என் கவிதை புனையும் திறமையை வெளிப்படுத்தும் பொருட்டும், கவுஜ எழுதுவது எப்படி என்று சுட்டிக்காட்டியதற்காகவும் இந்தக் கவிதைகளை (அல்லது கவுஜகளை) ஆசிப் அண்ணாச்சிக்கு டெடிகேட் செய்கிறேன். இது கவிதையா, கவுஜையா என்பதை அவரது முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.
எண்ணங்களை
இயம்பும்
வார்த்தைகள்
இல்லை.
என்ன சொல்ல ?
மனத்தோப்பின்
உள்ளே
நின்றது
தனிமரம்.
உண்மை.
மறந்து போவதும்
மறத்துப் போவதும்
மறைந்து போவதும்
நினைவுகள்.
பார்த்தேன்.
பார்க்கிறேன்.
பார்ப்பேன்.
பார்வை.
புதுமை சேர்ந்து
வந்தது
பழையது.
நவீனம்.
முகமறியா
இருட்டின்
முகவரி.
வெளிச்சம்.
உள்ளும்
வெளியும்
சமமாய்.
தேடல்.
கேட்காமல்
தேடாமல்
கிடைக்குமா.
எதிர்பார்ப்பு.
கண்கள்
மூடினாலும்
காட்சிகள்
விரியும்.
கனவு.
என்னைப் பற்றிய
எண்ணத்தில்
மறைந்து
போகிறேன்.
நான்.
அவ்வளவுதாங்க
நம்மளால
முடிஞ்சது.
எதுனா
சொல்லிட்டுப்
போங்க.
ரொம்ப
ஃபீலிங்கா
இருக்கும்...
8 comments:
வாங்க கவுஞரே
கவிமடம் உங்களை அன்புடன் வரவேற்கக் காத்திருக்கு :-)
அண்ணாச்சி பதிவை பார்த்து எனக்கு கவுஜை எழுதனுமுன்னு ஆசை வந்து விட்டது. வாழ்க ஆசிப் அண்ணாச்சி
நன்றி கவிமடத் தலைவரே,
அப்படியே ஏதாவது உப தலைவர், பொருளாளர் பதவி இருந்துதுன்னா அதையும் கொடுத்துட்டீங்கன்னா அடுத்த தலைவராகறதுக்கு வசதியா இருக்கும்.
//
நசரேயன் கூறியது...
அண்ணாச்சி பதிவை பார்த்து எனக்கு கவுஜை எழுதனுமுன்னு ஆசை வந்து விட்டது. வாழ்க ஆசிப் அண்ணாச்சி
//
ஆமாங்க அண்ணாச்சியோட கெப்பாசிட்டியே கெப்பாசிட்டி.
ஒவ்வொரு குறுங்கவிதைகளும் நல்லா இருக்குங்க..
தத்துவம் மாதிரி சில.....
புதுமை சேர்ந்து
வந்தது
பழையது.
நவீனம்.///
இது ரொம்ப நல்லா இருக்கு..
உங்களுக்குள்ள இருக்குற அந்நியன் வெளிய வர ஆரம்பிச்சிருக்கான் போல...இனி என்னென்ன நடக்கப்போகுதோ???
நல்லாயிருக்கு பல்லவன் கவிதைகள்
நன்றி ஆதவா அவர்களே !
எனக்கே தெரியாததெல்லாம் கண்டுபிடிச்சிருக்கீங்க.
//
நான் ஆதவன் கூறியது...
உங்களுக்குள்ள இருக்குற அந்நியன் வெளிய வர ஆரம்பிச்சிருக்கான் போல...இனி என்னென்ன நடக்கப்போகுதோ???
நல்லாயிருக்கு பல்லவன் கவிதைகள்
//
அப்ப கவிதை ரெகுலரா எழுதலாம்றீங்க.
ரொம்ப நன்றி ஆதவன் !
Post a Comment