Friday, February 13, 2009

மன சாட்சியும் அதன் ஒரே சாட்சியும்

உலகத்திலேயே.. ஏன்.. இந்த பிரபஞ்சத்திலேயே (நமக்குத் தெரிந்தவரை) உண்மை மட்டுமே பேசும் ஒரே சாட்சி அவரவர் மனசாட்சிதான். ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த மன சாட்சி பேசும் குரல் வெளியே கேட்காது. ஆகவே இந்த மனசாட்சிக்கு ஒரே சாட்சி நாம் தான். நாம் அந்த மனசாட்சியின் குரல் படி கேட்டு நடந்து கொண்டால் உண்மை மட்டுமல்லவா பேசிக் கொண்டிருப்போம். அப்படி நிகழ்ந்துவிட்டால் இந்த உலகமே அழிந்துவிடுமே!!!. இந்த உலகத்தைக் காக்கும் உயரிய எண்ணத்தில்தான் மனிதர்கள் மனசாட்சியின் குரலை புறந்தள்ளிவிட்டு தாங்கள் நினைப்பதை பேசுகிறார்கள்.

சரி.. விஷயத்திற்கு வருகிறேன்... (இனிமேல்தானா என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள். ஏனென்றால் என்னைப் பற்றிதான் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்குமே!). என் மன சாட்சிக்கும் அதன் ஒரே சாட்சியான எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.

மனசாட்சி: இன்னைக்கு என்ன கிழமை?

நான்: ஏன். இது கூட தெரியாம இவ்வளவு நாளா என்னோட வளந்திருக்க. ஹையோ. ஹையோ. இன்னைக்கு வெள்ளிக்கிழமை.

ம.சா.: நேத்து?

நான்: இன்னைக்கு வெள்ளின்னா நேத்து வியாழன் தான்.

ம.சா.: இரு மவனே. ரொம்ப துள்ளாத. முந்தா நேத்து.

நான்: ஹெ.. ஹெ.. புதன் கெழம. சரி நெக்ஸ்ட் கொஸ்டின்.

ம.சா: தெளிவாத்தான் இருக்கே. ஒவ்வொரு புதனும் என்னா பண்ணுவ?

நான்: வழக்கம் போலதான் இருப்பேன். இதுல என்ன கேள்வி (அவ்வ்வ்வ் மாட்டிக்கிட்டோம்டா)

ம.சா: இந்தவாரம் என்னாச்சு.

நான்: எதுக்கு?

ம.சா: இந்த வடிவேலு வேலையெல்லாம் ஆவாது மவனே. சொல்லு என்னாச்சு.

நான்: அது வந்து.. ஆமாம். மிஸ் ஆகிருச்சு.

ம.சா: அதான் தெரியுதே. புதன் விட்டா வியாழனாவது வருமே. ஏன் மிஸ் ஆச்சு.

நான்: ஆணிபுடுங்கவே நேரம் பத்தல.

ம.சா:அது எப்பவும் இருக்குறதுதானே. இப்ப என்ன புதுசா/

நான்:பெரிய பெரிய ஆணியெல்லாம் புடுங்க சொல்லிட்டாங்க. அதான்.

ம.சா: சரி ஜனங்களுக்கு என்ன சொல்லப்போற

நான்: இதான் சொல்லணும்.

ம.சா: பாத்து. இன்னொரு தடவ விட்டேன்னு வெச்சிக்க சரக்கு தீந்துருச்சு போலன்னு ஆயிரும். ஆமா.

நான்: சேச்சே.. அப்படில்லாம் ஆகாது. நம்மாளுங்களப் பத்தி எனக்குத் தெரியாதா?

ம.சா: இப்ப என்ன பண்ணப் போற.

நான்: வழக்கம் போல இதையும் ஒரு பதிவா போட்டு ஒப்பேத்திற வேண்டியதுதான்.

ம.சா: அடங்க மாட்டியா நீ. வேற ஏதாவது இடைக்கால நிவாரணம்.

நான்: ஒரு சர்தார்ஜி ஜோக் சொல்ல வேண்டியதுதான்.

ம.சா: சிம்ரனைப் பத்திதான் சொல்லிட்டியே.

நான்: அது வேற. இது வேற.

ம.சா: சரி. இன்னொரு முறை இது மாதிரி பண்ணாதே. வலையுலக அய்யாக்களே / அம்மாக்களே, இவருக்கு சமாளிப்புத் திலகம்னு ஒரு பட்டம் வேணும்னா கொடுத்துடுங்க. சும்மா உட்ராதீங்க.

