Tuesday, April 7, 2009

நான் ஏன் பட்டயக் கணக்கனானேன்?

பட்டயக் கணக்கன் என்றால் சார்டர்ட் அக்கவுண்டன்ட் என்று முதலிலேயே தெளிவு படுத்திவிட விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை மிகக்கடுமையான / கொடுமையான படிப்பு என்றால் அது சி.ஏ.வாகத்தான் இருக்க முடியும். அப்படியும் நிறைய மாணவர்கள் இந்தப் படிப்பில் விழுந்து விட்டில் பூச்சிகளாக மாறிவிடுகின்றனர்.


முதலில் ஒரு ஆடிட்டரிடம் டிரையினிங் சேர வேண்டும். அங்கே நிறைய வேலை இருக்கும். அப்படியே படிப்புக்கும் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும். நன்றாக எழுத வேண்டுமென்றால் கோச்சிங் கிளாஸ் போக வேண்டும். பகலிலெல்லாம் வேலை இருக்கும் என்பதால் கோச்சிங் கிளாஸ் காலை ஆறிலிருந்து எட்டு வரையும் மீண்டும் மாலை ஆறரையிலிருந்து ஒன்பது வரையிலும் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஆறு முதல் இரவு எட்டு வரை இருக்கும். (இது 6மாதங்களுக்குத்தான்!)


இதுபோல இன்டர், ஃபைனல் என்று இரண்டு நிலைகள். ஏதாவது ஒரு பேப்பரில் ஃபெயில் என்றால் எல்லாவற்றையும் மீண்டும் எழுத வேண்டும். ஆனால் ஏதாவது ஒரு பேப்பரில் அறுபதிற்கு மேல் எடுத்து ஃபெயிலான பேப்பரில் முப்பதிற்கு மேல் எடுத்திருந்தால் அறுபது எடுத்த பேப்பர் மீண்டும் எழுதத் தேவையில்லை.


அது போல பாஸ் மார்க் நாற்பது. அக்ரிகேட் என்று ஒன்று உண்டு. அதாவது ஒரு குரூப்பில் 3 அல்லது 4 பேப்பர் இருக்கும். 3 பேப்பர் ஆனால் மொத்தமாக 150க்கு மேலும் 4 பேப்பரானால் மொத்தமாக 200க்கு மேலும் எடுக்க வேண்டும். 3 பேப்பரிலும் 40,40,40 என்று எடுத்து பாஸ் செய்தாலும் மொத்தமாக ஃபெயில்தான்! மீண்டும் எல்லாம் எழுதவேண்டும்.


இப்படிப்பட்ட தடைகளையெல்லாம் தாண்டி இறைவன் அருளால் ஒரே அட்டெம்ப்டில் பாஸ் செய்து பட்டயக்கணக்கரானதற்கான காரணங்களை இப்போது ஆராய்ந்ததால் எனக்குக் கிடைத்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


1. நான் தூக்கத்தை வெறுக்கிறேன்.


2. என் வாழ்க்கையை நான் சிறுவனாக இருக்கும் போதே மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டேன்.


3. எனக்கு டென்ஷனில்லாமல் வாழப் பிடிக்காது.


4. எனக்கு அமைதியற்ற குடும்பச் சூழல்தான் வேண்டும்.


5. எனக்குப் பிடித்த பொன்மொழி 'கடமையைச் செய், பலனை எதிர்ப் பார்க்காதே'.


6. எனக்கு என் பெற்றோருடனோ, மனைவி, குழந்தைகளுடனோ, சுற்றத்தாருடனோ நேரம் செலவழிக்க விருப்பமில்லை.


7. எனக்கு என்னையே பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு.


8. என் நண்பர்களிடமிருந்து பிரிந்து விட வேண்டுமென்று எனக்கு ஆவல்.


9. எனக்கு பொது வாழ்க்கையோ, மற்றவர்களோடு பழகுவதோ பிடிக்காது.


10. எனக்கு விடுமுறை நாட்களில் கூட வேலை செய்யவேண்டுமென்று விருப்பம்.


மேலே சொன்னவைதான் நடந்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான சி.ஏ.க்களின் வாழ்க்கை இப்படித்தான் போகிறது. இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

11. எனக்கு பிளாக் எழுத ஆரம்பித்து நிறுத்திவிட வேண்டுமென்ற எண்ணம் உண்டு!!!.

(முதல் பத்தும் சி.ஏ. நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியின் தமிழாக்கம்).

