இன்று ஜூலை 15, கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள்.
ஆனால் ஒரு அதிசயம். இன்று அவரது பிறந்த நாளைப்பற்றிய ஒரு பதிவும் வரவில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒன்றோ இரண்டோ வந்திருக்கிறது. இந்தப்பதிவு இதைப் பற்றியதல்ல.
எந்த ஒரு பின்புலமுமின்றி தன் முயற்சியால் பெருந்தலைவராக விளங்கி அந்தப் பட்டப்பெயரை (மட்டுமே) உடைமையாக்கிக்கொண்ட பிழைக்கத் தெரியாத அரசியல் வாதி.
இன்று நல்ல நிலையில் இருக்கும் அல்லது படித்த பலரும் அவரது மதிய உணவுத் திட்டத்தாலும், கட்டாயக் கல்வி திட்டத்தாலுமே இந்த நிலைக்கு வந்திருப்பார்கள். ஒரு 'ஜெனரேஷனுக்கே' கல்விக் கண் திறந்தவர்.
காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பவர்கள், எம்ஜியார் ஆட்சி அமைப்போம் என்பவர்கள், அந்தத் தலைவர்களைப் போன்று ஏதாவது செய்தோமா என்று யோசிப்பது உண்மையிலேயே நன்மை பயக்கும்.
அத்தகைய கர்மவீரரைப் போன்றவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,
.....
9 comments:
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
நீங்கள் நினைத்திருக்கிறீர்களே!
//இன்று அவரது பிறந்த நாளைப்பற்றிய ஒரு பதிவும் வரவில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒன்றோ இரண்டோ வந்திருக்கிறது. இந்தப்பதிவு இதைப் பற்றியதல்ல.//
ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி இருக்கே தல..,
ஓட்டுக்கள் போட்டாச்சு
ஆப்பு சார். என்ன சொல்ல வர்றீங்க??
நன்றி கிருஷ்ணமூர்த்தி!
அப்படியெல்லாம் இல்ல தல!
இந்த மாதிரி நாட்களிலாவது இது மாதிரி மனிதர்களை எல்லோரும் சிந்திக்க வேண்டுமென்ற ஒரு ஆதங்கம்தான்.
ஓட்டுக்கு நன்றி (ஓட்டு வேட்டை!!)
சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கெடச்சிருக்கே ? வாழ்த்துக்கள்........!!!!!!
நன்றி ரவி,
Post a Comment