தொற்று வியாதி மற்ற இடங்களில் பரவுகிறதோ இல்லையோ, வலையுலகில், பதிவுலகில் அதிவேகமாகப் பரவி விடுகிறது. பத்து கேள்விகள் போடாவிட்டால் நாம் நம் இமாலயக் கடமையிலிருந்து தவறிவிடுகிறோமோ என்ற அச்சம் எழுந்துவிடுகிறது. ஆகவே நாமும் ஜோதியில் ஐக்கியமாகிவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் வந்தவை இந்தக் கேள்விக்கணைகள்.
கேள்வி கேட்பது என்று முடிவு செய்தவுடந்தான் இந்த கஷ்டம் தெரிந்தது யாரிடம் கேட்பது. எல்லோரும் எல்லாரிடமும் கேட்டுவிட்டார்களே. அடடடடடா.. தலையைப் பிய்த்துக் கொண்டு நான் கடவுள் ஆர்யா போசில் யோசித்ததில் உதயமானதுதான் கேள்வி கேட்பவரிடமே கேள்வி கேட்பது என்ற ஐடியா..
இப்போ ஸ்ட்ரெயிட்டா கேள்விக்கு போகலாம்
1. உங்க கேள்விகளெல்லாம் 10க்குள்ளயே முடிச்சுக்கிறீங்களே அதுக்கு மேல இல்லையா?
2. அப்படி இருக்குதுன்னு சொன்னா அதை ஏன் டிஸ்கில போட மாட்டேன்றீங்க?
3. ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?
4. பதில் சொல்றவங்களுக்கு ஏன் பரிசு குடுக்க மாட்டேன்றீங்க? உங்களுக்கு பதில் வேணாமா?
5. எப்படி யோசிச்சு யோசிச்சு கேள்வி கேக்கறீங்க?
6. ஒரே கேள்வியே மாத்தி மாத்தி கேக்கறா மாதிரியிருக்கே ஏன்?
7. கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?
8. எனக்கு கேள்வி கேக்குற உரிமையிருக்கா?
9. நான் ஜோதியில ஐக்கியமாகிட்டேனா?
10. இந்த பதிவு போட்டதுனால இந்த கேள்விய நான் என்னையே கேட்டுக்கிட்டதா ஆகுமா?
நான் கேள்வியோட நிக்க மாட்டேன்.
பதில் எதிர்பார்ப்பேன்.
தயவு செய்து பதில் சொல்லுங்க.
பதில் சொல்லுங்க.
பதில் சொல்லுங்க.
(நம்ம சோலி முடிஞ்சுது. எங்கப்பா கோலி சோடா? (இது கேள்வில வராது. ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேன்னு போட்டது)
27 comments:
ஆஹா, கேள்வி கேட்டவங்களுக்கே கேள்வியா?
நடத்துங்க.
அய்யோ... அய்யோ..!
:)))
//கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?
//
:)))
இப்பதான் இதப்பத்தி ஒரு பதிவு போட்டுருக்கேன் அதையும் பாருங்கோ!
தமிழ் பதிவர்களின் செல்லச்சண்டை
:-))
ஹா ஹா ஹா... ஏன் இப்படி? கேள்விக்கு பதில் சொன்னா என்ன கொடுப்பிங்க?
1. உங்க கேள்விகளெல்லாம் 10க்குள்ளயே முடிச்சுக்கிறீங்களே அதுக்கு மேல இல்லையா?
பத்துக்கே காதுல புகை வர்ர அளவுக்கு யோசிக்க வேண்டி இருக்கு.
2. அப்படி இருக்குதுன்னு சொன்னா அதை ஏன் டிஸ்கில போட மாட்டேன்றீங்க?
மேல் இருக்கும் பதிலே இதுக்கும்.
3. ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?
எப்படியும் இவங்களும் பதில் சொல்லப்போறதில்ல அதனால...
4. பதில் சொல்றவங்களுக்கு ஏன் பரிசு குடுக்க மாட்டேன்றீங்க? உங்களுக்கு பதில் வேணாமா?
என்னோட கேள்விகளுக்கு பதில் சொன்னா, எனக்கு நைஜீரியா லாடடரி பரிசு வந்த உடன பாதி உண்டு.
5. எப்படி யோசிச்சு யோசிச்சு கேள்வி கேக்கறீங்க?
தலைய சொறிஞ்சு சொறிஞ்சுதான்
6. ஒரே கேள்வியே மாத்தி மாத்தி கேக்கறா மாதிரியிருக்கே ஏன்?
அப்படியாவது பதில் கிடைக்குதான்னு பார்க்கத்தான்.
7. கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?
பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா..
8. எனக்கு கேள்வி கேக்குற உரிமையிருக்கா?
இத முதல் கேள்வியா இல்ல கேட்ருக்கனும்
9. நான் ஜோதியில ஐக்கியமாகிட்டேனா?
இல்ல. பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டாத்தான்.
10. இந்த பதிவு போட்டதுனால இந்த கேள்விய நான் என்னையே கேட்டுக்கிட்டதா ஆகுமா?
