Saturday, February 28, 2009

ஜானகிபுரம் ரயில்வே கேட்

சென்னை மற்றும் வட மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் என்.எச்.45 வழியாக தென் மாவட்டங்களுக்கும் மேற்கு மாவட்டங்களுக்கும் செல்வோர் கண்டிப்பாகக் கடந்திருக்க வேண்டிய இடம் இந்த ஜானகிபுரம் ரயில்வே கேட். விழுப்புரம் தாண்டியதும் வரும் முதல் கேட் இது. விக்கிரவாண்டியிலிருந்து பண்ருட்டி வழியில் செல்பவர்கள் இந்த கேட்டிலிருந்து தப்பித்துவிடுவார்கள்.


சென்னை வரும் வாகனங்கள் பெரும்பாலான சமயம் இந்த கேட்டில் மாட்டிக் கொள்ளும். அரை மணி நேரம் முதல் அரை நாள் வரை ஜாம் ஆகிவிடும். இதற்குப் பிறகு உளுந்தூர்பேட்டை கேட் இருந்தாலும் இங்கே ஜாம் ஆகிறார்ப்போல் அங்கே ஆவதில்லை.


சில சமயம் பெரிய பெரிய வண்டிகள் கேட்டின் இரு புறமும் உள்ள தடுப்புகளில் மாட்டிக் கொண்டு வாகனங்களை மறைத்துவிடும்.


மொத்தத்தில் அனைத்து சாலை வாகனங்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்துவந்த இந்த கேட்டின் மேம்பாலப் பணிகள் கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வந்து ஒருவழியாக இப்போது பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டிருக்கிறது.


இது மக்களுக்கு உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய விடுதலை என்பதில் சந்தேகமில்லை.


நான் அதிக பட்சமாக இரண்டு மணி நேரம் இந்த கேட்டில் மாட்டியிருக்கிறேன். உங்களுக்கு இந்த அனுபவம் ஏதாவது உண்டா?

11 comments:

இராகவன் நைஜிரியா said...

அந்த கேட்ல யாராவது மாட்டாம இருந்தாங்க அப்படின்னா அவங்க ரொம்ப புண்ணியம் பண்ணவங்க அப்படின்னு அர்த்தம்.

தென் மாவட்டங்களுக்கு போவது இப்போதெல்லாம் சற்று வசதியாகியுள்ளது.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... பட்டய கணக்கரே... கணக்கு, வழக்கு அப்படின்னு ஒன்னு இருக்குங்களே அது என்ன ஆச்சு...

கணக்கு அண்ணாச்சி, பதிவு என்னாச்சு?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அரை நாள் வரை ஜாம் ஆகிவிடும்.//



அந்த அனுபவத்தாலதான் நாங்க ரயிலுக்கு மாறினோம்.
இந்திய ரயில்வேயும் லாபத்துக்கு திரும்பியது. இனி என்ன ஆகுமோ....

☀நான் ஆதவன்☀ said...

தலைப்பைப் பார்த்து சிறுகதைன்னு நினைச்சு வந்தேன் :)

CA Venkatesh Krishnan said...

//
இராகவன் நைஜிரியா கூறியது...
அந்த கேட்ல யாராவது மாட்டாம இருந்தாங்க அப்படின்னா அவங்க ரொம்ப புண்ணியம் பண்ணவங்க அப்படின்னு அர்த்தம்.

தென் மாவட்டங்களுக்கு போவது இப்போதெல்லாம் சற்று வசதியாகியுள்ளது.
//

சரியாச் சொன்னீங்க ராகவன் சார்.

ஆனா இப்பவும் பஸ்ல போனா எப்படியோ லேட் பண்ணிடறாங்க.

CA Venkatesh Krishnan said...

//
இராகவன் நைஜிரியா கூறியது...
அண்ணே... பட்டய கணக்கரே... கணக்கு, வழக்கு அப்படின்னு ஒன்னு இருக்குங்களே அது என்ன ஆச்சு...

கணக்கு அண்ணாச்சி, பதிவு என்னாச்சு?
//

விட மாட்டீங்க போல இருக்கே!!

ரொம்ப நன்றிசார் விசாரிப்புக்கு.

உண்மையாவே ஆணி அதிகம்தான்னாலும், இதெல்லாம் ஃபியூச்சர்ல பண்ணலாம்னு இப்பவே துண்டு போட்டு வச்சிருக்கேன். நீங்க டீம் மெம்பரா வாங்க. ஏதாவது நல்லதா பண்ணலாம்.

CA Venkatesh Krishnan said...

///
SUREஷ் கூறியது...
//அரை நாள் வரை ஜாம் ஆகிவிடும்.//
அந்த அனுபவத்தாலதான் நாங்க ரயிலுக்கு மாறினோம்.
இந்திய ரயில்வேயும் லாபத்துக்கு திரும்பியது. இனி என்ன ஆகுமோ....
///

ஆனா அதுல டிக்கட் கெடைக்கிறது குதிரைக் கொம்பால்ல இருக்கு?

இனிமே சரியாயிரும்னு நெனைக்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
தலைப்பைப் பார்த்து சிறுகதைன்னு நினைச்சு வந்தேன் :)
//

இது நான் எதிர்பார்த்ததுதான் :))

அசோசியேட் said...

நைஜிரியா இராகவன் சார் கூறியது தான் என் கருத்தும்.

CA Venkatesh Krishnan said...

நன்றி அசோசியேட் !

வாழவந்தான் said...

இந்த கேட்ல காலேஜ் டூர் போனபோது மாட்டிகிட்டு சுமார் ஆறு மணிநேரம் அங்கேயே இருந்தோம்! :-(
இந்த ரயில்வே கேட் பேரு நல்லா இருக்கு. ஒரு கிரைம் சிறுகதை எழுதலாம் இந்த தலைப்புல :-)