எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற அர்ப்பணிப்பு மனதுடனும், இறைவன் வேறு நாம் வேறு இல்லை என்ற தெளிவுடனும், எந்தப் பணியைச் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இரு ஆஸ்கார் பரிசுகளால் தெள்ளத் தெளிவாகிறது.
ஆக இறைவனுக்குச் சேரும் புகழ் நம்மையே சேர்கிறது. நமக்குள்ளிருந்து நம்மை வழி நடத்திச் செல்லும் இறைவன் நன்மையே செய்வான் என்பது உண்மையாக்கப் பட்டிருக்கிறது
பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறியிருந்தாலும், பரிசுகள் கிடைத்திருந்தாலும் ஆஸ்கார் கனவு மிக நெடியதாக இருந்து வந்துள்ளது. அந்த நீண்ட காத்திருப்பின் முடிவில் நமக்குக் கிடைத்தது மூன்று பரிசுகள். ரஹ்மானுக்கு இரண்டு, பூக்குட்டிக்கு ஒன்று.
வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பாவிக்கக் கூடியவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முன்னோடியாகத் தெரிகிறார். அவர் அலட்டிக் கொண்டு நான் பார்த்ததில்லை. எளிமையும் தன்னடக்கமும் என்றும் ஏற்றத்தைத் தரும் என்ற அரிய கருத்தின் வெளிப்பாடாக இருக்கிறார். அவர் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள். இவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க ! வளர்க ! !
9 comments:
என்ன கொடுமை சார் இது???.
100 பேருக்கு மேல வந்து பாத்துட்டு போயிருக்காங்க. ஒருத்தர் கூட பின்னூட்டமிடல?:((.
என்னத்த சொல்லி... என்னத்த எழுதி.... (என்னத்த கன்னைய்யா ஸ்டைலில் படிப்பது உத்தமம்)
இளைய பல்லவன் கூறியது...
என்ன கொடுமை சார் இது???.
100 பேருக்கு மேல வந்து பாத்துட்டு போயிருக்காங்க. ஒருத்தர் கூட பின்னூட்டமிடல?:((.
என்னத்த சொல்லி... என்னத்த எழுதி.... (என்னத்த கன்னைய்யா ஸ்டைலில் படிப்பது உத்தமம்)
தூள்............
நன்றி சுரேஷ் சார்,
(ரொம்ப பிசியோ?)
என்ன கொடுமை சார் இது???.
100 பேருக்கு மேல வந்து பாத்துட்டு போயிருக்காங்க. பின்னூட்டமிடல?:((.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
//
யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
//
நன்றி யோகன் பாரிஸ்
எல்லாம் பிஸிமயம்,பயமயம்தான்.
//என்ன கொடுமை சார் இது???.
100 பேருக்கு மேல வந்து பாத்துட்டு போயிருக்காங்க. ஒருத்தர் கூட பின்னூட்டமிடல?:((.
என்னத்த சொல்லி... என்னத்த எழுதி.... (என்னத்த கன்னைய்யா ஸ்டைலில் படிப்பது உத்தமம்)//
உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு...நாங்கெல்லாம் இது மாதிரி பல வலிகளை தாங்கிட்டோம்...தாங்கிட்டிருக்கோம்.
வீரனுக்கு இதெல்லாம் ஜகஜம்....
Post a Comment