Thursday, April 16, 2009

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

காங்கிரசுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பதினாறு தொகுதிகளை திமுக ஒதுக்கியது. இந்த பதினாறு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. அதன் பேரில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி கடந்த பல நாட்களாக நடந்து வருகிறது.


இதனிடையில் நாளை பதினேழாம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வரும் பதினெட்டாம் தேதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது.


இருபத்து நான்காம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.


என் கவலையெல்லாம் இருபத்து நான்காம் தேதிக்குள் வேட்பாளர்களை அறிவித்து அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட வேண்டுமே என்பதுதான்:((

2 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

KIKIKIKIKIKI

தோற்க்கபோவதற்கு எதற்கு வேட்பாளர் அறிவிப்பு சம்பிரதாயம் எல்லாம்!

தமிழகத்தில் 1000 தொகுதிகள் வரையறுக்கப் பட்டாலும் காங்கரஸ் கோஸ்டி சண்டை தீராது.

CA Venkatesh Krishnan said...

///
ஜோதிபாரதி said...
KIKIKIKIKIKI

தோற்க்கபோவதற்கு எதற்கு வேட்பாளர் அறிவிப்பு சம்பிரதாயம் எல்லாம்!

தமிழகத்தில் 1000 தொகுதிகள் வரையறுக்கப் பட்டாலும் காங்கரஸ் கோஸ்டி சண்டை தீராது.
///

:(((