என்னை இந்த ஆட்டத்திற்குள் சேர்த்த அணிமாவுக்கு நன்றிகள் பல. இந்த நேரத்தில் என்னுடைய சினிமா பற்றிய ஒரு தொடர் அதாவது 'பழைய படம் - புதிய பார்வை' பற்றிய அறிவிப்பைச் செய்வதில் மகிழ்ச்சி.இனி நேரடியாகக் கேள்வி பதில்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்பது ஞாபகம் இல்லை. ஆனால் நினைவு தெரிந்து பார்த்தது புரட்சித் தலைவரின் முகராசி. வந்தவாசி பாலன் திரையரங்கம் என்று நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளைக் கைத்தட்டி ரசித்தது நினைவில் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா டூயட்டை அதிசயமாகப் பார்த்ததாக நினைவு.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம். சத்யம் திரையரங்கில் பார்க்க வேண்டுமென்பதற்காக இ-புக்கிங் செய்து பார்த்தேன். செலவுதான் கையைக் கடித்து விட்டது :((
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
என்னுடைய மடிக் கணினியில், ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் பார்த்தேன். ஐரோப்பாவில் எடுக்கப் பட்ட முதல் படம் என்று நினைக்கிறேன். அருமையான கதை. ஆனால் தவறான கதா நாயகன். எம்.ஜி.ஆர் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்ற எண்ணம் உள்ளது.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
சட்டென்று நினைவிற்கு வருவது உன்னால் முடியும் தம்பி.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
என்னை நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தமிழ்ச் சினிமா-அரசியல் சம்பவமும் தாக்கியதாகத் தெரியவில்லை. உலகம் சுற்றும் வாலிபன், அண்ணாமலை, பாபா முதலியவை காலம் காலமாக நடந்து வருபவை. அவை மேலும் தொடரக் கூடும் என்றுதான் நினைக்கிறேன்.
திருவிளையாடல் தருமியைப் போல் சொன்னால் சேர்ந்தே இருப்பது, தமிழ் சினிமாவும் அரசியலும். ;-))
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
தொழில் நுட்பம் என்பது 'ரிலேடிவிடி தியரி' அல்லது 'இரு கோடுகள்' தத்துவம் போன்றது.
சரியான தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் வந்த கர்ணனின் படங்கள் மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். கர்ணனின் ஒளிப்பதிவுத் திறமை என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் :0). ஜம்பு, எங்க பாட்டன் சொத்து முதலிய படங்கள் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
வண்ணத்திரை, சினிமா எக்ஸ்ப்ரஸ் ஆகிய சினிமா சம்பந்தப் பட்ட பத்திரிகைகளை வாசிக்காவிட்டாலும், எங்கே எப்போது சினிமா பற்றிய செய்தி வந்தாலும் வாசிக்கத் தவறுவதில்லை. அது, கிசுகிசுவாகட்டும் அல்லது புதுப்படம் பற்றிய தகவலாகட்டும்.
7.தமிழ்ச்சினிமா இசை?
நிச்சயமாக இளையராஜா.
தமிழ்ச் சினிமா இசை என்றாலே நம் நினைவுக்கு வருவது பாடல்கள்தான். அதையும் தாண்டி, பின்னணி என்று ஒன்று இருப்பதைக் காட்டியவர் இளையராஜாதான். இசையின் அனைத்துப் பரிமாணங்களையும் பாமரனும் ரசிக்கும் வண்ணம் காட்டியதில் அவருக்கு நிகர் அவர்தான்.
ஒரு பார்த்திபன் படத்தில் 'இசை அலயஸ் இளையராஜா' என்று போட்டிருப்பார்கள். இது உண்மை.
மற்றபடி தமிழ்ச் சினிமாவும், தமிழ்ச்சினிமா இசையில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு மிகச் சிறந்த பரிணாம வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டுகள்.
