தொடர் பதிவுகள் ஒரு விதத்தில் வலைப்பூக்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுவாரசியமான பதிவுகள் விருது ஒரு முக்கியத்துவம் பெறுகிறது. எனக்கு சுவாரசியம் என்று பட்டது மற்றவர்களுக்குத் தெரியாமல் போய்விடும். இதைப் போன்ற விருதுகள் மூலம் பதிவுகள் வெளியே தெரிய வரும்.
எனக்கு இந்த விருதை அளித்திட்ட நான் ஆதவனுக்கு என் நன்றியறிதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதுவும் விருது என்றவுடன் நான்தான் முதலில் ஞாபகத்திற்கு வந்தேன் என ஆதவன் சொன்னது மகிழ்ச்சியை அளிக்கிறது. எப்போதுமே ஆதவன் என்னை ஊக்கப்படுத்தியவர்களில் ஒருவர். சக பதிவராக அவரிடம்தான் பேசியிருக்கிறேன். நல்லவர். வல்லவர். எதிலும் முன்னவர். எப்போதும் நம்மவர். ( நீங்க சொன்னா மாதிரி ஒரு ரெண்டு பிட்டு எக்ஸ்ட்ராவாவே போட்டுட்டேன். போதுமா ஆதவன்!!)
இதை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையும் இருக்கிறது. கொடுக்கும் போது கிடைக்கும் சுகமே தனி. ஆகவே அந்த ஆனந்தத்தில் கீழ்கண்டவர்களுடைய பதிவை சுவாரசியமான பதிவாகத் தேர்ந்தெடுக்கிறேன். அதனால் மற்றவை சுவாரசியமானதாக இல்லை என்று ஆகிவிடாது. நமக்குத் தெரிந்தவர்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் இது போன்ற தொடர் பதிவுகளின் நோக்கம் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.
1. சுரேஷ் (பழனியிலிருந்து):- ஆதவனுக்கு முதலில் என் ஞாபகம் வந்தது போல எனக்கு இவரது ஞாபகம் முதலில் வருகிறது. இவரது 'கனவுகளே' பதிவு கலக்கலான பதிவு. எக்கச்சக்க ஸ்டோரிலைன் வைத்திருக்கிறார். விதவிதமாக எந்திரன், அசல், வேட்டைக்காரன் ஆகிய படங்களுக்குக் கதை எழுதியிருக்கிறார். வித்தியாசமான கல்லூரித் தொடர் எழுதி அது உண்மையா இல்லை கற்பனையா என்று நம்மை குழப்புபவர். மருத்துவர் என்பது கூடுதல் தகவல். இவர் உறுப்பினராக உள்ள மருத்துவர்கள் பற்றிய பதிவில் அருமையான தகவல்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள் சுரேஷ் (பழனியிலிருந்து)!
2. இராகவன் நைஜீரியா - லேட்டாக வந்து லேட்டஸ்டாகக் கலக்குபவர். கும்மி இவரது ஸ்பெஷாலிட்டி. சரியான செட்டு சேர்ந்துவிட்டால் போதும். பின்னிப் பெடலெடுத்துவிடுபவர். நண்பர்களைப்பற்றிய பதிவும், தந்தையைப் பற்றிய பதிவும் என்றும் நினைவில் நிற்பவை. என்னைப் போன்ற கணக்கியல்துறையைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல். வாழ்த்துக்கள் இராகவன் சார்!.
3. குடுகுடுப்பை - இவர் ஆரம்பத்தில் சூப்பராகக் கலக்கிக்கொண்டிருந்தார். ஆணி அதிகம் போலிருக்கிறது. மறுபதிப்புகளாகச் செய்து வருகிறார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதைப்பற்றி சிறப்புப் பகுதி அவர் சார்ந்த 'வருங்கால முதல்வர்' பதிவில் படிக்கலாம். அவரது அனுபவங்களும், படைப்புகளும் சுவாரசியமானவை. வாழ்த்துக்கள் குடுகுடுப்பையாரே!
