Friday, April 10, 2009

'எப்படி' பதிவுகள் எழுதுவது எப்படி?

எப்படி என்ற வார்த்தையை காபிரைட் செய்ய முடிந்தால் அது திரு.தமிழ்வாணனுக்கே கிடைக்க வேண்டும். அவ்வளவு எப்படி புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இப்ப அவருடைய பதிவுலக வாரிசாக குசும்பனார் எப்படின்னு பதிவுகளா எழுதி தள்ளிக்கிட்டே இருக்கார்.

சரி மேட்டருக்கு (விஷயம்னு சொன்னா அடிக்க வருவாங்களே!) வர்றேன். தமிழ்வாணன் அவர்களிடம் இப்ப கேட்க முடியாது. குசும்பன் இந்த மேட்டரை நமக்கு சொல்லிட்டா அவர் வேற மேட்டருக்கு அலைய வேண்டியிருக்கும். அதனால நாமதான் இதை கண்டுபிடிக்கணும்னு பல காலமா கஷ்டப்பட்டு ராத்திரி பகல்னு பாக்காம தூங்காம தூங்கி, சாப்பிடாம சாப்டு எல்லாம் பண்ணப்புறம் இந்த மேட்டர் தெரிஞ்சுது. நாம பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாதுன்ற ஒரு நல்லெண்ணத்துல இந்த பதிவைப் போடறேன்.

எல்லாரும் படித்துப் பயன் பெறுங்கள்.

1. எப்படி என்றால் என்ன?

எப்படி என்பதற்கு ஆங்கிலத்தில் 'ஹவ்' என்று சொல்வார்கள். இந்தியில் 'கெய்சே' என்றும், தெலுங்கில் 'எலா' என்றும் மற்ற மொழிகளில் அந்தந்த மொழியிலும் எப்படியை சொல்வார்கள். எல்லா மொழியிலும் உள்ள வார்த்தை. ஆனால் வார்த்தை வேறு அர்த்தம் ஒன்று. இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 'எப்படி என்றால்' என்று கேட்கிறோமல்லவா? அப்படித்தான்.

புரிந்தவர்கள் மேலே (கிழே) தொடருங்கள். புரியாதவர்கள் மேலே தொடருங்கள்.

2. ஏன் எப்படி பதிவு போடவேண்டும்?

எப்படி என்று போட்டால் எல்லாருக்கும் ஒரு ஆவல் வரும். எல்லாரையும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒரு மேட்டரைப் பற்றி தெரிந்தவர்கள், தெரியாதவர்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இரு வகையினருமே படிக்க வருவார்கள்.

தெரிந்தவர்கள் நமக்குத் தெரிந்தது சரியா என்று படிக்க வருவார்கள். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வருவார்கள். ஆகவே 'எப்படி' பதிவைப் போட்டால் ஹிட் உறுதி.

புரிந்தவர்கள் மேலே (கிழே) தொடருங்கள். புரியாதவர்கள் மேலே தொடருங்கள்.


3. எப்படி பதிவுகளால் என்ன பயன்?

எப்படி பதிவுகளால் பலருக்கு பல மேட்டர் தெரிய வருகிறது. நாம் செய்யும் வேலைகளை சிறப்பாகச் செய்யலாம். நமக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுக்கலாம். எப்படி என்று எழுதிவிட்டாலே போதும். அது பயனுள்ள பதிவுதான்.

புரிந்தவர்கள் மேலே (கிழே) தொடருங்கள். புரியாதவர்கள் மேலே தொடருங்கள்.


4. எப்படி பதிவுகள் போடுவது எப்படி?

இதுதான் மெயின் மேட்டர். முதலில் எதைப் பற்றி வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ளுங்கள்.


உதாரணமாக பெர்சனல் வாழ்வில் காலையில் எழுந்திருப்பது எப்படி, பல் துலக்குவது எப்படி, காபி குடிப்பது எப்படி, குளிப்பது எப்படி, துடைத்துக் கொள்வது எப்படி, டிரஸ் மாட்டிக்கொள்வது எப்படி, டிபன் சாப்பிடுவது எப்படி, ஷூ போட்டுக்கொள்வது எப்படி, பேக்கை எடுப்பது எப்படி, எதையும் மறக்காமல் இருப்பது எப்படி, என்று ஆரம்பித்து அன்லிமிடடான மேட்டர்கள் இருக்கின்றன.

