ஃபிகர்களுடனான எனது தொடர்புகள், பட்டறிவு, படிப்பறிவு, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்கண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகம் இதைப் படித்துப் பயன் பெறுவதாக.
ஃபிகரை கரெக்ட் செய்வது என்பது ஒரு கலை. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற சொலவடைக்கேற்றார்ப்போல் ஃபிகர் கரெக்ஷனும் பழக்கத்தின்பால் வருவதுதான்.
எவை எல்லாம் ஃபிகர்கள்?
எல்லாமே ஃபிகர்கள் தான். இதில் சின்ன ஃபிகர், பெரிய ஃபிகர், ஃபேன்சி ஃபிகர் என்றெல்லாம் பிரிவினை செய்யக்கூடாது. எல்லா ஃபிகரையும் கரெக்ட் செய்து வைத்துக் கொண்டால்தான் கடைசியில் உதவும்.
ஃபிகரை கரெக்ட் செய்ய வேண்டுமா? மடக்க வேண்டுமா?
ஃபிகரை நிச்சயமாக கரெக்ட் தான் செய்ய வேண்டும். மடக்க நினைக்கவே கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கரெக்ட் செய்துவிட்டால் தானாகவே நம் வழிக்கு வந்து விடும்.
சரி. இனிமேல் கரெக்ட் செய்யும் வழி முறைகளைப் பார்ப்போம்.
1. நீங்கள் கணக்குப் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு ஃபிகர் மட்டும் உங்களை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது. அப்போது என்ன செய்வீர்கள்?
அந்த ஃபிகரை கரெக்ட் செய்வதிலேயே உங்கள் கவனத்தையெல்லாம் செலவழித்துக் கொண்டிருந்தால், சாரி, உங்கள் அணுகுமுறை தவறு.
அதை அப்படியே விட்டு விட்டு மற்றவற்றை சற்று நோக்குங்கள். அவற்றிலிருந்து உங்களுக்கு நல்ல 'லீட்' கிடைக்கலாம். இதன் மூலம் நாம் கரெக்ட் செய்ய நினைக்கும் ஃபிகர் தானாகவே சரியாகிவிடும்.
2. ஃபிகர்களை கரெக்ட் செய்வதில் சில குழப்ப நிலைகள்.
ஒரு சில ஃபிகர்கள் மேலுக்கு சரியானது போலவும், பிரச்சனை எதுவும் இல்லாதது போலவும் இருக்கும். ஆனால் சற்று கவனித்துப் பார்த்தால் நமக்குத் தேவையான ஃபிகருடனான பிரச்சனைக்கு இது போன்றவைதான் காரணம் என்று தெரிய வரும். ஆகவே இவைகளின் மீதும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
அடுத்தது ஃபேன்சி ஃபிகர்கள். பார்க்கும்போதே நன்றாக இருக்கும் இந்த வகை ஃபிகர்கள் நம் கவனத்தை திசை திருப்பி விடக் கூடும். ஆகவே இவற்றையும் சற்று கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
ஃபிகர்களை மெய்ண்டெய்ன் செய்யும் முறைகள்.
இப்படியாக கஷ்டப்பட்டு ஃபிகர்களை கரெக்ட் செய்வதோடு முடிந்து விடுவதில்லை. அவற்றை சரியாக மெய்ண்டெய்ன் செய்யாவிட்டால் நாம் பட்ட கஷ்டங்களெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் வீணாகிவிடும்.
நம்மைத் தவிர நம்மைச் சுற்றியுள்ளவர்களும் ஃபிகர்களுடன் சம்பந்தப் படலாம். அப்போதெல்லாம் நாமும் சற்று கவனமுடன் அவர்களின் நடவடிக்கைகளை ஃபாலோ செய்தாலே போதும். இத்தகைய சங்கடங்களை நீக்கி விடலாம்.
மேலும் எல்லா ஃபிகர்களையும் அடிக்கடி ரிவியூ அதாவது திரும்பத்திரும்ப பார்த்துக் கொள்ளவேண்டும்.
மேலே சொன்னவைகளெல்லாம் அடிப்படைகள்தான். சொல்லித் தெரிவதில்லை சில கலைகள். ஆகவே, கோடிட்டுக் காட்டிவிட்டேன். ரோடு போடுவதோ, பாலம் கட்டுவதோ உங்கள் சாமர்த்தியம்.
மேலதிக தகவல்களுக்கும், விளக்கங்களுக்கும் பின்னூட்டமிடுங்கள். தவறாமல் தம்ஸ் அப்பில் குத்துங்கள். தமிழிஷில் ஓட்டு போடுங்கள்.
வாழ்க வளமுடன் ! ! !
