எனக்கே முதலில் தெரியாது. ஏதாவது காமெடி, சினிமா பதிவு போட்டால் 100-200 பேரும், சக்கர வியூகம் போட்டால் 40-50 பேரும் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போவார்கள். பதிவே இல்லாத நாட்களில் 10-20 பேராவது வந்து பார்த்துவிட்டுப் போவார்கள்.
அப்படிப்பட்ட புகழ்பெற்ற எனது வலைப்பூவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 600 ஹிட்டுகள்!. என்ன ஆயிற்று என்று லைவ் ட்ராஃபிக் ஃபீடில் தேடினால் பெரும்பாலானவர்கள், விகடன்.காமிலிருந்து வந்திருந்தார்கள். அதில் இந்த வார ஆனந்த விகடன் லிங்க் இருந்தது. இது தெரிந்தது நேற்று இரவு 11.45 மணிக்கு.
சரியென்று இன்று காலை விகடன் புத்தகத்தை வாங்கிப்பார்த்ததும் விஷயம் உறுதியானது.
"நீங்க எழுதி எழுதி என்னத்த கிழிச்சீங்க? பேப்பர்ல எழுதியிருந்தா அதையாவது கிழிச்சியிருக்கலாம்! லொட்டு லொட்டுன்னு பொட்டிய தட்டிக்கிட்டிருக்கீங்க." என்ற கேள்வியோ, கருத்துரையோ தங்கமணியிடமிருந்து இனி எழ வாய்ப்பில்லை. (இது வரையிலும் இந்தக் கேள்வி எழவில்லை என்பது கூடுதல் தகவல்!.
ஏன் இனி எழாது என்பதற்கான விடைதான் தலைப்பு. இந்த வார ஆனந்த விகடனில், "விகடன் வரவேற்பறை" என்ற பகுதியில், காஞ்சித்தலைவன் வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு முறை எனது புரட்சிகரப் பதிவான "ஃபிகர்களை கரெக்ட் செய்வது எப்படி" என்பது யூத்ஃபுல் விகடன்.காமின் ப்ளாக்ஸ் கார்னர் துவங்கப்பட்ட சமயத்தில் இணைக்கப்பட்டது.
இப்போது பிரின்ட் எடிஷனிலேயே வந்திருப்பதும், வலைப்பூ ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே விகடனின் பார்வை இங்கு விழுந்திருப்பதும் மிக்க மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.
சக்கர வியூகத்தை அறிமுகப்படுத்தாமல், திரைக்கதை எழுதுவது எப்படி என்ற பதிவுத்தொடரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்!.
இதை சாத்தியமாக்கிய உங்கள் ஆதரவை எப்போதும் போல் என்றும் நாடும்,
உங்கள்
இளைய பல்லவன்
20 comments:
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்
உழைப்புக்கு கிடைத்த அங்கிகாரம். வாழ்த்துகள்.
மென்மேலும் கலக்குங்க பல்லவன்
ட்ரீட்ட்ட்ட்ட்ட்ட்ட் வேணும் :)
வாழ்த்துக்கள்; தல...,
உண்மையில் சக்கரவியூகத்தைப் பற்றியும் அவர்கள் சொல்லி இருக்கலாம்..,
வாழ்த்துக்கள்!
கலக்குங்க தோழரே! பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் ...
சக்கர வியூகத்த்திற்கு முகப்பில் ஒரு தொடுப்பு கொடுங்கள் தல..,
congrats sagaa
வாழ்த்துக்கள் நண்பா.
vaazhthukkal.
முதல் வாழ்த்துக்கு நன்றி ஜமால்!
நன்றி இராகவன் சார்!
நன்றி ஆதவன்.
ட்ரீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் நிச்சயம் உண்டு. சிம்ரன் ஆப்பக்கடையில் வச்சிக்கலாம்!
வாங்க தல!
நானும் அப்படித்தான் நெனச்சேன். ஆனா ஸ்க்ரீன் ஷாட்ல "சக்கர வியூகம்" பதிவுதான் வந்திருக்கு!
நன்றி ரவிஷங்கர்!
நன்றி வானம்பாடிகள்!!
நன்றி முனியசாமி!
நன்றி தல! (தொடுப்பு கொடுப்பது எப்படின்னு சொல்லுங்க)
நன்றி சகா!
நன்றி உலகனாதன்!
நன்றி கேபிள் சங்கர்!
நன்றி ராம்!
இதை பதிவாக போட்டு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் தலைவா..தாமதமாகிவிட்டது...
வாழ்த்துக்கள்..நிறைய எழுதுங்கள்...
///நர்சிம் said...
இதை பதிவாக போட்டு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் தலைவா..தாமதமாகிவிட்டது...
வாழ்த்துக்கள்..நிறைய எழுதுங்கள்...///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நர்சிம்!
வாழ்த்துக்கள்
//
சண்முகவேல் said...
வாழ்த்துக்கள்
//
நன்றி சண்முகவேல்
Post a Comment