ஆபீஸ் வாழ்வில், கார்ட் ஸ்வைப் செய்வது எப்படி, ஆபீசில் அனைவருக்கும் குட் மார்னிங் சொல்வது எப்படி, சீட்டிற்குப் போய் உட்காருவது எப்படி, கம்பியூட்டரை ஆன் செய்வது எப்படி, மெய்ல் பாக்சைத் திறப்பது எப்படி, ஃபார்வார்டு செய்வது எப்படி, ரிப்ளை செய்வது எப்படி என்று ஆரம்பித்து அன்லிமிடெட்டான மேட்டர்கள் உள்ளன.

பொதுவாழ்வில் என்று எடுத்துக் கொண்டால், கட்சியில் சேர்வது எப்படி, எந்த கட்சியில் சேர்வது என்று முடிவு செய்வது எப்படி, பொறுப்பை செலக்ட் செய்வது எப்படி, கவுன்சிலர் ஆவது எப்படி, எம்.எல்.ஏ. ஆவது எப்படி, எம்.பி. ஆவது எப்படி என்று ஆரம்பித்து அன்லிமிடெட்டான மேட்டர்கள் உள்ளன.

சினிமா பார்ப்பது என்று எடுத்துக் கொண்டால், தியேட்டரை செலக்ட் செய்வது எப்படி, ஷோ செலக்ட் செய்வது எப்படி, வகுப்பை செலக்ட் செய்வது எப்படி, டிக்கெட் வாங்குவது எப்படி, பார்க்கிங் செய்வது எப்படி, உள்ளே நுழைவது எப்படி, சீட்டில் உட்காருவது எப்படி என்று ஆரம்பித்து அன்லிமிடெட்டான மேட்டர்கள் உள்ளன.

சினிமா எடுப்பது என்று எடுத்துக் கொண்டால் கதை எழுதுவது எப்படி, கதையை காப்பியடிப்பது எப்படி, கதையை மிக்ஸ் செய்வது எப்படி என்று ஆரம்பித்து அன்லிமிடெட்டான மேட்டர்கள் உள்ளன.

இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் 'எப்படி' அன்லிமிடெட் தான்.

ஒரு வழியாக இப்படி யோசித்துக் கொண்டவுடன் அந்த மேட்டரை நீங்கள் எப்படி செய்வீர்கள் என்று யோசிக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் செய்வது சரி என்றால் அதை எழுதலாம். நீங்கள் செய்வது சரியில்லை என்றால் எது சரியோ அதை எழுதலாம். எழுதுவதிலும் ஒரு முறை இருக்கிறது.

உதாரணமாக பல் துலக்குவது எப்படி என்று பதிவு போட்டால்,

முதலில் பல்லைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த கவிதையோ, சினிமா பாட்டோ எழுதுங்கள்.

பல்லின் முக்கியத்துவத்தை விளக்குங்கள். (பல்லை விளக்குவது அப்புறம்). பிறகு ஸ்டெப்ஸ் எழுதுங்கள்.

1. படுக்கையிலிருந்து எழுந்து கண்ணாடி அருகே செல்ல வேண்டும்.

2. கண்ணாடியில் நம் முகத்தைப் பார்த்து பல் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

3. பிரெஷ் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

4. டூத் பிரெஷ்தானா என்று பார்க்க வேண்டும்.

5. நம்முடைய பிரெஷ் தானா என்று பார்க்க வேண்டும்.

6. இப்போது பயன் படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

7. பேஸ்ட் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

8. பல் துலக்கும் பேஸ்ட்தானா என்று பார்க்க வேண்டும்.

9. நமக்குப் பிடித்த பேஸ்ட் தானா என்று பார்க்க வேண்டும்.

10. குழாயில் தண்ணி வருகிறதா (அ) மக்கில் தண்ணி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

11. பிரஷை நனைக்க வேண்டும்.

இப்படியாக ஆரம்பித்து உங்கள் அபிமான எண் வரை இழுத்துக் கொண்டு போகலாம். பார்த்தீர்களா எவ்வளவு சுலபமான மேட்டர் எவ்வளவு கஷ்டப்படுத்துகிறது என்று.


இனிமேல் எப்படி பதிவுகள் போடுவதில் உங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்காது இல்லையா?