60-70 பாடல்களாக இருந்தது, 10-12 பாடல்களாகக் குறைந்து, இப்பொழுது 5 பாடல்கள் இருந்தாலே அதிகம் என்ற நிலையில் இருக்கிறது.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆந்திராவில் இருந்த போது அதிகமாகத் தெலுங்குப் படங்கள் பார்த்திருக்கிறேன். சி.ஏ. படிக்கும் போது தில்வாலே துலனியா லே ஜாயேங்கே மொழியே தெரியாமல் 6 முறை பார்த்திருக்கிறேன் :)
உலகச் சினிமாக்கள் என்ற வரிசையில் பார்க்க ஆரம்பித்தது குங்க் ஃபூ படங்களைத்தான்.
சமீபத்தில் வேர்ல்ட் சினிமா சேனலில் தி வொயிட் பலூன் என்ற ஈரானிய மொழிப்படம் பார்த்தேன். என்னை மிகவும் பாதித்த படம். இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு நிச்சயம் உண்டு.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
எங்கள் ஊரில் நடைபெற்ற வைதேகி காத்திருந்தாள் ஷூட்டிங்கை எட்டி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். பிறகு ஏகாம்பர நாதர் கோவிலில் நடைபெற்ற இன்னொரு விஜயகாந்த் ஷூட்டிங்கையும் பார்த்திருக்கிறேன். விசாகப் பட்டினத்தில் நடைபெற்ற ரமணா ஷூட்டிங்கின் ஃபைட் காட்சியை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். (அட. எல்லாமே விஜயகாந்த் படங்கள்.;-))
மீண்டும் ஷூட்டிங்க் பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் நேரமிருந்தால் செய்யலாம்.
தமிழ் சினிமா மேம்பட இது உதவுமா என்று நீங்கள் தான் கூற வேண்டும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒன்றும் தோன்ற வில்லை.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு பெரிதாக ஒன்றும் நேராது. சன் டிவிக்கு மகிழ்ச்சியாக இருக்கும் (கலைஞர் டி விக்கு புதுப்படம் கிடைக்காதே). நாடகத்துறை வளர்ச்சியுறும் என்று நினைக்கிறேன். மாறாக 24 மணி நேர மெகா சீரியல் சேனல்கள் வர வாய்ப்புள்ளது.
இந்தச் சங்கிலியைத் தொடர இவர்களை அழைக்கிறேன்.
1. நான் ஆதவன்
2. வெங்கடராமன்
3. டாக்டர் ப்ரூனோ
4. கோவியார்
5. வாத்தியார்
நன்றி ! ! !
40 comments:
அழைப்புக்கு நன்றி !
நாளை பதிவிடுகிறேன்
அது எம்ஜிஆருக்காக செஞ்ச கதைதான். ஒரு பத்திரிகை விளம்பர பிரச்சினையினால்(இதுக்கு சாதா விளம்பரமும், காதலிக்க நேரமில்லைக்கு கலர் விளம்பரமும் ஸ்ரீதர் சார் கொடுத்ததால்) அவர் தப்பா எடுத்துக்கிட்டு, நடிக்க முடியாதுன்னு சொன்ன படம். ஆனா இந்தப்படம் ஒரு நல்ல வெற்றிப் படம்னு எங்கம்மா சொல்லுவாங்க
//எனக்கு பெரிதாக ஒன்றும் நேராது. சன் டிவிக்கு மகிழ்ச்சியாக இருக்கும் (கலைஞர் டி விக்கு புதுப்படம் கிடைக்காதே). //
:):):)
நல்லாருக்கு..!! :))))
கண்டிப்பாக பதிவிடுகிறேன்
//மாறாக 24 மணி நேர மெகா சீரியல் சேனல்கள் வர வாய்ப்புள்ளது.//
ஆகா !!!
பயமாக இருக்கு :)
//
கோவி.கண்ணன் கூறியது...
அழைப்புக்கு நன்றி !
நாளை பதிவிடுகிறேன்
//
நன்றி கோவி.கண்ணன்
அழைத்ததற்கு நன்றி பல்லவன். கண்டிப்பாக நாளை பதிவிடுகிறேன்.
இனி நேரடியாகக் கேள்வி பதில்.////
என்ன இப்படி சட்டு புட்டுன்னு மேட்டர்க்கு வந்துடீங்க..
