தூரத்தே தெரியும் மலைகள்
அருகே விரியும் வயல்கள்
சற்றே நெளியும் ஓடை - அவை
யாவிலும் இல்லை கவனம்
செவியில் கேட்கும் மழலை
ஆசையாய் பேசும் மனைவி
காலைச் சுற்றும் பூனை - எதுவும்
தொடவில்லை என்னை
இருந்தும் இல்லாமல் இருக்கும்
இன்றைய வாழ்வின் நிலைக்கும்
நேற்றைய பொழுதின் சிந்தனை - அதுவும்
அண்டவில்லை என்னை
இன்பம் இல்லா வாழ்வென
துன்பத்தில் மனம் தினம் வாட
கண்ணெதிரே இருக்கும் நீரை மறுத்து
கானலுக்கேங்கும் மனிதா
உன்னுள் தேடு
உண்மை தேடு
உன்னைத் தேடு
8 comments:
அருமை நண்பரே
நல்ல கவிதைங்க...அழகான வரிகள்...
நன்றி தர்ஷன்!
நன்றி உமா!!
என்னங்க ரெண்டு பேரும் ஒரே(ஒரு) மாதிரியான கவிதையா எழுதிருக்கோம். சியர்ஸ்!
நல்லாருக்கு!
பேக் டூ த பாஃம் :)
உரையாடல் கவிதை போட்டி நடக்குது. தெரியும்ல தலைவரே?
அட ஆச்சரியமா இருக்கே பப்பு! !
சியர்ஸ் டூ..
வாங்க ஆதவன்
உரையாடல் கவிதைப் போட்டியா???
அது என்ன தெரியாதே...
Post a Comment