நான்: ஓக்கே. ஓக்கே. தாங்க்ஸ்.
=====

இது தாங்க பேசினது. உண்மையாகவே மிக மிக அழுத்தும் பணிச்சுமையால் இந்த வாரம் 'சக்கர வியூகம்' எழுத முடியவில்லை. மன்னிச்சுக்குங்க. இடைக்கால நிவாரணமாக இந்த கதை.

=====

பண்டாசிங் அப்படிங்கறவர் எப்படியோ கஷடப்பட்டு கரீம்பாயோட கள்ளத்தோணி மூலமா நியூ யார்க் போயிடறார். அவருக்கு பஞ்சாபிதான் தெரியும். இங்கிலீஷ் ல யெஸ் நோ அப்படி இப்படின்னு ஒண்ணு ரெண்டு தெரியும். அங்க போய் எப்படியோ ஓடி ஒளிஞ்சு ஊருக்குள்ள போய் அப்பாடின்னு ஒக்காந்துக்குறார்.

அப்ப அந்த பக்கமா வர்ற நம்ம பழமைபேசியார் 'ஆர் யூ ரிலாக்சிங்க்?' அப்படின்னு கேக்குறார்.

அதுக்கு பண்டாசிங் ' நோ நோ. ஐ ஆம் பண்டா சிங்" அப்படின்றார்.

பழமை பேசி "அடங்கொண்ணியா.. !@#$%^&*()" ந்னு சொல்லிட்டு போயிடறார்.

அடுத்து ஆன்மீகச் செம்மல் கேயாரெஸ் வருகிறார். அவரும். 'ஆர் யூ ரிலாக்சிங்க்?' அப்படின்னு கேக்குறார்.

பண்டாசிங்கும் சளைக்காம ' நோ நோ. ஐ ஆம் பண்டா சிங்" அப்படின்றார்.

ஆன்மீகச்செம்மலுக்கு அளவிடமுடியாத கோபம். அவரும் "!@#$%^&*()" அப்படின்னுட்டு போயிடறார்.

அடுத்ததா வர்றார் குடுகுடுப்பையார். அவரும். 'ஆர் யூ ரிலாக்சிங்க்?' அப்படின்னு கேக்குறார்.

பண்டாசிங்கும் சளைக்காம ' நோ நோ. ஐ ஆம் பண்டா சிங்" அப்படின்றார்.

பழமைபேசி, கேயாரெஸ் சொன்னதையே ரிப்பீட்டுறார் குடுகுடுப்பையார். பண்டாசிங்குக்கு ஒரே குழப்பம். அடப்பாவி. எவனோ ரிலாக்சிங்குன்னுட்டு ஒருத்தன் நம்மள மாதிரியே இருப்பான் போல. இவங்கல்லாம் அவனுக்கு கடன் கொடுத்திருப்பாங்க போல. அதான் நம்மள தொறத்தறாங்க. இங்கேருந்து ஓடிருவோம்னு கெளம்பிட்டான்.

வழியில இன்னொரு சிங்கு உக்காந்திருக்கார். அவர் நல்லா படிச்சிருப்பார் போல. அவரைப் பாத்தவுடனே பண்டாசிங்க்,"ஆர் யு ரிலாக்சிங்" அப்படின்னு கேக்குறான்.

அந்த சிங்கும் "யெஸ்" அப்படின்றார்.

உடனே பண்டா சிங்க் "யோவ். உன்னைத் தேடித்தான்யா மூணு பேர் எங்கிட்ட வந்தாய்ங்க. அவங்களுக்கு பதில் சொல்லி என்னால முடியல. நீ இங்க உக்காந்திருக்கன்னு அவங்களுக்கு சொல்லக்கூடாது" அப்படின்றான்.

அதுக்கு அந்த சிங், நம்ம பதிவர்கள் சொன்னதையே ரிப்பீட்டிட்டு போயிடறார். அவ்வளவுதாங்க.

8 comments:

☀நான் ஆதவன்☀ said...

!@#$%^&*()....

☀நான் ஆதவன்☀ said...

மனசாட்சி: இன்னைக்கு என்ன கிழமை?

நான் ஆதவன்: ஏன். இது கூட தெரியாம இவ்வளவு நாளா என்னோட வளந்திருக்க. ஹையோ. ஹையோ. இன்னைக்கு வெள்ளிக்கிழமை.

ம.சா.: நேத்து?

