Monday, July 13, 2009

ஹாய் . . .

ஹாய்.. என்ற மென்மையான குரல் அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் அந்தக் குரல் கூப்பிட்டது அவனையல்ல. இருந்தாலும் குரலுக்குச் சொந்தக்காரியை ஒருதடவை பார்த்ததில் குயிலின் குறல் கொண்ட குமரியின் அழகு அவனைக் கவர்ந்தது. இவன் பார்த்ததால் அவளும் பார்த்தாள். சாரி என்பதைப் போல் புன்னகை பூத்தாள்.

இட்ஸ் ஓக்கே.. என்ற பதில் பார்வையுடன் திரும்பி நடந்தான். நடந்தவனின் நினைவுகள் கடந்தகாலத்தை அசை போட்டன. ஹாய்.. இந்த ஒரு வார்த்தைதானே....

====

ஹாய்... கல்லூரியின் முதல் நாளில் தோழமையுடன் கேட்ட ஒலி அவனுக்குக் கல்லூரியைப் பற்றிய அறிவுறுத்தல்களிலிருந்து மாறுபட்டிருந்ததை எண்ணி வியந்தவாறே திரும்பிப்பார்த்தான், அந்தப் பார்வை அவன் வாழ்க்கையையே திருப்பிப்போடும் என்பதை அறியாமல்.

ஹாய்.. என் பேர் மதன். நைஸ் டு மீட் யூ. உன் பேரத்தெரிஞ்சுக்கலாமா.

ஹாய். ஐ ஆம் ராம். நைஸ் டு மீட் யூ டூ. நான் இ.சி.இ. நீ?

மி டூ.

ரொம்ப நல்லதாப்போச்சு. இங்க ராக்கிங் அதிகம்னாங்களே..

இல்ல.இல்ல. இது ஸ்கூல் மாதிரி போகப் போகத் தெரிஞ்சிப்ப.

இப்படியாகத் துவங்கியது, ஹாஸ்டலில் ஒரே ரூம் கிடைத்து, ஒரே பைக்கில் திரிந்து,.. எல்லாம் ஒரே ஒரே...

"ஒரே"வில் இருவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் எதிர்ப்பார்க்காத ஒன்றும் ஒரேவாக வந்த போது...

====

மூன்றாமாண்டு இறுதியில்...

ஹாய் ராம்... இன்னிக்கு என்ன ஆச்சி தெரியுமா.- மதன் ஆர்வமுடன்

பெத்தாச்சியா, படையாச்சியா? - ராம்.

நக்கலா.. கேள்டா. ப்ரிடிஷ் கவுன்சில்லருந்து வெளிய வந்தேனா. அப்ப ஒரு ஃபிகர்டா. நான் கனவுல என்ன நெனச்சிக்கிட்டிருந்தேனோ அப்படியே.. வந்து ஹாய்னு சொல்லி என்கிட்ட டைம் கேக்கறா..

அவ டைம் பேட்னு இதுலேருந்தே தெரியுதே..

அடிங்.. கேள்றா. அப்படியே டெவலப் ஆகி.. ஒரு இதுவாயிருச்சிடா. நீ என்ன சொல்ற. அதுவாயிருந்தா கன்டினு பண்ணலாங்கிறியா..

டேய்.. நீ சென்னைக்குப் புதுசுடா.. இதெல்லாம் டைம் பாஸ் வேல. நீ ஒழுங்கா படிக்கிற வேலையப் பாரு..

பொறாமடா ஒனக்கு. ஒண்ணு ஒனக்கும் மாட்டும் போது வெச்சிக்கறண்டா..

மாட்டியது அவனுக்கு. அதுதான் ஒரே..

===

நான்காமாண்டு.. மத்தியில்...

ஹாய் மதன், இன்னிக்கி எம்.ஜி.எம்.முக்கு போலாம்னு சொல்லியிருக்கா. நீயும் வந்து ஒன்னோட ஒப்பினியன சொல்றா.