4. கோவி.கண்ணன் - பெயர் ஒன்றே போதும். தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பரத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அது இவருக்குப் பொருந்தும் என்றால் மிகையல்ல. எதையும் நடு நிலையோடு அணுகுகிறார் என்பது என் எண்ணம். அதுவும் அவரது பதிவுல் உள்ள பெரியார் வள்ளலார் ஓவர்லேப்ட் இமேஜ் தெளிவுற விளக்கும். வாழ்த்துக்கள் கோவியார்!
5. வாத்தியார்:- திரு சுப்பையா அவர்கள் ஜோதிடப்பாடத்தை மிக மிக அழகாக எளிதாக விளக்கி வருகிறார். நடைமுறை சார்ந்த உதாரணங்கள் பாடத்தை மேலும் சுவாரசியமாக்குகின்றன. வாழ்த்துக்கள் அய்யா!
6. என். கணேசன்:- ஒவ்வொரு பதிவும் தத்துவார்த்தமான சிந்தனைகளுடன் கூடியது. சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும். நிறைய பாசிட்டிவ்வாக எழுதுபவர். வங்கித் துறையில் பணிபுரிந்துவரும் 'ரெகக்னைஸ்ட்' ரைட்டர்!. வாழ்த்துக்கள் கணேசன்!
சிறந்தவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பது, ஒரு மிகக்க(கொ)டுமையான பணி. முடிந்த வரை செய்திருக்கிறேன்.
மிக்க நன்றி!
(ஏன் இந்தப் பதிவு ஃபார்மல்-ஆக வந்திருக்கிறது என்று தெரியவில்லை!)
12 comments:
வாழ்த்துகள்!
தங்களுக்கும் தங்களிடம் பெற்ற மற்றவருக்கும்.
//4. கோவி.கண்ணன் - பெயர் ஒன்றே போதும். தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பரத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அது இவருக்குப் பொருந்தும் என்றால் மிகையல்ல. எதையும் நடு நிலையோடு அணுகுகிறார் என்பது என் எண்ணம். அதுவும் அவரது பதிவுல் உள்ள பெரியார் வள்ளலார் ஓவர்லேப்ட் இமேஜ் தெளிவுற விளக்கும். வாழ்த்துக்கள் கோவியார்!//
விருது ஒருவரை பெருமைப் படுத்துவது அதன் உட்பொருளில் இல்லை, அது யாரால் வழங்கப்படுகிறது என்பதில் இருக்கிறது அதன் மதிப்பு. அந்த வகையில் உங்கள் விருது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
நன்றி ஜமால்!
//
விருது ஒருவரை பெருமைப் படுத்துவது அதன் உட்பொருளில் இல்லை, அது யாரால் வழங்கப்படுகிறது என்பதில் இருக்கிறது அதன் மதிப்பு. அந்த வகையில் உங்கள் விருது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
//
மிக்க நன்றி கோவி.கண்ணன் என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் சொல்லவரவில்லை.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பிட்டு அதிகமா ஒன்னும் இல்லையே. இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். பரவாயில்லை விடுங்க.. தனியா ஒரு பதிவா போட்டுருங்க!
மிக்க நன்றி இளைய பல்லவன் அவர்களே.
என்.கணேசன்
ஆதவன், உங்களுக்காக ஸ்பெஷல் பிட்டு ரெடியாயிட்டிருக்கு!!
கணேசன் அவர்களே,
உங்கள் எழுத்துக்கள் ஆழமான கருத்துக்களுடன் அழகாக இருப்பவை!
நன்றி.
same blood
//(ஏன் இந்தப் பதிவு ஃபார்மல்-ஆக வந்திருக்கிறது என்று தெரியவில்லை!) //
எனக்கும் என்னுடைய பதிவினை முடித்த பின் அப்படி ஒரு எண்ணம் தோன்றியது தல
//வித்தியாசமான கல்லூரித் தொடர் எழுதி அது உண்மையா இல்லை கற்பனையா என்று நம்மை குழப்புபவர். //
அது கடைந்தெடுக்கப் பட்ட கற்பனை....
தயவு செய்து நம்புங்கள்
நன்றி தல,
நீங்க சொல்லியும் நம்பாம இருந்தா எப்படி. நம்பிட்டோஓஓஓம் !!!
Post a Comment