39 comments:
அண்ணா ... ஆஆஆஆஆ
காஞ்சித்தலைவா
காஞ்சி போய் இருக்குற வங்களுக்கு இப்படி ஒரு ஐடியாவா
திரும்பி திரும்பி பார்க்கலன்னா எவனாவது பிக் அப் பன்னிட்டு போய்டுவான்.
ரெண்டுலையும் ஓட்டியாச்சு
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்..
சூப்பர் ஃபிகரோடு சேர்ந்த சப்ப பிகரும் சீன் போடும்..
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்..
சூப்பர் ஃபிகரோடு சேர்ந்த சப்ப பிகரும் சீன் போடும்..
ஃபிகர் ஃபிகர்னு சொல்றிங்களே அப்படினா என்ன..
//அடுத்தது ஃபேன்சி ஃபிகர்கள். பார்க்கும்போதே நன்றாக இருக்கும் இந்த வகை ஃபிகர்கள் நம் கவனத்தை திசை திருப்பி விடக் கூடும். ஆகவே இவற்றையும் சற்று கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
//
வாட்சிங்கா இருக்கணும்...
//
நட்புடன் ஜமால் கூறியது...
//
ரொம்ப நன்றி ஜமால்.
சார்டர்ட் அக்கவுண்டண்டா இருந்துகிட்டு ஃபிகர்களைப் பற்றி பதிவு போடாம இருந்தது என்னவோ போல இருந்துச்சு. அதான் !!!
செய்யது சார்,
உங்க கருத்துக்கு நன்றிங்க. நீங்க நான் சொன்ன ஃபிகரப் பத்திதானே சொல்றீங்க?
//
vinoth gowtham கூறியது...
ஃபிகர் ஃபிகர்னு சொல்றிங்களே அப்படினா என்ன..
//
வாங்க வினோத்,
கரெக்டா கேட்டீங்க. அக்கவுண்ட்ஸ்ல வர்ற ஃபிகரப் பத்திதான்.
///
அ.மு.செய்யது கூறியது...
//அடுத்தது ஃபேன்சி ஃபிகர்கள். பார்க்கும்போதே நன்றாக இருக்கும் இந்த வகை ஃபிகர்கள் நம் கவனத்தை திசை திருப்பி விடக் கூடும். ஆகவே இவற்றையும் சற்று கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
//
வாட்சிங்கா இருக்கணும்...
///
சரியா புரிஞ்சிகிட்டீங்க. வாழ்த்துக்கள்!!!
உங்களுக்கு அக்கவுண்ட்ஸ் பேக்ரவுண்டா?
எனக்கு பிகர் எல்லாம் வேண்டாம் .நீங்க கணக்கராக இருப்பதால் அதை பற்றிய தகவல் வேண்டும் .CA சென்னை யில் எங்கு படிக்கலாம் ?எவ்வளவு செலவாகும் ?12 th முடித்ததும் மேல் பட்டப்படிப்பு முடித்து விட்டுத்தான் CA வில் சேரமுடயுமா?CA படிப்புக்கான link அனுப்பமுடயுமா?
அண்ணி போன் நம்பர் என்ன?
கரெக்டா சொன்னீங்க..
அக்கௌண்டண்டாய் இருந்து கொண்டு ஃபிகர்களை ஒழுங்காக மெயிண்டெயின் செய்யவில்லை என்றால் எப்படி...
எந்த பிகர டெபிட் பண்ணணும், எந்த பிகர கிரிடெட் பண்ணணும், எத ரைட் ஆப் பண்ணனும் அப்படின்னு ஒழுங்கா தெரிஞ்சுக்கணும்.
(நானும் உங்கள மாதிரிதாங்க...அதாவது கணக்குபிள்ளை..(Accountant))
ஃபிகரை கரெக்ட் செய்வது என்பது ஒரு கலை. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற சொலவடைக்கேற்றார்ப்போல் ஃபிகர் கரெக்ஷனும் பழக்கத்தின்பால் வருவதுதான்.
///
ஸ்கூல்
ஆரம்பிக்கலாம் நீங்க...
இதுக்குன்னு
தனி
சார்ட் எதுவும் உண்டா/
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலர் அவர்களே.
நான் சொல்லியிருப்பது கணக்கு சம்பந்தப்பட்ட ஃபிகர்தான்!.
சி.ஏ. படிக்க சென்னைதான் சிறந்த இடம். இப்போது 10வது முடித்தவுடனேயே 'Common Proficiency Test' என்று ஒன்று வைத்துவிடுகிறார்கள்.
