Tuesday, April 21, 2009

தேர்தல் - 'திரு'விளையாடல்

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!

இனிமையான இந்தியத் திருநாட்டின் எழுச்சிப் பாதையை வகுத்திட வேண்டி மக்களுக்காக மக்களே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டத்திலே நாம் இருக்கிறோம். இன்றைய ஓட்டு நாளைய நோட்டு. ஆம். இன்று போடும் ஓட்டு தான் நாளை நாம் பெறுவது மூன்று சைபர் நோட்டா, இரண்டு சைபர் நோட்டா, ஒரு சைபர் நோட்டா என்பதை முடிவு செய்யும்.

ஆகவே தவறாகப் போடும் நம் ஓட்டு நாம் நமக்கே வைத்துக் கொள்ளும் வேட்டு (ஆஹா, ஓட்டு, நோட்டு, வேட்டு.. அப்படியே தமிழ் கொஞ்சி விளையாடுதேப்பா....)

சரி விஷயத்திற்கு வருவோம். தேர்தல் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். சோழர்கள் காலத்தின் குடவோலை முறையைப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டுகள் செப்புகின்றன [என்ன செய்வது. வரலாறு கலக்காமல் எழுத முடிவதில்லை:(( ]. தேர்தல்களில் இப்போது 'திரு'வின் விளையாட்டு அதிகமாகிவிட்டதால் இந்தப் பதிவுக்கு 'தேர்தல் திருவிளையாடல்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பல்வேறு உத்தரவுகளால் கொஞ்சம் அடக்கி வாசிக்கப் படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை என் கணிப்பில் மீண்டும் தி.மு.க கூட்டணிதான் அதிக இடங்களைப் பெறும். அதற்கான மூன்று காரணங்கள்.

1. எக்கச்சக்க தி.மு.க எதிர்ப்பு அலை:- ஆனால் இந்த எதிர்ப்பு அலையின் பலன் அதிமுக கூட்டணிக்குச் செல்லாமல் தடுத்து விடுவதில் தேமுதிக முதலிடத்திலும் மற்ற கட்சியினர் அடுத்துள்ள இடங்களிலும் இருக்கிறார்கள். ஆகவே எதிர்ப்பு வோட்டுகள் பலமாகப் பிரிந்து தி.மு.க. கூட்டணிக்குப் பலனளிக்கிறது. அடிப்படை ஓட்டுக்களுடன் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்பது என் கணிப்பு.

2. அமைப்பு ரீதியான 'சப்போர்ட்':- திமுக வார்டு முதல் வட்டம் மாவட்டம் வரை அமைப்பு ரீதியாக செம்மையாக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் முதலிலேயே துவங்கி விட்டது. மற்ற கட்சிகளைப் பார்க்கும் போது தி.மு.க. வெகுவாக முன்னேறியிருப்பது கண்கூடு. ஆனால் ஆமை முயல் கதையாகாமல் தி.மு.க.வினர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. மாநில அரசின் வாழ்வாதாரப் பிரச்சினை:- தி.மு.க. மாநிலத்தில் காங்கிரசைச் சார்ந்தே உள்ளது. ஆகவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உதவினால்தான் மாநில அரசு நிலைக்கும் என்ற காங்கிரசைக் கை கழுவ முடியாத சூழல். ஆகவே காங்கிரசில் எவ்வளவு குழப்பமேற்பட்டாலும் தி.மு.க அவற்றையெல்லாம் சரிகட்ட வேண்டிய நிலை.

இன்றைய நிலையில் குறைந்த பட்சம் 35 தொகுதிகளாவது திமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என எதிர் பார்க்கலாம். எல்லாம் மே 16 அன்று தெரிந்து விடுகிறது.

10 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சோழர்கள் காலத்தின் குடவோலை முறை//


இது வாக்கெடுப்பு முறையா?

குலுக்கல் முறையா தல....?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சோழர்கள் காலத்தின் குடவோலை முறை//


எந்த பதவி வரை இதை பயன்படுத்தினார்கள் தல

☀நான் ஆதவன்☀ said...

சான்ஸே இல்ல தலைவா...

☀நான் ஆதவன்☀ said...

35ல்லாம் ரொம்ப ஓவர்

DHEENA said...

PAKAL KANAVU

malar said...

சப்போட்டு பலமா இருப்தை பார்த்தால் பட்டய கணக்கருக்கு கல்லாவில் சில்லரை விழுந்தது போல் இருக்கே .

CA Venkatesh Krishnan said...

குடவோலை முறைத் தேர்தல் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பயன்படுத்தப் பட்டது. அதற்கு மேல் மக்கள்பிரதி நிதித்துவம் இல்லை.

ஓட்டு கேட்பவர்களுக்கும் போடுபவர்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. முடிந்தால் ஒரு பதிவிட முயற்சிக்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் said...
35ல்லாம் ரொம்ப ஓவர்
//

:))

CA Venkatesh Krishnan said...

//
DHEENA said...
PAKAL KANAVU
//

May be or May not be. This is not an expectation nor intention, but only an assessment from different perspective.

CA Venkatesh Krishnan said...

//
malar said...
சப்போட்டு பலமா இருப்தை பார்த்தால் பட்டய கணக்கருக்கு கல்லாவில் சில்லரை விழுந்தது போல் இருக்கே .
//

ஆஹா.. சுதந்திரமா ஒரு கருத்து சொல்ல முடியலயே... அவ்வ்வ்வ்...