால பழசெல்லாம் தூசி தட்ட ஆரம்பிச்சிருக்கேன்!!

ஆமாம். வானவில்ங்கறதால ஏழு மேட்டர் கஷ்டப்பட்டு போட்டேன்!