Sunday, December 13, 2009

சாலையோர மரங்களை வெட்டுவது சரியா?

நேற்று நங்கநல்லூர் சிவன் கோவில் அருகே இருந்த ஒரு பெரிய மரம் வெட்டப்பட்ட காட்சியைக் கண்டதும் மனம் மிகுந்த வேதனையடைந்தது. அடடா? எவ்வளவு பெரிய மரம். அந்த மரம் காரணமாக அங்கே போக்குவரத்து நெரிசல் இருந்ததென்னமோ உண்மைதான். ஆனால் அதற்காக மரத்தை வெட்டிவிடுவதா? இப்படி மரத்தை வெட்டிவிட்டால் அதனால் கிடைக்கும் ஆக்சிஜன் என்னாவது? என்ற கோபமான கேள்வி எழாமல் இல்லை. ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் கீழ்கண்ட சிந்தனைகள் எழுந்தன.

அங்கிருப்பதோ ஒரு மரம். அதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கி கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) வெளியிடுகின்றன. ஒரு மரம் தன் வாழ் நாளில் ஒரு டன் கார்பன் டை ஆக்சைடை உட்கொள்வதாக ஒரு இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால் நெரிசலில் சிக்கும் வாகனங்கள் வெளியிடும் கரியமில வாயு அதைவிட அதிகமல்லவா? ஆகவே அந்த மரம் அங்கிருப்பதால், கிடைக்கும் நன்மையை விட தீமை அதிகமல்லவா?

அஃபாரஸ்டேஷன் (காடுமயமாக்கல்) என்பது வேறு, சாலையோரம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் மரங்களை நீக்குவது என்பது வேறு என்று நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??

8 comments:

Prabhu said...

சரிதான்!

CA Venkatesh Krishnan said...

Thanks Pappu for your views!!!

ஜெட்லி... said...

அதுக்கு பதில் நாம் ஆளுக்கு ஒரு அஞ்சு மரம்
நடுவோம்... வேற என்ன செய்வது...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நான்கு வழிச் சாலைகளின் நடுவில் பெரிய பெரிய செடிகள் நட்டுவைத்திருக்கிறார்களே..,

இரவில் எதிர்வரும் வாகனங்களின் வெளிச்சைத்தை தடுக்கின்றன.

பகலில் சுத்திகரிப்பு பணி செய்கின்றன..,

☀நான் ஆதவன்☀ said...

வெட்டும் முன் நீதிமன்றங்களின் அனுமதி பெற வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு பதிலாக நான்கைந்து மரங்களையும் நட வேண்டும் எனவும் நினைக்கிறேன்.

//அஃபாரஸ்டேஷன் (காடுமயமாக்கல்) என்பது வேறு, சாலையோரம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் மரங்களை நீக்குவது என்பது வேறு என்று நினைக்கிறேன்.//

அதே அதே!

CA Venkatesh Krishnan said...

நன்றி ஆதவனாரே!

CA Venkatesh Krishnan said...

நன்றி ஜெட்லி. அது நாம் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயம். ஆனால் எங்கே என்பதுதான் கேள்வி!

CA Venkatesh Krishnan said...

ஆமாம் தல. அந்தச் செடிகளோட வேலை, எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சத்தைத் தடுப்பதுதான்!