நீங்களும் இதே மாதிரி ஒரு பத்து பதில் எழுதிருங்க.
அப்பாடா.. ஒரு தார்மீக கடமைய முடிச்சுட்டேன்
இணைப்பை உருவாக்கி ஒரு பொதுக்காரியம் பண்ணியிருக்கீங்க. ரொம்ப நன்றி புதுகைத்தென்றல் மேடம்.
//
ரமேஷ் வைத்யா கூறியது...
அய்யோ... அய்யோ..!
//
வாங்க ரமேஷ் வைத்யா.
அவ்ளோ சூப்பராவா இருக்கு!!!
//
சதீசு குமார் கூறியது...
:)))
//
வாங்க சதீசுகுமார்,
ரொம்ப நாளா காணோமே?
சக்கரவியூகமெல்லாம் படிக்கிறீங்களா?
//
ambi கூறியது...
//கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?
//
:)))
//
வாங்க அம்பி,
இப்படி சிரிச்சுட்டு மட்டும் போனா எப்படி?
ஏதாவது சொல்லிட்டுப் போங்க!!!
//
ஷங்கர் Shankar கூறியது...
இப்பதான் இதப்பத்தி ஒரு பதிவு போட்டுருக்கேன் அதையும் பாருங்கோ!
தமிழ் பதிவர்களின் செல்லச்சண்டை
//
ரொம்ப நன்றி ஷங்கர் Shankar
நல்ல காரியம் பண்ணியிருக்கேள்!!!
//
அமுதா கூறியது...
:-))
//
வாங்க அமுதா,
அம்பிக்கு சொன்னதையே உங்களுக்கும் ரிப்பீட்டிக்கிறேன்.
சும்மா சிரிச்சிட்டுப் போறீங்களே!!!
ஹி ஹி ஹி
நான் இன்னும் கேள்வி கேட்கலை
வயித்தெரிச்சல். ஆரில பொறாமையோ போட்டுத் தாக்குங்க. காசா பணமா?
ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?//
அப்படி நெனச்சுதானே உங்களையெல்லாம் கேள்வி கேக்குறதே.. (கும்மிராதீங்கப்பா.. சும்மா ஜாலிக்குதான்..)
அண்ணே அறிவிலியண்ணே,
இங்க பதிலும் கொடுத்து அதையே பதிவா போட்டுசாதனை பண்ண சிங்கம் நீங்க.
வாங்க நசரேயன்
கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டேயிருங்க.!!!
//
pukalini கூறியது...
வயித்தெரிச்சல். ஆரில பொறாமையோ போட்டுத் தாக்குங்க. காசா பணமா?
//
புரியலயே :((
வேறெங்கயாவது போடவேண்டிய பின்னூட்டமா?
தாமிரா கூறியது...
ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?//
அப்படி நெனச்சுதானே உங்களையெல்லாம் கேள்வி கேக்குறதே.. (கும்மிராதீங்கப்பா.. சும்மா ஜாலிக்குதான்..)
///
வாங்க தலைவரே,
பாத்தீங்களா, கேட்ட கேள்வில உண்மை வெளிய வந்திரிச்சி.
மகா ஜனங்களே, இதப் பாத்துத் தெரிஞ்சிக்கோங்க. யார் எதுக்குக் கேக்கறாங்கன்னு.
டாக்டர் சார்,
பலமா சிரிக்கிறீங்களே,
இது எந்த வகைச் சிரிப்பு??
எனக்கு ஏன் பதில் இல்லை :((
தவறுதலாக மிஸ் ஆகி விட்டதற்கு மிகவும் வருந்துகிறேன் விக்னேஷ்வரன்.:((
உரிமையோடு சுட்டிக்காட்டியதற்கு மிக மிக நன்றி. இப்ப உங்க கேள்விக்கு பதில்
//
ஹா ஹா ஹா... ஏன் இப்படி? கேள்விக்கு பதில் சொன்னா என்ன கொடுப்பிங்க?
//
சிறந்த பதில்னு ஒரு பட்டம் கொடுத்துடலாம்!!!
அவ்வ்வ்வ்வ் நீங்களுமா பல்லவன்...ஒரு இரண்டு நாள் இந்த பக்கம் வரல அதுக்குள்ள ஆளாளுக்கு 10 கேள்வி பதிவை போட்டுடீங்க...இனிமே நான் போடவும் முடியாது.
ஆனா கேள்வி கேட்டவங்களையே கேள்வி கேட்ட நீங்க "கேள்வியின் நாயகன்" தான்...
வாங்க ஆதவன்,
கேள்வியின் நாயகனா? இது ரொம்ப டேஞ்சரான டைட்டிலா இருக்கே. இருந்தாலும் பரவால்ல.
என்ன கேக்கறதுன்னு என்ன கேளுங்க. நான்சொல்றேன் உங்களுக்கு ஐடியா. பேசாம "என்னையே நான் கேட்டுக்கொள்ளும் 10 கேள்விகள்" னு போட்ருங்க. இது எப்படி இருக்கு?!?!?!
Post a Comment