அன்பு நண்பர்களே, வேலண்டைன்ஸ் டே என்பது என் நினைவிற்குத் தெரிந்த வரையில் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாகத்தான் இந்தியாவில் கொண்டாடப் பட்டு வருகிறது.
காதலர்களுக்காக உயிர் துறந்த செயிண்ட்.வேலண்டைன் என்பவரின் நினைவாகத்தான் இந்த நாள் கொண்டாடப் பட்டு வருகிறது.
ஆனால் தொடர் வணிகமயமாக்கலினால் காதலர் தினம் மட்டுமல்லாது மகளிர், அன்னையர், தந்தை, முதலிய அனைத்து தினங்களும் விழாவைப் போலவும், அன்று கொண்டாட வேண்டுமென்பதைப் போலவும் வழக்கப் படுத்திவிட்டனர். இது வியாபார நோக்கம்தான் என்பது தெள்ளத் தெளிவான ஒன்று.
காதலர் தினத்தில் என்ன செய்யவேண்டும். இன்று காதலைச் சொல்ல நல்ல நாளா? இன்று மட்டும் நாம் காதலர் என்று உறுதி செய்து கொள்ள வேண்டுமா? இன்று காதலர்கள் சேர்ந்து ஊர் சுற்ற வேண்டுமா? பப், ஹோட்டல், டிஸ்கொதே போன்ற இடங்களில் டான்ஸ் ஆட வேண்டுமா? இதுதான் காதலர் தினத்தை கொண்டாடும் முறையா?
காதலர் தினம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் காதலர்கள்தான். இன்று ஒரு நாள் மட்டும் காதலித்துவிட்டு காதலுக்கு இழுக்கைத் தேடித்தராதீர்கள். காதல் உணர்வு பூர்வமானது. அது வருடத்திற்கு ஒரு நாள் வந்து போகும் நினைவல்ல.
செயிண்ட் வேலண்டைனுக்கு வணக்கம் செலுத்தும் வேளையிலே உலகெங்கிலும் வெறுப்பு மறைந்து காதல் மலர உறுதி பூணுவோம்.
10 comments:
// காதல் உணர்வு பூர்வமானது. அது வருடத்திற்கு ஒரு நாள் வந்து போகும் நினைவல்ல. //
சரியாகச் சொன்னீர்கள் பல்லவரே..
எப்போதுதான் இது புரியப் போகின்றதோ இவர்களுக்கு...
// இது வியாபார நோக்கம்தான் என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. //
இது மாதிரி வியாபர நோக்கமாக்கப் பட்ட ஒன்று, அட்சயதிருதியை...
சிறு வயதில் நான் கேள்விபட்டதெல்லாம், கும்பகோணத்தில், 12 கருட சேவை மட்டும்தான். இப்போதான் இதை ஒரு திருவிழா கணக்கா மாற்றி, மக்கள் சொத்துக்களை கொள்ளை அடிச்சிகிட்டு இருக்கிறாங்க...
//ஆனால் தொடர் வணிகமயமாக்கலினால் காதலர் தினம் மட்டுமல்லாது மகளிர், அன்னையர், தந்தை, முதலிய அனைத்து தினங்களும் விழாவைப் போலவும், அன்று கொண்டாட வேண்டுமென்பதைப் போலவும் வழக்கப் படுத்திவிட்டனர். இது வியாபார நோக்கம்தான் என்பது தெள்ளத் தெளிவான ஒன்று.//
நச்சுன்னு சொல்லி இருக்கேங்க நண்பா..
//காதலர் தினம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் காதலர்கள்தான். இன்று ஒரு நாள் மட்டும் காதலித்துவிட்டு காதலுக்கு இழுக்கைத் தேடித்தராதீர்கள். காதல் உணர்வு பூர்வமானது. அது வருடத்திற்கு ஒரு நாள் வந்து போகும் நினைவல்ல.///
நியாயமான வார்த்தைகள்.. வாழ்த்துக்கள்..
எல்லாம் சரிங்க.. இந்த கணக்கு...வழக்கு அப்படின்னு ஆரம்பிச்சுங்களே... அது என்ன ஆச்சு?
என் மனைவியை இன்னும் நான் காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.. பதினான்கு ஆண்டுகளாக.. அவளும்தான்.. அதற்கு ஒரே காரணம், எங்களுக்கு தினமும் காதலர் தினம்தான்.. அவளுக்கு இன்று வரை நான் ரோஜாவை பரிசாகத் தந்ததே இல்லை.. வாடும் மலரை வாடா என் காதலுக்கு பரிசாக்க விரும்புவதில்லை நான்.. என்றுமே அவளுக்கு என் பரிசு.. கவிதைதான்.. அவளுக்கு நான் தந்த முதல் கவிதையைத்தான் இன்று என் வலைப்பதில் இணைத்திருக்கின்றேன்..
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி ராகவன் சார்.
யோசிச்சுப் பாத்தா நெறைய விஷயங்கள் வியாபாரமயமாக்கப்பட்டிருக்கு நம்மையறியாமலேயே. (இதையே ஒரு பதிவா போட்டுற வேண்டியதுதான் !)
நன்றி கார்த்திகைப் பாண்டியன்...
//
கிருஷ்ணா கூறியது...
என் மனைவியை இன்னும் நான் காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.. பதினான்கு ஆண்டுகளாக.. அவளும்தான்.. அதற்கு ஒரே காரணம், எங்களுக்கு தினமும் காதலர் தினம்தான்.. அவளுக்கு இன்று வரை நான் ரோஜாவை பரிசாகத் தந்ததே இல்லை.. வாடும் மலரை வாடா என் காதலுக்கு பரிசாக்க விரும்புவதில்லை நான்.. என்றுமே அவளுக்கு என் பரிசு.. கவிதைதான்.. அவளுக்கு நான் தந்த முதல் கவிதையைத்தான் இன்று என் வலைப்பதில் இணைத்திருக்கின்றேன்..
//
மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் கிருஷ்ணா அவர்களே !!!
சற்றேறக்குறைய நானும் இப்படித்தான்....
:))))
சுபா கூறியது,
காதலர் தினம் திருமணமான காதலர்கள் celebrate செய்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.Becausse
அலுவலம், வீடு என்று சுழன்று அலுத்து , tried ஆனவர் நிச்சியம் ஒரு change வேண்டும் என எதிர்ப்பார்கள்.இதை ஒரு வாய்ப்பாக enjoy செய்வதில் தவறில்லை.
Post a Comment