இதனால் சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில் அடிக்கடி வலைப்பக்கத்திலிருந்து காணாமல் போய்விடுவேன்.

அப்பப்ப வருவேன் ஆனா எப்பெப்ப வருவேன்னு தெரியாது!!!

13 comments:

கோவி.கண்ணன் said...

நல்ல பட்டறிவு பகிர்வு !

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அப்படியெல்லாம் மிகவும் கடினமல்ல.

தெளிவான திட்டமிடலும்,தினந்தோறும் படிப்பும் இருந்தால் எளிதாக கரையேறலாம்...

எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

CA Venkatesh Krishnan said...

நன்றி கோவி.கண்ணன் சார்.

CA Venkatesh Krishnan said...

//
அறிவன்#11802717200764379909 said...
//

வாங்க அறிவன்,

சக பதிவர் ஒருவர் சி.ஏ. என்பதில் மிக்க மகிழ்ச்சி. உண்மையில் மற்ற படிப்புகளை விட சி.ஏ. சிரமமானதுதான்.

///
அப்படியெல்லாம் மிகவும் கடினமல்ல.

தெளிவான திட்டமிடலும்,தினந்தோறும் படிப்பும் இருந்தால் எளிதாக கரையேறலாம்...

///

இது கடினமான காரியம் இல்லையா?

///
எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
///

உண்மையில் படிப்பதில் இருக்கும் கஷ்டம் படித்து முடித்த பின அதிகமாகிறது. நீங்கள் மென் பொருள் துறையில் இருப்பதால் அதன் தாக்கம் அவ்வளவாகத் தெரியாமல் இருக்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

C.A. படிச்சா மட்டும்தான் இந்த வேதனை அப்படின்னு சொல்ல முடியாது. அந்த ப்ரபெஷன் - ல இருக்குருவங்களுக்கு அப்படித்தான் இருக்கு. இக்கரைக்கு அக்கரை பச்சை அப்படின்னு சொல்வது மாதிரி.

ரிசெஷன் வந்தாலும், அக்கௌண்டண்ட், சி.ஏ. வுக்கு வேலை இருக்கும் இல்லையா?

அது மாதிரி எனக்குத் தெரிந்து, எந்த ப்ராஜெக்ட்லேயும், ப்ராஜெக்ட் ஆரம்பம் முதல் கடைசி வரை இருப்பது அக்கௌண்ட்ஸ் ஆளுங்கத்தான்.

malar said...

சார் உங்க துறை மட்டும் இல்லை .எனக்கு தெரிந்து பெரிய படிப்பு படித்தவர்களெல்லாம் அப்படிதான் இருக்கிறார்கள் .எனக்கு தெரிந்த ஒரு பெண் சொல்றாங்க .அவங்க வீட்டு காரர் engineer இரவு பகலாக வேலை.கேட்டால் டெண்டெர் என்று சொல்லுகிறார்.இதுக்கு பிறகும் நிறைய கதை நீங்க எழுதிய மாதிரியே அவங்களும் சொல்றாங்க .பொதுவாக கொஞ்சம் பொறுப்பாக வேலை செய்பவர் என்று தெரிந்ததும் அவர் தலையிலேயே எல்லாம் விழும் .உங்க பாடு பரவாயில்லை என்று தோனுது .அவர் வீட்டில் பெண்டாட்டி பிள்ளையோடு பேசுவது கூட இல்லையாம் .வீட்டுக்குள்ள வரும்போதே மொலகாபொடி வியாபாரி மாதிரி தான் வருவார்

சரி உங்களுக்கு டென்ஷன் என்றால் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் ?
என்னடா காஞ்சித் தலைவரை காணுமே என்று நினைத்தேன் .

☀நான் ஆதவன்☀ said...

என்ன தலைவரே இது சூப்பர் ஸ்டாரா இருந்தா இப்படி பொது வாழ்க்கையில பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுக்காக இந்த பக்கம் எப்பவாவது தான் வருவேன்னா எப்படி?

தினமும் ஒரு மணி நேரம்... இல்லைன்னா வாரத்தில மூணு நாள்ன்னு ஏதாவது ஷெட்யூல் போட்டுகங்க தலைவரே

Unknown said...

உங்கள் அறிவுரை வேண்டும்.

1.CA படிப்புக்கு முந்தி இருந்த மாதிரி இப்போழுது மதிப்பு இருக்கிறதா?

2.மென் பொருள் துறையை தவிர்த்து
இதில் மகனை படிக்க வைக்கலாமா?

CA Venkatesh Krishnan said...

