சினிமாவிற்குக் கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே உண்டு. ஆனால் காசு கொடுத்து யார் நம் கதையைக் கேட்பார்கள்:((?
ஆகவே சினிமா எடுக்கத் தேவையான கதைகளை இலவசமாகக் கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். இதற்கான காபிரைட் ஒன்றும் செய்யவில்லை. எக்கச்சக்க வெரைட்டியான கதைகள் உள்ளன. இதை யார் வேண்டுமானாலும் பயன் படுத்திக்கொள்ளலாம்.
உங்களுக்கு எந்த மாதிரி கதை வேண்டுமோ சொல்லுங்கள். விரைவில் பதிவேற்றப்படும்.
கீழ்கண்ட விவரங்களை மட்டும் தாருங்கள். உடனடியாகக் கதை ரெடி...
1. கதை டைப் (சென்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ், த்ரில்லர், ராஜாராணி, பக்தி...)
2. பட்ஜெட்
3. ஹீரோ, ஹீரோயின் (ஆப்ஷனல்)
4. லொக்கேஷன்
5. ஸ்டோரி லைன்
திரைக்கதை வேண்டுவோர் ஸ்பெஷலாகச் சொல்லலாம்...
வாங்க வாங்க வந்து அள்ளிக்கிட்டு போங்க..
பொன்னான வாய்ப்பைத் தவற விடாதீர்கள்...
பின் குறிப்பு:- இதில் வரும் கதைகள் இதற்கு முன்னரோ, பின்னரோ, தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுகு, ஒரியா, துளு, போன்ற இந்திய மொழிகளிலோ, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அன்டார்டிகா, அலாஸ்கா, அஸ்கா, டாங்கோ, காங்கோ, மாங்கோ, ஜப்பான், ஆகிய உலக மொழிகளிலோ வந்திருந்தால் நாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல.
பின் குறிப்பிற்கு பின் குறிப்பு:- இது காமெடி அறிவிப்பு அல்ல
பி.கு.பி.கு.பி.கு:- ஆனால் அறிவிப்பு காமெடி ஸ்டைலில் செய்யப்படுகிறது.
(பி.கு.)பவர் 4:- கதை எழுதும் உரிமை ஆசிரியருக்கே.
(பி.கு.)பவர் 5:- இந்த ஆஃபர் குறுகிய காலத்திற்கு மட்டுமே.
(பி.கு.)பவர் 6:- இத்துடன் பி.கு. நிறுத்தப்படுகிறது
6 comments:
//ஹீரோயின் (ஆப்ஷனல்)//
இது அநியாயம்
ராஜா ராணி/திரில்லர்.
பட்ஜெட்லாம் எதுக்கு கேக்குறீங்க.நமக்கு ஒரு இளிச்சவாயன் சிக்காமலா போயிடுவான்?
'கதைக்கு' 'நடிக்கிற' ஹீரோவா போடுங்க.
லொகேஷன் - எங்கயானாலும்,.
ஸ்டோரி லைன் - பழைய சாண்டில்யன் கதையில இருந்து உருவிக்குவோம்.
ஆமா, என்னய வச்சு காமெடி, கீமடி பண்ணலயே.
அதெல்லாம் உங்ககிட்ட கேட்கமாட்டாங்க. நீங்க ஒரு புதிய ப்ளாக் ஆரம்பிச்சு அதுல எழுதுங்க. அவுங்களே எடுத்துப்பாங்க :)
ஆமா ஹீரோவா யார போடலாம்ன்னு இருக்கீங்க? நான் வேணா வரட்டுமா?
சுரேஷ், வாங்க வாங்க.
உங்களுக்கு வேணுங்கிற ஹீரோயின் செலக்ட் பண்ணிக்கலாம். இல்லைன்னா நாங்களே ஈரோயினியைப் போட்டுருவோம்!!!
வாங்க பப்பு...
உங்களுக்கு வேணுமின்னா காமெடி ஹீரோ காரெக்டர்ல ஒரு ஸ்டோரி ரெடி பண்ணிரலாம்.
அப்படியே உங்களையும் வெச்சி காமெடி பண்ணிரலாம்...
வாங்க ஆதவன்,
நல்ல சஜ்ஜஸ்ஷன்.
ட்ரை பண்ணலாம்!!
Post a Comment