அடிப்படைப் பொருட்களின் மாற்றமே பரிணாமம் எனப்படுகிறது. பரிணாமம், வளர்ச்சி என்ற பொருளில் அறியப்பட்டாலும், எல்லாப் பரிணாமங்களும் வளர்ச்சியல்ல. பரிணாமத்தின் அடிப்படை - சர்வைவல் ஆகும். நாம் வாழ்வதற்காக நம்மை மாற்றிக்கொள்வது பரிணாமம். மாற்றம் என்பது வலியைத் தரக்கூடிய ஒரு நிகழ்வு.
இப்போதும் பதிவுலகில் ஒரு பரிணாமம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இது வலியைத் தரத்தக்கதாக இருக்கிறது. வேண்டாதவற்றை நீக்கியும், தேவையானதை நோக்கியும் ஒரு பயணம் நடக்கிறது.
ஒரு பக்கம் விருது கொடுத்து அதைப் பலருக்கும் கொடுக்கச் செய்து, அன்புச் சங்கிலி வலுவாக்கப்படுகிறது. மறு பக்கம், வினை, எதிர்வினை, செய்வினை என்ற வகையில் அந்தச் சங்கிலியை வலுவிழக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இடையில் அனானிகள் புகுந்து செய்யும் அட்டகாசம் எறியும் நெருப்பில் எண்ணையை வார்ப்பது போன்று இருக்கிறது.
தினமும் பார்த்து பழகி ஆண்டாண்டு காலமாக ஒன்றாக இருப்பவர்களிடமே கோபமும், சந்தேககமும் இருப்பது இயற்கை. ஆனால் முன்பின் அறியாது எழுத்துக்களால் மட்டுமே பிணைக்கப்பட்டுள்ள ஒரு சமூகம் இதையெல்லாம் அறவே நீக்கி எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பை மீறிய எதிர்பார்ப்பு. அனைத்து விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே நம் இயல்பு.
இவ்வாறாக இயல்பை மீறி இருக்கவேண்டிய சூழல்தான் நாம் பரிணாமம் பெற்று அடுத்த நிலைக்குச் செல்லும் மாற்றம். இந்த மாற்றம், மேலே சொன்னது போன்று இயல்பை மீறியதாகவும் வலியுள்ளதாகவும் அமைகிறது.
பரிணாமம் பெற்றவர்கள் அதாவது வலியைத்தாங்கியவர்கள்தான் தொடர்ந்து வாழ்கிறார்கள். மற்றவர்கள் மறைகிறார்கள்.
பரிணாம வட்டத்தின் ஆரம்ப ஆரப்புள்ளியிலிருந்து மேல் நோக்கி நகரும் கோடாக இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவை தொடரும். தொடர்வோரும் தொடரலாம்.
இறுதியில் நாம் மீண்டும் அடையும் இடம் ஆரம்பமாகவே இருக்கும். அப்போது யார் இறுதிவரை வந்து ஆரம்பத்தைத் தொடுவார்கள் என்று பார்க்க வேண்டும்.
ஆக,
பரிணாமத்திற்கு நீங்கள் தயாரா?
பரிணாமத்தை உணர்கிறீர்களா?
ஆமெனில் இவையும் கடந்து வாழ்வீர்கள். இல்லையெனில் . . .
11 comments:
பக்குவப்பட்ட பதிவு பல்லவன்.
இதுல பினா.வானா இருக்கா?
பின் நவீனத்துவம்தான் பரிணாமத்தின் முன் வார்ப்புரு.
அதை ஏற்றுக்கொள்ளமுடியாதவர்கள்தான் அதை எதிர்க்கிறார்கள். எள்ளி நகையாடுகிறார்கள்.
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. ஆனா சிக்மண்ட் ஃபிராய்டு வேறமாதிரி சொல்லியிருக்காரு.
ok ok ok
ok ok ok
//பின் நவீனத்துவம்தான் பரிணாமத்தின் முன் வார்ப்புரு.//
பரிமாணத்திற்கு பிறகான அச்சுக்களை தேடும் பணியும் பின்நவீனத்துவம்ன்னும் சொல்லலாமா இளைய பல்லவன்!
//
ஊர்சுற்றி said...
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. ஆனா சிக்மண்ட் ஃபிராய்டு வேறமாதிரி சொல்லியிருக்காரு.
//
நான் ஒரு சிக்மென்ட் ஃப்ராய்ட் ஆயிட்டு போறேன்.!!
நன்றி தல
///சென்ஷி said...
//பின் நவீனத்துவம்தான் பரிணாமத்தின் முன் வார்ப்புரு.//
பரிமாணத்திற்கு பிறகான அச்சுக்களை தேடும் பணியும் பின்நவீனத்துவம்ன்னும் சொல்லலாமா இளைய பல்லவன்!///
?!?!?!
எப்படி வேணா சொல்லலாமுங்க..
பதிவுலகின் நிலையை அழகாக எழுதியுள்ளீர்கள்!
//
முன்பின் அறியாது எழுத்துக்களால் மட்டுமே பிணைக்கப்பட்டுள்ள ஒரு சமூகம் இதையெல்லாம் அறவே நீக்கி எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பை மீறிய எதிர்பார்ப்பு
//
நீங்கள் கூறுவது உண்மையே!
//
பரிணாமம் பெற்றவர்கள் அதாவது வலியைத்தாங்கியவர்கள்தான் தொடர்ந்து வாழ்கிறார்கள். மற்றவர்கள் மறைகிறார்கள்.
//
மாற்றம் மட்டும் தான் நிலையானது என்பதை நம் பதிவுலகில் மூலம் அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
நன்றி செந்தில்வேலன்.
நன்மையே விரும்புவோம்.
நமது பல்வேறு பிரச்சனைகளுக்கு வடிகாலாய் அமைந்துள்ள வலையுலகமே ஒரு பிரச்சனையாவதை யாரும் விரும்பமாட்டார்கள்.
Post a Comment