Friday, October 3, 2008

நான் எழுத நினைப்பதெல்லாம் . . . .


எனக்குத்தான் இப்படி நடக்கிறதா...

நான் என்ன எழுத நினைக்கிறேனோ அதையே மற்றவர்கள் செய்து விடுகின்றனர்.

உதாரணமாக, நான் ஒரு சரித்திரத் தொடர் கதை எழுதலாம் என்றிருந்தேன்.

ஆனால் பாருங்கள், நர்சிமும், லக்கியும் முதலிலேயே துவக்கி விட்டனர்.:-((

ஆனாலும் நான் ஒரு சரித்திரத் தொடர்கதை எழுதப் போகிறேன்.

கதைக் களம்.. முக்கியமாகக் காஞ்சிபுரம். இதைப் பற்றிய கர்டெயின் ரைசரைப் படிக்கத்தவறாதீர்கள்.

கதைக் காலம்.. 14-15ம் நூற்றாண்டு.

கதைக் கரு... நகரேஷு காஞ்சி என்று, புராணங்களிலும், இதிகாசங்களிலும், பல்வேறு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்நகரம், தன் பெருமையை ஆற்காட்டிடமும், செஞ்சியிடமும், வேலூரிடமும், சென்னையிடமும் இழந்த்தது ஏன்?


பொருத்தமான தலைப்பைக் கூறுங்களேன்...

* * * * * * * * * * * * * * * * * * * * *

கூட்டாஞ்சோறு, அவியல், பொரியல் என்று ஆளாளுக்கு கலந்து கட்டுகிறார்களே என்று நானும், கதம்பம் என்று ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் பாருங்கள், ஒருவர் கதம்பம் என்று எழுத ஆரம்பித்து விட்டார் :-((

நானும் விடப் போவதில்லை. என்ன தலைப்பு வைக்கலாம் ? என்று யோசித்த போது,

மினி மீல்ஸ்

மினி டிபன்

மிக்சர்

ஃப்ரூட் சாலட்

என்றெல்லாம் யோசனை வந்தது. ஆனால் பாருங்கள், இவற்றில் எதுவும்
தமிழ்ப் பெயர் இல்லை. தமிழ்ப் படுத்தினால், சிறு சாப்பாடு என்றோ, சிறு சிற்றுண்டி என்றோ, கலவை என்றோ, பழக்குழவி என்றோ எழுத வேண்டும்..:-))

என்ன செய்வது?
.
.
.
.
உம்... மாத்தி யோசி....
.
.
.
மாத்தி யோசிக்கும் போது தான் , வானவில் என்று தோன்றியது.
ஆம். நான் எழுதப் போகும், கூட்டாஞ்சோறு, அவியல், கதம்ப மேட்டருக்குப் பெயர்,

'வான வில்'.

இது வானவில் .. என் எண்ணங்களின் வண்ணங்கள்.


வழக்கம் போல் உங்கள் மேலான ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன்.

10 comments:

குடுகுடுப்பை said...

பழைய பல்லவன்

CA Venkatesh Krishnan said...

//
குடுகுடுப்பை கூறியது...
//

டாங்கீஸ்

thamizhparavai said...

'காஞ்சிக் காதலி'(ஒரு கிளுகிளுப்புக்கு)
'காஞ்சியின் கதை'(பொத்தாம் பொதுவா)
'காஞ்சியும்,கடமையும்'(அரசியலாக இருந்தால்)
'காஞ்சி காத்த வீரன்'(வீரத்தை முன்னிறுத்தினால்)

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆதரவு உண்டு... வழக்கம் போல

CA Venkatesh Krishnan said...

//
தமிழ்ப்பறவை
//

தலைப்பு தந்த தங்கமே ! ! !

நன்றி

CA Venkatesh Krishnan said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
ஆதரவு உண்டு... வழக்கம் போல

//

நன்றி . . .

வழக்கம் போல . . .

☀நான் ஆதவன்☀ said...

என் ஆதரவு எப்போதும் உண்டு பல்லவன். சீக்கிரமே எழுதி கலக்குங்க...
ஆனா ஒரு குறிப்பிட்ட கிழமையில் வெளியிடுற மாதிரி பாத்துக்குங்க, ஏன்னா படிக்க வசதியாயிருக்கும்

http://urupudaathathu.blogspot.com/ said...

//////நான் ஆதவன் கூறியது..ஆனா ஒரு குறிப்பிட்ட கிழமையில் வெளியிடுற மாதிரி பாத்துக்குங்க, ஏன்னா படிக்க வசதியாயிருக்கும்///////


வழி மொழிகிறேன்......

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...

//

மிக்க நன்றி.

நிச்சயமாக குறிப்பிட்ட நாளில் வெளிவர முயற்சிக்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...

வழி மொழிகிறேன்......
//

நன்றி அணிமா