கவிதை எழுதி நீண்ட நாட்களாயிற்றென்றாலும் அந்த தாகமும் அதன் தாக்கமும் என்னை விட்டகன்றபாடில்லையாகையால்மீண்டும் ஒரு கவிதைத் தொகுப்பு.
1. முதலும் முடிவும்..
முதலில் முடியும்
முதலும்..
முடிவில் முதலாய் வரும்
முடிவும்...
முதலும் இல்லை
முடிவும் இல்லை என்கிறது
முத்தாய்ப்பாய் ...
2. இல்லாமலிருத்தல்
எங்கே எதுவும்
இல்லாமல் இருக்கிறதோ
அங்கே
இல்லாமை
இருக்கிறது...
3. எங்கே அழகு
உன்னிடம்
இருக்கும் அழகு..
நீ என்னோடு
இருப்பதால்
என்னிடம்
இருக்கிறது..
4. குழந்தை
எதிர்ப்பார்ப்பின்றி
எதிர்பார்க்கும்...
ஏமாற்றினாலும்
ஏமாறாது
நம்மை ஏமாற்றும்
5. தொலைந்தது
தேடிக்கொண்டிருக்கிறேன்...
எதைத்
தொலைத்தேன்
என்பதை..
6. ஏன்
கேட்டேன்..மறந்தேன்.
பார்த்தேன்..நினைத்தேன்..
செய்தேன்..உணர்ந்தேன்..
ஏன்?
7. நானும் நானும்
நானும் நானும்
வேறல்ல என்றாலும்
நானும் நானும்
ஒன்றானதால்
நானும் நானும்
நண்பர்கள்
8. ஒளி
இருளைப்
போக்குவதால் அல்ல
இருளற்றிருப்பதால்
அது
ஒளி..
9. தத்துவம்
தவறானதெதுவும்
தத்துவமாகாததானாலும்
தத்துவம்
தவறாகலாம்..
10. கவிதை
எழுதாமல்
இருந்தாலும்
கவிதை
கவிதைதான்.
இதன் தாக்கத்தை சற்றே தெளிவுபடுத்திச் செல்வீர். என் கவிதைத் தாகத்தைத் தீர்ப்பீர். உங்கள் கருத்துக்களே என் கவிதைக்கு சுவாசக் காற்று.
8 comments:
அபிராமி
அபிராமி..,
ஓட்டு போட்டாச்சுங்க...
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
அபிராமி
அபிராமி.., //
டபுள் ரிப்பீட்டேய்......
குணாவாக்கிட்டீங்களேஏஏஏஏஏ மக்காஆஆ...
நம்மூர்ல கொலை கேசுக்கு எத்தினி வருஷம் தலீவரே???
// ☀நான் ஆதவன்☀ said...
நம்மூர்ல கொலை கேசுக்கு எத்தினி வருஷம் தலீவரே???
//
எந்தமாதிரி சூழல்ன்றதைப் பொறுத்து இருக்கும்!!
The last one is much good.
I have added it to the படித்தது / பிடித்தது series in my blog.
http://www.writercsk.com/2009/07/56.html
மிக்க நன்றி சரவணகார்த்திகேயன்.
Post a Comment