இயற்கை
இயற்கையாக இருப்பதால்
மட்டுமல்ல
இயற்கையாக இல்லாமல்
இருப்பதால்தான்
அது இயற்கை
வாழ்க்கை
விடியலின் பனித்துளியை
இழுத்தது சூரியன் ஒளி
மீண்டும் மறு நாள்
வந்தது பனித்துளி
தொடர்ந்தது சூரியன் ஒளி
பயணம்
பயணிகள்
புறப்படும் இடம்
சேரும் இடம்
எல்லாம் மாறும்
மாறாதது
பயணம் மட்டுமே
நினைவுகள்
நிஜத்தில்
நிழலாய்த்
தொடரும்
நிஜத்தின்
நிழல்...
டிசம்பர்ப் பூக்கள்
டிசம்பர்ப்பூக்கள்
டிசம்பர் மாதத்து
மலரல்ல
அது . . .
பிப்ரவரியிலும்
பூக்கும் . . .
10 comments:
// இயற்கை
இயற்கையாக இருப்பதால்
மட்டுமல்ல
இயற்கையாக இல்லாமல்
இருப்பதால்தான்
அது இயற்கை //
இயற்க்கைக்கு அருமையான விளக்கம் - இயற்க்கையாய் உள்ளது..
// வாழ்க்கை
விடியலின் பனித்துளியை
இழுத்தது சூரியன் ஒளி
மீண்டும் மறு நாள்
வந்தது பனித்துளி
தொடர்ந்தது சூரியன் ஒளி //
வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்... அருமையாய்.. வாழ்ந்து பார்க்க தோன்றுகிறது
// பயணம்
பயணிகள்
புறப்படும் இடம்
சேரும் இடம்
எல்லாம் மாறும்
மாறாதது
பயணம் மட்டுமே //
வாழ்க்கையே ஒரு முடிவில்லாத பயணம் தானே...
// நினைவுகள்
நிஜத்தில்
நிழலாய்த்
தொடரும்
நிஜத்தின்
நிழல்...//
எது நிஜம், எது நிழல் - நிஜமே நிழல், நிழலே நிஜம் - தர்க்கம் செய்ய உகந்த சப்ஜெக்ட்
// டிசம்பர்ப் பூக்கள்
டிசம்பர்ப்பூக்கள்
டிசம்பர் மாதத்து
மலரல்ல
அது . . .
பிப்ரவரியிலும்
பூக்கும் . . . //
பூ - அழகுகளில் ஒன்று - எப்போது பூத்தாலும் பூ, பூதானே
/பயணம்
பயணிகள்
புறப்படும் இடம்
சேரும் இடம்
எல்லாம் மாறும்
மாறாதது
பயணம் மட்டுமே/
அருமை
இப்படி ஒவ்வொரு கவிதையா ஆராய்ச்சி பண்ணி புது விளக்கம் கொடுத்திட்டீங்களேஏஏஏஏஏ ராகவன் சாஆஆஆர்ர்ர்ர்ர்ர்.
ரொம்ம்ம்ம்ப நன்றி. உங்க விளக்கத்தப் பாத்தவுடன் நானும் கவிதை எழுதியிருக்கேன்னு நம்பறேன்.
பாராட்டுகளுக்கு நன்றி திகழ்மிளிர்...
உள்ளேன் அய்யா....
//
நான் ஆதவன் கூறியது...
உள்ளேன் அய்யா....
//
அவ்வளவுதானா ஆதவன்:((
உங்க கருத்துரைகளை சொல்லிவிட்டுப் போங்க..
Post a Comment