டேய். படிக்கத உட்டுட்டு எம்.ஜி.எம்னு சுத்தற? சரி வர்றேன். எனக்குதான் ஒண்ணுமில்லன்னு ஆகிப்போச்சு. உனக்காவது ஒண்ணு மாட்டுதான்னு பாப்பம்.

தேங்க்ஸ்டா. நீ மொதல்லயே போயிடு.

சரி சரி ஒழுங்கா வந்து சேரு. அங்க இங்கன்னு நடுவுலயே கழண்டுக்காதே. சொல்லிட்டேன்.

ராம் எம்.ஜி.எம்.மில் காத்திருந்தான்.

===


ஹாய் ராம். திஸ் இஸ் ராதா. - மதன்.

ஹாய்... - ராதா.

ராதா? திக்கென்றது ராமுக்கு. திரும்பிப்பார்த்தால்.. ப்ரிடிஷ் கவுன்சில் கன்ஃபர்ம் ஆனது.

ஹாய்... - ராம்.

ராதா ஒன்றும் இல்லாதது போல் இருந்தாள். ஏனென்றால் அவளுக்கு அப்போது ஒன்றும் இல்லையே.. ராமுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை.

====

ஹாய்... பழக்கமான இந்தக் குரல் அவனை மீண்டும் இங்கே அழைத்து வந்தது.

ஹாய் மதன்... ஹவ் ஆர் யூ? ஹவ் இஸ் ராதா?

வீ ஆல் ஆர் டூயிங் வெல். வா வா. ஏண்டா. அமெரிக்கா போனா தமிழ்ல பேச மாட்டியா.

அட நீ வேற. அங்க தடுக்கி விழுந்தா தமிழனுங்கதான். தமிழ்ல பேசிப்பேசி இங்கிலீஷ் மறந்துடுச்சுன்னுதான் இங்க இப்படி பேசறேன். சரி வீட்டுக்குப் போலாமா?

ஷ்யூர்.

====

ஹாய் ராதா .. ஹவ் ஆர் யூ மை டார்லிங்.. என்றவாறே ராதாவைத்தூக்கி அழுத்தமாக ஒரு முத்தத்தைக் கொடுத்தான்.

நைஸ் அங்கிள்.. தேங்க்யூ.. ராதா எப்படியிருக்கா- என்றாள் மழலை கலந்த மொழியில் ராதா. மதனின் மகள்.

ம். ரொம்ப நல்லாயிருக்கா. இப்ப ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டா. பேசறயா. என்று சொல்லி செல்லினான் ராம். மறுமுனையில் அவன் மகள் ராதா.

ஹாய்... ராதா. நான் ராதா பேசறேன்..

மறுமுனையிலும் ஹாய் கேட்டிருக்க வேண்டும்..

இங்கேயும் "ஒரே"

5 comments:

CA Venkatesh Krishnan said...

டெஸ்ட் கமெண்ட்.

Nimal said...

மூணு முறை வாசிச்சேன்... ஆனா புரியல... :)

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ் அதாவது நீங்க என்ன சொல்ல வரீங்கன்னா “இரண்டு பேருக்கும் காதல் தோல்வி ஏற்பட்டு, தங்களின் மகள்களுக்கு காதலியின் பெயரையே வைத்திருக்கின்றனர்” அப்படியா??

சத்தியமா மூணாவது தடவை படிச்சு தான் இப்படி புரிஞ்சுகிட்டேன். இதுவும் சரியான்னு தெரியாது.

வர வர பினா.வானா ஆகிட்டே வரீங்க....

CA Venkatesh Krishnan said...

நிமல் ரொம்ப நன்றி.

ஆத்தாஆஆஆ நான் பாசாயிட்டேன்.

CA Venkatesh Krishnan said...

ஆ... ஆதவன்.

சரியா புரிஞ்சிக்கிட்டீங்க..

அதனால நான் இன்னும் முழுமையா பினா வானாவா ஆகலேன்னு தெரியுது. தொடர்ந்து முயற்சி பண்றேன்.