நான் இன்னும் நிறைய டிரைலர் எதிர்பார்த்தேன்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா டூயட்டை அதிசயமாகப் பார்த்ததாக நினைவு.///
அது அதிசயம் தானே ?/
செலவுதான் கையைக் கடித்து விட்டது :((///
ஏன் படம் உங்க மண்டைய கடிக்கலையா??
வணக்கம் நண்பரே ..பதிவு ..ரொம்ப அருமையா இருக்கு ...நல்ல பதில்கள்
வாழ்த்துக்கள்..இனியும் இது போல நிறைய பதிவுகள் இட ..
// உருப்புடாதது_அணிமா கூறியது...
செலவுதான் கையைக் கடித்து விட்டது :((///
ஏன் படம் உங்க மண்டைய கடிக்கலையா??//
குசும்பு ..குசும்பு ...
நன்றாக இருந்தது உங்களின் சினிமா பயணம்..
ரசித்தேன் ..
கோரிக்கையை ஏற்று பதிவு இட்டதற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
இதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்ற எண்ணம் உள்ளது. ///
பதிவு எழுத ஐடியா குடுத்துருக்கேன்..
ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்ல ??
//
rapp கூறியது...
அது எம்ஜிஆருக்காக செஞ்ச கதைதான்.
//
முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராப்.
தொடர்ந்து வாங்க
அதே வைதேகி காத்திருந்தாள் படபதிவை அதே ஏகாமபரர் கோயில் நானும் பார்த்திருக்கேன். பக்கத்தில் தான் இருந்திருப்பீங்க போலிருக்கு !
இன்னமும் காஞ்சியில்தான் இருக்கீங்களா ?
//
கோவி.கண்ணன் கூறியது...
அழைப்புக்கு நன்றி !
நாளை பதிவிடுகிறேன்
//
தொடர் சங்கிலிப் பதிவிட்ட கோவி.கண்ணன் அவர்களுக்கு நன்றி.
//
ஸ்ரீமதி கூறியது...
நல்லாருக்கு..!! :))))
//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீமதி
//
புருனோ Bruno கூறியது...
கண்டிப்பாக பதிவிடுகிறேன்
//
நன்றி டாக்டர்
//
புருனோ Bruno கூறியது...
//மாறாக 24 மணி நேர மெகா சீரியல் சேனல்கள் வர வாய்ப்புள்ளது.//
ஆகா !!!
பயமாக இருக்கு :)
//
ஆமாம். அப்படியெல்லாம் கேள்வி கேட்டா இப்படியெல்லாம் யோசிக்கத் தோணுமில்ல :)
//
நான் ஆதவன் கூறியது...
அழைத்ததற்கு நன்றி பல்லவன். கண்டிப்பாக நாளை பதிவிடுகிறேன்.
//
நன்றி ஆதவன்
//
உருப்புடாதது_அணிமா கூறியது...
இனி நேரடியாகக் கேள்வி பதில்.////
என்ன இப்படி சட்டு புட்டுன்னு மேட்டர்க்கு வந்துடீங்க..
நான் இன்னும் நிறைய டிரைலர் எதிர்பார்த்தேன்
//
அடடா.. சாரிங்க..
விடுங்க. ட்ரைலர் என்ன.. தனியாவே சினிமாஸ்கோப்ல படம் காட்டிடுவோம் ;-)
ஆஹா..
நானும் குவார்ட்டர் போட்டுட்டனுங்கோ.
இது என் பதிவில் வரும் முதல் 25வது பின்னூட்டம்.
எல்லோருக்கும் நன்றிங்க.
கலக்கிட்டீங்க போங்க, 24 மணி நேரம் மெகா சீரியல் நல்ல்தா போச்சு. நாம எங்கனா ஓடிரலாம்.
//
உருப்புடாதது_அணிமா கூறியது...
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா டூயட்டை அதிசயமாகப் பார்த்ததாக நினைவு.///
அது அதிசயம் தானே ?/
//
அப்படியா, இது வரைக்கும் தெரியாம போச்சே :)
//
உருப்புடாதது_அணிமா கூறியது...