முன்பெல்லாம் சி.ஏ. படிக்க ஆடிட்டரிடம் ஆர்டிகிள்ஸ் (ட்ரெயினீ) ஆக சேர்ந்து பிறகு தேர்வு எழுத வேண்டும். இப்போது Professional Education II (Intermediate) பாஸ் செய்த பிறகுதான் ஆடிட்டரிடம் சேர வேண்டும். இதனால் சி.ஏ. படிக்க வந்து விட்டு பாஸ் செய்ய முடியாமல் போவது தடுக்கப் படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு www.icai.org என்ற தளத்தைப் பார்க்கலாம். சி.ஏ. படிப்புக்கு ப்ரைவேட் கோச்சிங்கும் மிக அவசியம். அதற்கு ப்ரைம் அகாடமி மிக புகழ் பெற்றது. மேலும் பல நிறுவனங்களும் உள்ளன.
வேறு தகவல்கள் தேவைப் பட்டால் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
தெய்வமே.. ஒரு நிமிஷம் பறக்க வச்சிங்க..அப்படியே மண்ணுல போட்டு மூடிட்டிங்க.. நல்லாயிருங்கப்பூ
ப்ரைம் அகாடமி எங்கு உள்ளது. 12th maths&bio எடுத்தவர்கள் CA வில் சேரலாமா ?CA படிப்பது கஸ்ட்டம் படிதுகிட முடியாது என்று சொல்கிறார்கள் உண்மையா ? course எந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கும் .எதனைவருடங்கள் படிக்கணும் ? செமஸ்டர் எத்தனை ?உங்கள் பதிலை எதிர்பார்கிறேன் .நன்றி
ம்ம்ம்ம்ம்.
காலம் போன கடைசியிலே...
//
நான் ஆதவன் கூறியது...
அண்ணி போன் நம்பர் என்ன?
//
எதுக்கு.
சொ.செ.சூ வா?
இருந்தாலும் சொல்றேன். 0லருந்து 9க்குள்ள இருக்கற நெம்பர்கள 10 தடவ போடணும். அவ்ளோதான் !!!
//
இராகவன் நைஜிரியா கூறியது...
//
முதல் வருகைக்கு நன்றி சார்.
ஆமாங்க. நமக்குத் தெரிஞ்ச டெபிட் க்ரெடிட் பத்தி சூடாவும் சுவையாவும் வழங்கியிருக்கேன்.
நீங்களும் அக்கவுன்டன்ட் தான் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. எனக்கும் நைஜீரியாவுக்கு நெறைய கால்ஸ் வருது. வரலாமான்னு யோசனையா இருக்கு..
thevanmayam கூறியது...
//
ஸ்கூல்
ஆரம்பிக்கலாம் நீங்க...
//
//இதுக்குன்னு
தனி
சார்ட் எதுவும் உண்டா/
//
ரொம்ப நன்றிங்க..
ஏதோ சமூக சேவை செய்யறோம்...
ஆயினும் உங்க கருத்து உரிய நேரத்தில் உரிய வகையில் / உயரிய வகையில் பரிசீலிக்கப் படும்...!!!
//
கார்க்கி கூறியது...
தெய்வமே.. ஒரு நிமிஷம் பறக்க வச்சிங்க..அப்படியே மண்ணுல போட்டு மூடிட்டிங்க.. நல்லாயிருங்கப்பூ
//
அடடா!!!
ஆனாலும் ரொம்ப தேங்கஸ்!!!
//
malar கூறியது...
உங்கள் பதிலை எதிர்பார்கிறேன் .நன்றி
//
ஒரு பதிவு போடற அளவுக்கு கேட்டுட்டீங்களே ! ! !
இருந்தாலும் சொல்றேன்.
1. ப்ரைம் அகாடமி ராயப்பேட்டையில் உள்ளது.
2. +2 மேத்ஸ், பயோ படித்தவர்கள் சி.ஏ.வில் சேரலாம். என் நண்பர் கெமிஸ்டிரி படித்தவர்.
3. சி.ஏ. படிப்பது கஷ்டம்தான். அவ்வளவு கஷ்டம் ஏன் பட்டோம்னு இப்ப தோணுது:((.
ஆனால் முறையாகப் படித்தால் ஒரே அட்டம்ப்டில் பாஸ் செய்து விடலாம். இல்லைன்னா ஒரு பேப்பர் போனாலும் மொத்தமா எல்லாத்தையும் எழுதணும். அரியர்செல்லாம் கிடையாது. அதே மாதிரி அக்ரிகேட் (எல்லா பேப்பர்லயும் ஆவரேஜ்) 50க்கு மேல இருக்கணும். எல்லாத்துலயும் பாஸாயிட்டு அக்ரிகேட் கிடைக்கலன்னா மறுபடியும் எல்லாத்தையும் எழுதணும். இதுலதான் எல்லாருக்கும் கஷ்டம்.