நீங்க சொல்றது சரிதான் சார்.

மலர் சொல்றா மாதிரி கொஞ்சம் பொறுப்பான பதவியில இருக்கறவங்க கதி இப்படித்தான்.

அதுவும் அக்கவுன்ட்ஸ் ஆதியிலிருந்து அந்தம் வரை இருக்கும் ஒரே டிபார்ட்மென்ட்! அக்கவுன்டன்ட் மருத்துவச்சி கம் வெட்டியான்!!

CA Venkatesh Krishnan said...

/// malar said...
சார் உங்க துறை மட்டும் இல்லை .///

வாங்க மலர்.

நீங்க சொல்றது சரிதான். மத்தவங்கல்லாம் ஒரு பாசுக்கு பதில் சொன்னா போதும். ஆனா அக்கவுன்டன்ட்ஸ் கொஞ்சம் ஸ்பெஷல். ஏன்னா அவங்களுக்கு கம்பெனி தவிர இன்கம் டாக்ஸ், எக்சைஸ், சர்வீஸ் டாக்ஸ், வாட், ஆடிட், கம்பெனி லா அப்படின்னு எக்கச்சக்க பாஸுங்க.

//
சரி உங்களுக்கு டென்ஷன் என்றால் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் ?
//
நான் வீட்டிற்குள் செல்லும் போது செருப்போடு கம்பேனி கவலைகளையும் கழட்டி விடுவேன். இதை சில மாதங்களாகக் கடைபிடித்து வருவதால் வீட்டில் குவாலிடி டைம் ஸ்பென்ட் செய்ய முடிகிறது. நன்றாக இருக்கிறது.

//
என்னடா காஞ்சித் தலைவரை காணுமே என்று நினைத்தேன் .
//

உங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

அட்லாஸ் ஆதவன்,

என்னை சூப்பர் ஸ்டார்னு சொல்லி கண்கள் பனித்து இதயம் இனிக்க வச்சுட்டீங்க.

கண்டிப்பா ஷெட்யூல் போட்ருவோம். ஆனா ஃபாலோ பண்றதுதான் கஷ்டம். இப்ப கொஞ்சம் ஃப்ரீ டயம்ன்றதால எழுத முடியுது.

CA Venkatesh Krishnan said...

// கே.ரவிஷங்கர் said...
உங்கள் அறிவுரை வேண்டும்.

1.CA படிப்புக்கு முந்தி இருந்த மாதிரி இப்போழுது மதிப்பு இருக்கிறதா?
///

வாங்க ரவிஷங்கர்,

நிச்சயமாக இருக்கிறது. இனியும் இருக்கும். சி.ஏ.விற்கு சமமாக அக்கவுன்டன்சி துறையில் வேறு படிப்பு இல்லை. சி.டபள்யூ.ஏ. (காஸ்ட் அக்கவுன்டன்சி), கம்பெனி செக்ரடரி ஆகியவை இரண்டாம் நிலை தான். ஐ.சி.எஃப்.ஏ.ஐ. மிகப்பெரிய விளம்பரம் மூலம் வரப்பார்த்தது. அதிக அளவு ஃபீஸ் காரணமகவும், அப்ப்ரூவல் இல்லாததாலும் அது சரியான தேர்வாகாது. எம்.பி.ஏ. என்றால் டாப் இன்ஸ்டிடியூஷங்களில் படித்தால் மட்டுமே பயன் கிடைக்கும்.

தற்போது சி.ஏ. கேம்பஸ் இன்டர்வியூவில் ஆவரேஜ் சி.டி.சி. 6 லட்சம் (கிட்டத்தட்ட 300 - 500 பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது). ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் 1000 - 1500 பேர் குவாலிஃபை ஆகிறார்கள். ஆகவே சி.ஏ.க்களைப் பொறுத்த வரை, டிமான்ட் எக்சீட்ஸ் சப்ளை.

//
2.மென் பொருள் துறையை தவிர்த்து
இதில் மகனை படிக்க வைக்கலாமா?
//

எனக்குத் தெரிந்தவர்களிடம் நான் கூறுவதும் இதுதான். தற்போது மென்பொருள் துறையில் சப்ளை அதிகமாக உள்ளதால், மற்ற துறைகளை நாடுவது சிறந்தது.

சி.ஏ. இஸ் அன் எவர்கிரீன் ஃபீல்ட் அண்ட் எ சேஃப் பெட் ஆல்வேஸ்.

நன்றி மற்றும் உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.

சி தயாளன் said...

அப்பப்ப வாங்க..:-)