கடந்த ஒரு வாரமாக ஏதோ பதிவு, எதிர் பதிவு, எதிர் எதிர் பதிவு, அதன் சார் பதிவு, அதன் எதிர் பதிவு என்று தமிழ்மணம் களைகட்டியதாகச் சொல்கிறார்கள். ஆனால் நான் பார்த்த வரை அதுபோல் ஒன்றும் தென்படவில்லை! (ஒரு வேளை எனக்குப் பார்வைக் கோளாறோ?!)
பதிவர்கள் அடித்துக் கொள்(ல்)வது ஒன்றும் புதிதல்ல. புதிதாக வருபவர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் புதியவர்கள். பிறகு பழகிவிடும் அவர்களும் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவார்கள்.
ஆனால் இந்த முறை, எனக்கென்னவோ, சண்டையைவிட சண்டையை நிறுத்துங்கள் என்ற சவுண்ட்தான் அதிகமாகக் கேட்டது.
நக்கீரர் (பத்திரிக்கை அல்ல) சொன்னது போல், அடித்துக் கொள்வதும் அணைத்துக் கொள்வதும் பதிவுலகத்தாரின் ஏகபோக உரிமை. இதில் சமாதானம் பேச எந்த செண்பகப் பாண்டியனுக்கும் உரிமையில்லை என்று எடுத்துச் சொல்லவேண்டியது என் உரிமை.
ஆக பதிவுலகத் தோழர்களே! உங்களுக்கெல்லாம் உங்கள் தகுதியின் அடிப்படையில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் பழைய பிரபல பதிவரனால்:- அடித்துக் கொள்வது உங்கள் கடமை. ஆகவே நிறுத்தாதீர்கள். நீங்கள் எல்லாம் இப்படி அடித்துக் கொள்ளாவிட்டால் எங்களுக்குத் தீனி ஏது??
நீங்கள் பழைய பிரபலமில்லாத பதிவரானால் (என்னைப்போல்):- இது உங்களுக்கெல்லாம் பழகிவிட்ட விஷயம். திரட்டியைத் திறந்ததுமே இது போன்ற விஷயங்களைத்தான் எதிர்ப்பார்ப்பீர்கள். சென்ற முறைக்கும், இந்த முறைக்கும் உள்ள வீரிய வித்தியாசங்களை சீரிய முறையில் சிந்திப்பீர்கள். அதுதான் நல்லது.
நீங்கள் சற்று புதிய பதிவரானால்:- இதுவரை ஒன்றிரண்டு சண்டைகளைக் காண நேரிட்டிருக்கலாம். அதன் அதிர்ச்சி நீங்காமல் எதிர் வினைப் பதிவுகள், அதாவது, தயவுசெய்து நிறுத்துங்கள், புதியவர்கள் என்ன நினைப்பார்கள் என்று அட்வைஸ் அல்லது டிப்ஸ் பதிவுகள் இடலாம். உங்களுக்கு இது பழகிவிட்டால் பிரச்சனையில்லை. பழகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பிரச்சனைதான். இன்னும் ஒன்றிரண்டு சண்டைகளைப் பார்த்துவிட்டால் நீங்கள் மேலே சொன்ன கேட்டகிரிக்கு ப்ரமோஷன் வாங்கி விடுவீர்கள்.
நீங்கள் புது புதுப்பதிவரானால்:- இந்தச் சண்டை உங்களுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கக்கூடும். அதையெல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, பதிவுலகம் திருந்துமா என்று காத்திருங்கள். அதற்குள் இரண்டு மூன்று சண்டைகள் ஏற்பட்டு விடும். நீங்கள் டபுள் பிரமோஷனில் மேலே போய்விடலாம்.
ஆக மொத்தம். நாங்கள் திருந்த மாட்டோம். நீங்கள்தான் மாற வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதி. இதை ஏற்றுக்கொள்பவர்கள் இங்கே இருக்கலாம். இல்லையேல், இருக்கவே இருக்கிறது, இந்த மடம் இல்லையேல் சந்தை மடம்!
(அப்பாடா.. என் இமாலயக் கடமையை முடித்துவிட்ட திருப்தியை அடிக்கடி வழங்கிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!!)
27 comments:
//ஆக மொத்தம். நாங்கள் திருந்த மாட்டோம். நீங்கள்தான் மாற வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதி. இதை ஏற்றுக்கொள்பவர்கள் இங்கே இருக்கலாம். இல்லையேல், இருக்கவே இருக்கிறது, இந்த மடம் இல்லையேல் சந்தை மடம்//
:))
:)
சூப்பர் !
அண்ணே நீங்க எங்கயோ போய்டீங்க!!!
2008ல தான் எழுத ஆரம்பிச்சு இருக்கிங்க, அதனால உங்களை பழைய பிரபலமில்லாத பதிவர்கள் லிஸ்ட்ல சேர்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்........
///
Blogger நாமக்கல் சிபி said...
:))
///
தள,
சிரிச்சிட்டுப் போனா என்ன அர்த்தம்?:))
///
Blogger கோவி.கண்ணன் said...
:)
சூப்பர் !
///
நன்றி கோவியாரே,
என்ன பண்றது, நாமதான் இப்படிச் சொல்லி வெளங்க வைக்க வேண்டியிருக்கு!!
