Wednesday, February 11, 2009

சிம்ரனும் நானும்

இது சினிமா நட்சத்திரம் சிம்ரனைப் பற்றியது அல்ல என்று நீங்கள் நினைத்திருப்பீர்களேயானால் உங்கள் ஊகம் மிகச் சரியானதே.
===
ஒரு நாள் வழக்கம்போல் காலையில் வந்து உள்பெட்டி(இன்பாக்ஸ்)யைத் திறந்து அலசிக்கொண்டிருக்கும் போது இந்த மெயில் வந்தது

டியர் .... (என் பெயர்)

ஹோப் யு ஆர் டூயிங் ஃபைன். ஐ ஆம் சிம்ரன் ஜாய்ன்ட் ஆஸ் மார்கெடிங் எக்சிகுடிவ் இன் ஜலந்தர். ஐ நீட் ஃபாலோவிங் இன்ஃபோ.

. .......

(இப்படியெல்லாம் எழுதிவிட்டு கடைசியில்)

வித் லவ் அண்ட் ரிகார்ட்ஸ்,
சிம்ரன்

====

அவ்வளவுதாங்க மெயில். உடனே சிம்ரன் கேட்ட இன்ஃபர்மேஷனை கஷ்டப்பட்டு கலெக்ட் செய்துவிட்டு பதில் அனுப்ப டைப் செய்யும் போதுதான் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஆனாலும் இப்படி டைப் செய்துவிட்டேன்.

டியர் சிம்ரன்,

தேங்க்ஸ் ஃபார் யுவர் மெயில். வெல்கம் டு ..... (எங்க கம்பேனி பேர்) ஃபேமிலி. தி இன்ஃபோ இஸ் அட்டாச்டு ஹியர்வித்.

ப்ளீஸ் கீப் இன் டச் ஃபார் ஃபர்தர் இன்ஃபோ.

(எப்படி முடிப்பது? சரி சிம்ரனைப் போலவே முடித்து விடலாம் என்று)

வித் லவ் அண்ட் ரிகார்ட்ஸ்,
(என் பெயர்)

====

இப்படி ஆரம்பித்த மெயில் போக்குவரத்து ரொம்ப நாள் தொடர்ந்தது. கடைசியில் ஒரு நாள் ஆடிட்டுக்காக ஜலந்தர் போகவேண்டியிருந்தது. அங்கு வருவதாகத் தகவல் சொல்லிவிட்டு சென்றேன். சிம்ரன் சில தகவல்களைக் கேட்க அதையும் நேரில் கொண்டு வருவதாக மெயில் அனுப்பினேன்.

====

முதல் நாள் ப்ராஞ்சுக்குப் போனால் சிம்ரன் லீவாம். அது சரி நாம் தான் 10 நாள் இங்கே இருப்போமே. வேலை நடந்து கொண்டிருந்தது. அடுத்த நாள்.

====

அலுவலகம் வந்து ஆடிட் ரூமில் ஆடிட் செய்து கொண்டிருக்கும் போது ஒரு சிங்கர் (சிங் - பஞ்சாபி) வந்தார். ஆஜானுபாகுவான என்று சொல்வது சற்று குறைத்து மதிப்பிடுவதைப் போல் இருந்தார்.

"குடு மார்ணிங்க் சாஆஆஅர்." என்று பஞ்சாபியில் சொல்லி பலமாகக் கையைப் பிடித்து ஆட்டினார். ஒரு வழியாகக் கையை விடுவித்துக் கொண்டு "குட் மார்னிங்." என்றேன் வலியை மறைத்துக் கொண்டு.

"ஹவ் யூ ப்ராட் த இன்ஃபர்மேஷன்ஸ் சார்" என்று தொடர்ந்தார் பஞ்சாபியில்.

"வாட் இன்ஃபர்மேஷன்ஸ்?"

"த ஒன் ஐ ஆஸ்க்டு இன் தட் மெயில்"

"மெயில்? யூ ஆர்...." (ஆஹா... சின்ன பொறி தட்டியது மனதுக்குள்)

"சாரி சார். ஐ ஃபர்காட் டு இன்ட்ரொடியூஸ் மைசெல்ஃப். ஐ ஆம் சிம்ரன். சிம்ரஞ்சித்சிங் மான்" என்று மீண்டும் கையை நீட்டினார் ஆவலோடு.