நான்: இன்னைக்கு வெள்ளின்னா நேத்து வியாழன் தான்.

ம.சா.: இரு மவனே. ரொம்ப துள்ளாத. முந்தா நேத்து.

நான்: ஹெ.. ஹெ.. புதன் கெழம. சரி நெக்ஸ்ட் கொஸ்டின்.

ம.சா: தெளிவாத்தான் இருக்கே. ஒவ்வொரு புதனும் என்னா பண்ணுவ?

நான்: வழக்கம் போலதான் இருப்பேன். இதுல என்ன கேள்வி (அவ்வ்வ்வ் மாட்டிக்கிட்டோம்டா)

ம.சா: இந்தவாரம் என்னாச்சு.

நான்: எதுக்கு?

ம.சா: இந்த வடிவேலு வேலையெல்லாம் ஆவாது மவனே. சொல்லு என்னாச்சு.

நான்: அது வந்து.. ஆமாம். மிஸ் ஆகிருச்சு.

ம.சா: அதான் தெரியுதே. புதன் விட்டா வியாழனாவது வருமே. ஏன் மிஸ் ஆச்சு.

நான்: ஆணிபுடுங்கவே நேரம் பத்தல.

ம.சா:அது எப்பவும் இருக்குறதுதானே. இப்ப என்ன புதுசா

நான்:பெரிய பெரிய ஆணியெல்லாம் புடுங்க சொல்லிட்டாங்க. அதான்.

ம.சா: சரி பல்லவனுக்கு என்ன சொல்லப்போற

நான்: இதான் சொல்லணும்.

ம.சா:பார்த்து நீ மறந்திட்டு ஏன் போடலேன்னு கேட்காம இருந்தீன்னா அப்புறம் நீ "சக்கிர வியூகம்" படிக்கலைன்னு நினைச்சுப்பார்.

நான்:சேச்சே.. அப்படில்லாம் ஆகாது. இளையபல்லவனைப் பத்தி எனக்குத் தெரியாதா?

ம.சா: இப்ப என்ன பண்ணப் போற.

நான்: இதையே ஒரு பின்னூட்டமா போட்டு ஒப்பேத்திற வேண்டியதுதான்.

இராகவன் நைஜிரியா said...

ஆஹா...

இப்படி எல்லாம் ஒரு வழி இருக்குங்களா...

இராகவன் நைஜிரியா said...

// ம.சா: சரி. இன்னொரு முறை இது மாதிரி பண்ணாதே. வலையுலக அய்யாக்களே / அம்மாக்களே, இவருக்கு சமாளிப்புத் திலகம்னு ஒரு பட்டம் வேணும்னா கொடுத்துடுங்க. சும்மா உட்ராதீங்க. //

உங்க மனசாட்சி சொன்னதை அப்படியே ஆமோதித்து, உங்களுக்கு வலையுலக சமாளிப்பு திலகம் என்ற பட்டத்தை மிக்க மகிழ்ச்சியுடன் அளிக்கின்றோம்

CA Venkatesh Krishnan said...

நன்றி ஆதவன்,

இப்படி கூட உல்டா பண்ணலாம்னு தெரியப்படுத்திட்டீங்க.

சூப்பர்.

CA Venkatesh Krishnan said...

ஆமாம் ராகவன் சார்.

உங்க பட்டமளிப்புக்கு ரொம்ப நன்றி. அப்படியே பொற்கிழி, பணமுடிப்பு, சால்வைன்னு அனுப்பிவச்சிட்டீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்.....

இராகவன் நைஜிரியா said...

// இளைய பல்லவன் கூறியது...

ஆமாம் ராகவன் சார்.

உங்க பட்டமளிப்புக்கு ரொம்ப நன்றி. அப்படியே பொற்கிழி, பணமுடிப்பு, சால்வைன்னு அனுப்பிவச்சிட்டீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்.....//

நாங்கெல்லாம் பட்டம் மட்டும் தான் கொடுப்போம்..

அதுக்கு நீங்க, பணமுடிப்பு கொடுத்தா வாங்கிப்போம்..

CA Venkatesh Krishnan said...

//
இராகவன் நைஜிரியா கூறியது...
நாங்கெல்லாம் பட்டம் மட்டும் தான் கொடுப்போம்..

அதுக்கு நீங்க, பணமுடிப்பு கொடுத்தா வாங்கிப்போம்..
//

ஆஹா, ரொம்ப விவரமாத்தான் இருக்கீங்க..