Sunday, December 6, 2009

இளைய பல்லவன் ரிட்டர்ன்ஸ் ! ! !

இந்த இளைய பல்லவன் அவ்வப்போது காணாமல் போய்விடுவதில் கில்லாடி. இதில் அவனை மிஞ்ச யாரும் கிடையாது! ஆனால் ஒரு நல்ல குணம். தினமும் வலைப்பதிவைப் பார்க்கத் தவறமாட்டான்.

நண்பர்களே, இளையபல்லவன் இப்போது மீண்டும் வந்து பதிவுகள் தொடர்ந்து போடுவதாகக் கூறுகிறான். சக்கரவியூகம் இனி தொடர்ந்து வருவதற்கு உத்தரவாதம் என்றும் கூறுகிறான். இதைப் போல் பலமுறை இதற்கு முன் கூறியிருந்தாலும், இந்த முறை எனக்கு சிறிது நம்பிக்கை குறைவுதான். உங்களுக்கு?

சரி, இனி இதைப் பற்றி பேச ஒன்றும் இல்லை. செயலில் இறங்குகிறானா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

"இளையபல்லவா !, ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். இது உன் மானப் பிரச்சனை, தன்மானப் பிரச்சனை. இம்முறையும் நீ ஒழுங்காகப் பதிவுகள் போடாவிட்டால், முக்கியமாக சக்கரவியூகத்தைத் தொடராவிட்டால், உன்னை 'ரைட் ஆஃப்' செய்து விடுவார்கள். ஆகவே எச்சரிக்கையாக இரு," என்பதை மட்டும் உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும் இளையபல்லவனிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி ஓவர் டு இளைய பல்லவன்:

========

"நண்பர்களே, உலகில் பல்வேறு கடுமையான பணிகள் இருக்கின்றன. அதில் மிகக் கடுமையான பணி அக்கவுண்டன்ட் பணி. அதில் கார்போரேட் அக்கவுண்டன்ட் என்று ஒரு பிரிவு உண்டு, அவர்களுக்கு வாழ்க்கையே டெட் லைன் தான். அப்படிப்பட்ட பிரிவில் நான் பணியாற்றுவதால், இம்முறை டெட்லைன்களில் சிக்கிக் கொண்டுவிட்டேன். சக்கர வியூகம் எப்படியாவது தொடர்ந்து வர வேண்டும் என்ற ஆவலும் எண்ணமும் என்னிடமும் உள்ளது. இம்முறை மேலே சொன்னது போல், எப்பாடு பட்டாவது தொடர்ந்து எழுதிவிடுவது என்று (‘N’th டைம் !!! ) முடிவெடுத்து விட்டேன்.

எப்போதும் போல் உங்கள் மேலான ஆதரவை நாடு்ம்"

உங்கள்
இளைய பல்லவன்

18 comments:

பழமைபேசி said...

வருக, வழங்குக!!

CA Venkatesh Krishnan said...

//
பழமைபேசி said...

வருக, வழங்குக!!//

நன்றி பழமை பேசி !

Prabhu said...

வாக்கு தவறக்கூடாது பல்லவரே!

இராகவன் நைஜிரியா said...

இளைய பல்லவரே நீங்க சரிய செய்யவில்லை என்றால் நம் கணக்கர்கள் அனைவருக்கும் இழுக்கு என்பதை தெரிந்துகொண்டு சமத்தா நடந்து கொள்ளுங்கள்.

Karthick said...

நண்பரே -

உங்கள் ப்ளாக் நல்ல இருக்கு. நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். ஒரு தொடர் கதை என் ப்ளோகில் எழுதுகிறேன்.
உங்கள் கருத்தை படித்துவிட்டு சொல்லவும்.
என் வலைபூ முகவரி:
http://eluthuvathukarthick.wordpress.com/

Anonymous said...

:)

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம்ம்ம்

//(‘N’th டைம் !!! ) //

:)))))))))))))))))) பட்டைய கணக்கர்னு அடிக்கடி நிருப்பிக்கிறீங்க தலைவரே.

நாங்களும் ’N’th டைம் உங்களை மன்னிச்சிடுறோம் :)

☀நான் ஆதவன்☀ said...

சொல்ல மறந்துட்டேன்

வெல்கம் பேக் பல்லவரே!

CA Venkatesh Krishnan said...

// pappu said...

வாக்கு தவறக்கூடாது பல்லவரே!
//

கண்டிப்பா பல்லவனுக்கு கன்வே பண்ணிடுறேன் !!

CA Venkatesh Krishnan said...

// இராகவன் நைஜிரியா said...

இளைய பல்லவரே நீங்க சரிய செய்யவில்லை என்றால் நம் கணக்கர்கள் அனைவருக்கும் இழுக்கு என்பதை தெரிந்துகொண்டு சமத்தா நடந்து கொள்ளுங்கள்.//

அப்படியே ஆகட்டும் தலைவரே !!!

CA Venkatesh Krishnan said...

//
Karthick said...

நண்பரே -
//

நிச்சயம் வந்து பார்த்துவிட்டு கருத்துக்களைத் தெரிவிக்கிறேன், கார்த்திக்.

CA Venkatesh Krishnan said...

நன்றி சின்ன அம்மணி !

CA Venkatesh Krishnan said...

நன்றி ஆதவன்,

ந்த் டைம் மன்னிப்பிற்கும் வரவேற்பிற்கும் !!

malar said...
This comment has been removed by the author.
malar said...

''''கார்போரேட் அக்கவுண்டன்ட் என்று ஒரு பிரிவு உண்டு''''''

அட போங்க சார் நாங்க பார்க்காத கார்போரேட் அக்கவுண்டா ?

CA Venkatesh Krishnan said...

// malar said...

''''கார்போரேட் அக்கவுண்டன்ட் என்று ஒரு பிரிவு உண்டு''''''

அட போங்க சார் நாங்க பார்க்காத கார்போரேட் அக்கவுண்டா ?//

மேடம் அது அக்கவுண்ட் இல்லைங்க, அக்கவுண்டன்ட் !!

Tamil Home Recipes said...

மிகவும் அருமையான பதிவு.

91001103021 said...

சீக்கிரம் ஆகட்டும் ம் ம்