நான் தமிழ்ப் பண்பாட்டைக் காக்கவும் என் கைகளைக் காக்கவும் இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தேன்.

====

டிஸ்கி:- 1. இது சிறுகதை என்று வகைப் படுத்தப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.

2. இதன் மூலம் தெரிய வரும் கருத்து, சிங் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே பெயர்தான். கடைசியில் கவுர் என்று வந்தால் அது பெண். இல்லையென்றால் ஆண். உதாரணம் சிம்ரஞ்சித்சிங்க் கவுர் என்றால் பெண். சிம்ரஞ்சித்சிங்க் மான் என்றால் ஆண்.

19 comments:

நட்புடன் ஜமால் said...

தலைப்பே ...

Anonymous said...

:)))

Anonymous said...

சுபா கூறியது,
தாங்கள் அசடு வழிந்த்த சுய அநுபவமா?

கார்க்கிபவா said...

தக்லைப்பின் ப்தல் பாகத்துக்காக வந்தேன். ரெண்டாம் பாகத்துக்காக் பின்னூட்டம்

☀நான் ஆதவன்☀ said...

//2. இதன் மூலம் தெரிய வரும் கருத்து, சிங் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே பெயர்தான். கடைசியில் கவுர் என்று வந்தால் அது பெண். இல்லையென்றால் ஆண். உதாரணம் சிம்ரஞ்சித்சிங்க் கவுர் என்றால் பெண். சிம்ரஞ்சித்சிங்க் மான் என்றால் ஆண்.//

மொத்த பதிவே இதுக்குள்ள அடங்கிடுச்சு...அதுக்கு இவ்வளவு பில்டப்பா.

தலைப்பைப் பார்த்து படிக்கும் ஆசையோடு வந்த என்னை ஏமாற்றிய நீர் வாழ்க....

முரளிகண்ணன் said...

useful information

CA Venkatesh Krishnan said...

நன்றி ஜமால்,

முடிக்காம விட்டுட்டீங்க போல..

CA Venkatesh Krishnan said...

நன்றி அனானி,

நன்றி சுபா,

அதான் டிஸ்கிலயே தெளிவுபடுத்திட்டேனே. இது சிறுகதைன்னு. :))

Anonymous said...

// நான் தமிழ்ப் பண்பாட்டைக் காக்கவும் என் கைகளைக் காக்கவும் இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தேன். //

ஏமாற்றமா?? இல்லை கடுப்பா???

--Srinivas

CA Venkatesh Krishnan said...

//
கார்க்கி கூறியது...
தக்லைப்பின் ப்தல் பாகத்துக்காக வந்தேன். ரெண்டாம் பாகத்துக்காக் பின்னூட்டம்

//
வாங்க கார்க்கி,

தலைப்பின் முதல் பாகத்தைப் பாத்து தடுமாறினது உங்க பின்னூட்டத்திலேயே தெரியுதே.:))

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
//

வாங்க ஆதவன்.

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி...

CA Venkatesh Krishnan said...

Thanks Muralikannan

CA Venkatesh Krishnan said...

//
Srinivas கூறியது...

ஏமாற்றமா?? இல்லை கடுப்பா???

--Srinivas
//

கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்று என நான் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்!

Anonymous said...

சிறுகதைன்னு கத விடறீங்களா???

நல்லா இருக்கு.

சி தயாளன் said...

:-))

ஹையோ ஹையோ...

☀நான் ஆதவன்☀ said...

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

விகடன்ல வந்திருக்குங்கோ...
வாழ்த்துக்கள்

CA Venkatesh Krishnan said...

//
’டொன்’ லீ கூறியது...
:-))

ஹையோ ஹையோ...
//

ஆமா.. ஆமா..

எப்படிப்பட்ட அனுபவம் இந்த கதையில வர்றவருக்கு பாத்தீங்களா:>>>))

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
http://youthful.vikatan.com/youth/bcorner.asp

விகடன்ல வந்திருக்குங்கோ...
வாழ்த்துக்கள்
//

நன்றி ஆதவன்..

இந்த பதிவு வந்திருக்கா????

ஃபிகர் பதிவு முன்னாடியே வந்திருச்சி.

CA Venkatesh Krishnan said...

வாங்க வாங்க வந்து தொடருங்க...