(தொடரும்)

டிஸ்கி:- உங்களுக்கு வேண்டுமென்றால் தொடர்கிறேன். வேண்டாமென்றாலும் தொடர்கிறேன்!!

18 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

நட்புடன் ஜமால் said...

இம்பூட்டு ஆராய்ச்சியா!

நல்லாயிருக்கு

தொடருங்கள்

(வேற வழி)

malar said...

கணக்கு எழுதி எழுதி உங்களுக்கு கொழப்பம் ஒன்றுமில்லையே !!

சும்மா கேட்டேன் .....

குடந்தை அன்புமணி said...

எப்படி? எப்படி?

வேத்தியன் said...

எப்படி இப்படி???
எப்படி சூப்பர்ங்ண்ணா...
(திஸ் இஸ் விஜய் ஸ்டைல்...)
:-)

Unknown said...

இளைய பல்லவன்,

நன்றி!நன்றி!நன்றி!அறிவுரைக்கு(C.A.படிக்கலாமா?)
தாமதத்திற்க்கு மன்னிக்கவும்.
இங்கு போட்டதிற்க்கும் ம.வும்.

//இனிமேல் எப்படி பதிவுகள் போடுவதில் உங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்காது இல்லையா?//

சத்தியமாக இருக்காது.

CA Venkatesh Krishnan said...

//
நட்புடன் ஜமால் said...
இம்பூட்டு ஆராய்ச்சியா!

நல்லாயிருக்கு

தொடருங்கள்

(வேற வழி)
//

வேற வழி (தொடர வேண்டியதுதான்!)

CA Venkatesh Krishnan said...

//
malar said...
கணக்கு எழுதி எழுதி உங்களுக்கு கொழப்பம் ஒன்றுமில்லையே !!

சும்மா கேட்டேன் .....
//

சேச்சே !

கொழப்பமா?

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தெளிவ்வ்வ்வ்வ்வ்வ்வா இருக்கேன்.

CA Venkatesh Krishnan said...

//
குடந்தைஅன்புமணி said...
எப்படி? எப்படி?
//

நான் கேக்க வேண்டிய கேள்வி !

CA Venkatesh Krishnan said...

//
வேத்தியன் said...
எப்படி இப்படி???
எப்படி சூப்பர்ங்ண்ணா...
(திஸ் இஸ் விஜய் ஸ்டைல்...)
:-)
//

ரொம்ம்ம்ப தேங்க்ஸ்ங்க்ண்ணா !!!

CA Venkatesh Krishnan said...

கே.ரவிஷங்கர் said...
இளைய பல்லவன்,

நன்றி!நன்றி!நன்றி!அறிவுரைக்கு(C.A.படிக்கலாமா?)
தாமதத்திற்க்கு மன்னிக்கவும்.
இங்கு போட்டதிற்க்கும் ம.வும்.

//இனிமேல் எப்படி பதிவுகள் போடுவதில் உங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்காது இல்லையா?//

சத்தியமாக இருக்காது.
////

நன்றி நன்றி நன்றி

Anonymous said...

12

கோவி.கண்ணன் said...

எப்படி இப்படியெல்லாம் ?

:)

☀நான் ஆதவன்☀ said...

திரும்பி வாங்கன்னு கூப்பிட்டதது குத்தமாய்யா?????

CA Venkatesh Krishnan said...

//
கோவி.கண்ணன் said...
எப்படி இப்படியெல்லாம் ?
:)
//

கேள்வி மாத்தி கேட்டுட்டீங்க

இப்படியெல்லாம் எப்படின்னு கேட்டிருந்தீங்கன்னா அது பதிவுக்கான கான்செப்ட் கம் தலைப்பு.

இஃகி! இஃகி!! இஃகி!!!

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் said...
திரும்பி வாங்கன்னு கூப்பிட்டதது குத்தமாய்யா?????
//

கூப்பிட்டது குத்தமில்ல.

'கூப்பிட்டதது' தான் குத்தம்.

பதிவைப் படிச்சதும் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டுட்டீங்க போல. நல்லது நல்லது.

Anonymous said...

//டிஸ்கி:- உங்களுக்கு வேண்டுமென்றால் தொடர்கிறேன். வேண்டாமென்றாலும் தொடர்கிறேன்!!//

இன்னும் எழுதுப்பா

Anonymous said...

18