// ராஜா | KVR said...
2008ல தான் எழுத ஆரம்பிச்சு இருக்கிங்க, அதனால உங்களை பழைய பிரபலமில்லாத பதிவர்கள் லிஸ்ட்ல சேர்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்......//
KVR அவர் கேரக்டரயே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே....அவர் ப்ரொபைல் ஹிட்ஸ்க்காக அப்படி சொல்லியிருக்காரு. பழைய பதிவர்ன்னு சொன்ன உடனேயே நீங்க பார்க்கலையா? அது மாதிரி தான்..
இப்ப ப்ரொபைல் ஹிட்ஸூம் ஒரு போதை தான் :)
:)
//
☀நான் ஆதவன்☀ said...
அண்ணே நீங்க எங்கயோ போய்டீங்க!!!
//
எங்கங்கறதையும் சொல்லிப்போட்டீங்கன்னா என்னைத் தேட வசதியா இருக்கும்!
ராஜா கேவியார்!
அப்போ நான் யார்??
//தள,
சிரிச்சிட்டுப் போனா என்ன அர்த்தம்?:))//
சிரிப்பு வந்ததுன்னு அர்த்தம்!
என்ன கேள்வி இது?
//
☀நான் ஆதவன்☀ said...
KVR அவர் கேரக்டரயே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே....அவர் ப்ரொபைல் ஹிட்ஸ்க்காக அப்படி சொல்லியிருக்காரு. பழைய பதிவர்ன்னு சொன்ன உடனேயே நீங்க பார்க்கலையா? அது மாதிரி தான்..
இப்ப ப்ரொபைல் ஹிட்ஸூம் ஒரு போதை தான் :)
//
புரியல. ப்ரொபைல் ஹிட்ஸுன்னா என்ன??
வாங்க பீர்..
///
நாமக்கல் சிபி said...
//தள,
சிரிச்சிட்டுப் போனா என்ன அர்த்தம்?:))//
சிரிப்பு வந்ததுன்னு அர்த்தம்!
என்ன கேள்வி இது?
///
அது சரி..
சிரிப்பு மட்டும்தானான்னு கேட்டேன்.
//புரியல. ப்ரொபைல் ஹிட்ஸுன்னா என்ன??//
அட உங்க ப்ரொப்பைல்ல "Profile Views (approximate)" இருக்கும்ல...அதான்
//
☀நான் ஆதவன்☀ said...
//புரியல. ப்ரொபைல் ஹிட்ஸுன்னா என்ன??//
அட உங்க ப்ரொப்பைல்ல "Profile Views (approximate)" இருக்கும்ல...அதான்
//
அது எங்க இருக்கும்??
//அது எங்க இருக்கும்??//
முடியல பல்லவன்....தெரிஞ்சு கேக்குறீங்களா..இல்ல கலாய்கிறீங்கலான்னே தெரியல...இந்த கமெண்ட்ஸ் இருக்குற உங்க பேரு “இளைய பல்லவன்”ன க்ளிக் பண்ணுங்க...
அவ்வ்வ்வ்வ் தாவு தீர்ந்து போச்சு
இதில் எந்த எட்டில் இப்பொ இருக்க நெனச்சுக்கோன்ற மாதிரி
டைம் டேபிள் போட்டுட்டீங்க...
:-0
(இது என்ன வகை பதிவு ??)
:)))
//
☀நான் ஆதவன்☀ said...
//அது எங்க இருக்கும்??//
முடியல பல்லவன்....தெரிஞ்சு கேக்குறீங்களா..இல்ல கலாய்கிறீங்கலான்னே தெரியல...இந்த கமெண்ட்ஸ் இருக்குற உங்க பேரு “இளைய பல்லவன்”ன க்ளிக் பண்ணுங்க...
அவ்வ்வ்வ்வ் தாவு தீர்ந்து போச்சு
//
நன்றி ஆதவன் தெளிவா சொன்னீங்க. இது கலாய்த்தல் அல்ல.
நன்றி கடைக்குட்டி,
இப்படியெல்லாம் கேள்வி கேட்கப்படாது. அப்பதான் நீங்க பதிவர் ஜோதில கலக்கறீங்கன்னு அர்த்தம்!
நன்றி தமிழ் 144
அ..
வாங்க சார், வாங்கய்யா, வாங்கம்மா,
வாங்க மேடம்... (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்!!)
//நீங்கள் பழைய பிரபலமில்லாத பதிவரானால் (என்னைப்போல்):-//
ஹிஹி நானும் உங்க கேட்டகரி தான்.
நன்றி அம்மணி..
நம்ம கேட்டகிரிதான் சாஸ்தி..
காஞ்சித்தலைவா..!
உன்னுடைய அறிவுரையைக் கேட்டு மெய்றந்து போனோம்..
மெச்சுகிறோம்.
நீ மூத்த பதிவர்தான்.. சந்தேகமில்லை..!
நன்றி உண்மைத்தமிழரே!
நான் மூத்த பிரபலமில்லாத பதிவர் என்பதைத் தெளிவு படுத்திக்கொள்கிறேன் !!!
Post a Comment