செலவுதான் கையைக் கடித்து விட்டது :((///
ஏன் படம் உங்க மண்டைய கடிக்கலையா??
//
தெரியலையேப்ப்ப்ப்ப்ப்பா........ (நாயகன் கமல்)
//
Vishnu... கூறியது...
வணக்கம் நண்பரே ..பதிவு ..ரொம்ப அருமையா இருக்கு ...நல்ல பதில்கள்
வாழ்த்துக்கள்..இனியும் இது போல நிறைய பதிவுகள் இட ..
//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் விஷ்ணு
//
Vishnu... கூறியது...
// உருப்புடாதது_அணிமா கூறியது...
செலவுதான் கையைக் கடித்து விட்டது :((///
ஏன் படம் உங்க மண்டைய கடிக்கலையா??//
குசும்பு ..குசும்பு ...
//
ஆமாங்க.. இல்லைன்னா என்ன பதிவு போட கூப்டுருப்பாரா ;-)
//
உருப்புடாதது_அணிமா கூறியது...
நன்றாக இருந்தது உங்களின் சினிமா பயணம்..
//
நன்றி அணிமா..
அப்படியே நம்ம சக்கரவியூகத்தையும் படிச்சிட்டு கருத்துரையிடுங்க
//
உருப்புடாதது_அணிமா கூறியது...
கோரிக்கையை ஏற்று பதிவு இட்டதற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
//
உங்க நன்றிக்கு நன்றிங்க. ;-))))))
//
உருப்புடாதது_அணிமா கூறியது...
இதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்ற எண்ணம் உள்ளது. ///
பதிவு எழுத ஐடியா குடுத்துருக்கேன்..
ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்ல ??
//
ஐடியா வர வாய்ப்பளித்த அணிமாவுக்கு ஒரு நன்றி ப்ளஸ் ஒரு 'ஓ'
போதுமா, இன்னும் வேணுமா :)))
//
An& கூறியது...
அதே வைதேகி காத்திருந்தாள் படபதிவை அதே ஏகாமபரர் கோயில் நானும் பார்த்திருக்கேன். பக்கத்தில் தான் இருந்திருப்பீங்க போலிருக்கு !
இன்னமும் காஞ்சியில்தான்
//
அட ஆச்சரியமா இருக்கே.. விஜயகாந்த் ஷூட்டிங்க பார்த்த இரண்டு பேர் பதிவுலகத்தில இருக்கோம்.
இப்ப இருப்பது சென்னையில். நீங்க காஞ்சிபுரத்திலா.
நான் படிச்சது ஆண்டர்சன்ல. நீங்க?
//
குடுகுடுப்பை கூறியது...
கலக்கிட்டீங்க போங்க, 24 மணி நேரம் மெகா சீரியல் நல்ல்தா போச்சு. நாம எங்கனா ஓடிரலாம்.
//
நன்றி குடுகுடுப்பை.
பின்ன என்னங்க. டி வி யில எதையாவது போடணும், எதையாவது பார்க்கணும்.
அதான் டி வி காரங்களுக்கு ரெண்டு தானே தெரியும். சினிமா விட்டா மெகா சீரியல். ;-))
அதே ஆண்டர்சன் தான். 6 ல் இருந்து 12 வது வரைக்கும்
உங்களின் மெயில் முகவரி என்ன ?
//
An& கூறியது...
அதே ஆண்டர்சன் தான். 6 ல் இருந்து 12 வது வரைக்கும்
உங்களின் மெயில் முகவரி என்ன ?
//
ப்ரொஃபைலில் என்னுடைய மெயில் ஐ.டி. சேர்த்துள்ளேன்.
அன்புடையீர்,
தங்களுடைய இரண்டாவது அத்தியாயம் படித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
வாழ்த்துக்கள்.தொடர்ந்து இதே போல் எழுதவும்
// சுபா. கூறியது...
அன்புடையீர்,
தங்களுடைய இரண்டாவது அத்தியாயம் படித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
வாழ்த்துக்கள்.தொடர்ந்து இதே போல் எழுதவும்//
நன்றி சுபா,
தொடர்ந்து வாங்க.
40
Post a Comment