இது ஒரு ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ப்படுத்தப் பட்ட சொல். இது தமிழ்ப்படுத்துவதா... இல்லைன்னா தமிழைப் படுத்துவதா... யாராவது சொல்லுங்களேன்.
சென்னையின் ஒரு முக்கியமான இடத்தில் இந்த தமிழாக்கத்தைப் பார்த்தேன். முதலில் ஆங்கில சொல்லுக்கும் இதற்கும்
சம்பந்தமே இல்லாதது போல் தெரிந்தாலும், மண்டையைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து யோசித்ததில் திடீரென இதன் தமிழாக்கப் பின்னணி புரிந்தது.
அதாவது 'ஃபிசிகல்லி சேலஞ்ச்டு' என்பதைத் தமிழ்ப் படுத்தி இருக்கிறார்கள்.
ஃபிசிகல்லி - ' ஃபிசிகல்' - மெய். ஆகவே ஃபிசிகல்லி - மெய்ப்புல.
சேலஞ்ச்டு - 'சேலஞ்' - அறைகூவல் - ஆகவே சேலஞ்ச்டு - அறைகூவலர்.
எனவே,' ஃபிசிகல்லி சேலஞ்ச்டு' - மெய்ப்புல அறைகூவலர். நேரடித் தமிழாக்கம்.
அடங்கொக்கா மக்கா... இப்படியெல்லாமா தமிழ்ப் படுத்துவாங்க.
அதனாலதான் கேக்கறேன். இது தமிழ்ப்படுத்துவதா... இல்லைன்னா தமிழைப் படுத்துவதா.
யாராவது சொல்லுங்களேன்.
11 comments:
நான் முன்னர் பயன்படுத்திய சொல் - ஊனமுற்றவர்கள் (handicapped)
தற்போழுது பயன்படுத்தும் சொல் - மாற்றுத்திறனுடைவர்கள் (differently abled)
ஆங்கிலத்தில் தற்சமயம் பயன்படுத்தப்படும் சொல் - special needs
--
மற்றப்படி
நீங்கள் பார்த்தது போல் பலர் மொழிபெயர்ப்பில் குளறுபடி செய்து கொண்டிருக்கிறார்கள். challenge என்ற சொல்லின் ஆங்கில அர்த்தத்தை பார்த்து அதை அப்படியே எடுத்துக்கொண்டதால் வந்த வினை இது
இது போல் அபத்த மொழிபெயர்ப்பின் சில உதாரணங்களை என் பதிவிலும் காணலாம்
சென்னை விமான நிலையத்தில்தான் இதைப் பார்த்தேன். நல்ல வேளையாக ஆங்கிலத்தில் இதை Physically Challenged என்று எழுதி இருந்ததால் புரிந்துகொள்ள முடிந்தது. தூய தமிழில் தருவதற்கு பதிலாக, ஆர்வக்கோளாறில் தவறாக மொழிபெயர்ப்பதன் விளைவு இது. பேசாமல் ‘உடல் ஊனமுற்றவர்களுக்காக' என்று எழுதி இருக்கலாம்.
//
புருனோ Bruno கூறியது...
நான் முன்னர் பயன்படுத்திய சொல் - ஊனமுற்றவர்கள் (handicapped)
//
வருகைக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி, டாக்டர் சார்.
உங்கள் பதிவும் மிக அருமை.
இதையெல்லாம் பெரும்பாலும் செய்வது நடுவண் அரசின் துறைகள் தான்.
ஏதோ ஒரு காலத்தில் படித்து விட்டு இப்போது மனம் போன போக்கில் தமிழ்ப் படுத்திவிடுகிறார்கள்.
யார் கேட்கப் போவது என்ற எண்ணம்தான்.
//
பெயரில்லா கூறியது...
சென்னை விமான நிலையத்தில்தான் இதைப் பார்த்தேன்
//
நன்றி பெயரில்லா.
நானும் சென்னை விமான நிலையத்தில் தான் பார்த்தேன்.
வேறெங்கும் இதைப் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.
http://elavasam.blogspot.com/2008/08/blog-post_28.html
இதையும் பாருங்க!!
//
இலவசக்கொத்தனார் கூறியது...
http://elavasam.blogspot.com/2008/08/blog-post_28.html
இதையும் பாருங்க!!
//
முதல் வருகைக்கு நன்றி கொத்ஸ் :)
நீங்க முந்திக்கிட்டீங்களே.
மேல சொன்னா மாதிரி சென்னை விமான நிலையம் தவிர வேறெங்கயும் இதைப் பார்க்க முடியாதுன்னு தோணுது.
//சென்னை விமான நிலையத்தில்தான் இதைப் பார்த்தேன். நல்ல வேளையாக ஆங்கிலத்தில் இதை Physically Challenged என்று எழுதி இருந்ததால் புரிந்துகொள்ள முடிந்தது. தூய தமிழில் தருவதற்கு பதிலாக, ஆர்வக்கோளாறில் தவறாக மொழிபெயர்ப்பதன் விளைவு இது. பேசாமல் ‘உடல் ஊனமுற்றவர்களுக்காக' என்று எழுதி இருக்கலாம்.//
இதேதான் நான் பார்த்த இடமும் கருத்தும்
சிவாஜி முதலான பெயர்சொற்களை தமிழ் என்றே கருதி வரி விலக்கு அளிக்கலாம் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளது இவர்கள் காதுக்கு எட்டவில்லையோ என்னவோ!
//
குடுகுடுப்பை கூறியது...
இதேதான் நான் பார்த்த இடமும் கருத்தும்
//
நன்றி, குடுகுடுப்பை.
நானும் வழிமொழிகிறேன்.
//
அழகிய தமிழ்மகன் கூறியது...
சிவாஜி முதலான பெயர்சொற்களை தமிழ் என்றே கருதி வரி விலக்கு அளிக்கலாம் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளது இவர்கள் காதுக்கு எட்டவில்லையோ என்னவோ!
//
நன்றி,அழகிய தமிழ்மகன் :-))
அண்ணா நூற்றாண்டு நூலகத்துல இப்படி தான் பயன்படுத்துறாங்க.(braille-மெய்ப்புல அறைகூவலர்)
Post a Comment