4. கோர்ஸ் எண்ணிக்கி வேணும்னாலும் சேரலாம். சேர்ந்ததிலிருந்து குறைந்த கால படிப்பு (9 - 12 மாதங்கள்) தேவை.
5. இப்ப மொத்தமா 10க்கு அப்புறம் ஆரம்பிச்சா நாலு - நாலரை வருடங்களாகும்.
6. செமஸ்டர் எல்லாம் இல்லை. Common Proficiency Test, Professional Competency Examination, Final Examination என்று மூன்று லெவல் உள்ளது. சி.பி.டி. முடித்ததும் ஆடிட்டரிடம் மூன்றரை வருடம் ட்ரெயினிங்கோடு படித்து தேர்வும் எழுத வேண்டும். கூடவே கம்ப்யூட்டர் ட்ரெயினிங்கும் இறுதியில் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் ட்ரெயினிங்கும் உண்டு.
இதெல்லாம் முடித்து விட்டால் நீங்கள் சி.ஏ.தான் ! ! !
இன்னும் ஏதாவது தகவல் வேண்டுமென்றால் சொல்லுங்கள்..... (ஹூஃப்.....).
தல உங்க பதிவுக்கு யூத்ஃபுல் விகடனில் லிங்க் கொடுத்து இருக்காங்க.. போய் பாருங்க
http://youthful.vikatan.com/youth/index.asp
//
SUREஷ் கூறியது...
ம்ம்ம்ம்ம்.
காலம் போன கடைசியிலே...
//
என்ன பண்றது சுரேஷ் :((
இதோட எஃபெக்ட பாத்தீங்களா??
இது சூடான பதிவுல வந்திருக்கு.
தமிலிஷ்ல 10 ஓட்டு.
போதாததுக்கு யூத் விகடன்ல வந்திருக்குன்னு கார்க்கி சொல்றாரு.
//
கார்க்கி கூறியது...
தல உங்க பதிவுக்கு யூத்ஃபுல் விகடனில் லிங்க் கொடுத்து இருக்காங்க.. போய் பாருங்க
http://youthful.vikatan.com/youth/index.asp
//
இப்பதான் பார்க்கிறேன்..
தகவலுக்கு நன்றி சகா ! ! !
வயசு ஆகிப்போச்சி, ரெம்ப தாமதமா கிடைச்சுருக்கு
நீங்க தந்த தகவல் முழுவதும்
பயானுள்ளதாக இருந்தது .நன்றி
......நன்றி .....
அவ்வளவு கஷ்டம் பட்டோம்னு இப்ப தோணுது : இது புரியவில்லை.
மேல் அதிக விபரங்களுக்கு உங்களை எப்படி தொடர்பு கொள்வது ?
சுபா கூறியது,
அது,இது என எல்லாவற்றையும் என அலசுகிறிர்கள்.தங்களுக்கு gooddiversified knowledge
இந்த தலைப்பை பார்த்து என்னவாக இருக்கும் என் படித்தவர்களுக்கு நல்ல ஒரு குட்டு!!!!!!!!!
The moment I have started reading this article..understood its about accounts figures only..However, the author has maintained the decoram, and finished with his usual twist in the end...as somebody mentioned...people who does have some common sense...will easily understand the satire, in this article...Good
//
நசரேயன் கூறியது...
வயசு ஆகிப்போச்சி, ரெம்ப தாமதமா கிடைச்சுருக்கு
//
இந்த ஃபிகர்களை மெய்ன்டைன் பண்ணுவதற்கும் வயசுக்கும் சம்பந்தமில்லை நசரேயன் !
//
malar கூறியது...
நீங்க தந்த தகவல் முழுவதும்
பயானுள்ளதாக இருந்தது .நன்றி
......நன்றி .....
//
நன்றி malar
//
சுபா கூறியது...
அது,இது என எல்லாவற்றையும் என அலசுகிறிர்கள்.தங்களுக்கு gooddiversified knowledge
இந்த தலைப்பை பார்த்து என்னவாக இருக்கும் என் படித்தவர்களுக்கு நல்ல ஒரு குட்டு!!!!!!!!!
//
பாராட்டுகளுக்கு நன்றி சுபா !!!
//
RAMASUBRAMANIA SHARMA கூறியது...
//
Many a thanks Mr. Ramasubramani Sharma !!
அடுத்தது ஃபேன்சி ஃபிகர்கள். பார்க்கும்போதே நன்றாக இருக்கும் இந்த வகை ஃபிகர்கள் நம் கவனத்தை திசை திருப்பி விடக் கூடும்.
உண்மை தான் இதனால் பலமுறை குழம்பியுள்ளேன்.என்னை போல் அக்கவுண்டண் படிக்கதவர்க்கு பயன்யுள்ள பதிவு
Hi,
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
Post a Comment