காலை தினசரியைப் பார்த்ததுமே என்னமோ செய்தது. இத்தனைக்கும் ரத்தமில்லை, வன்முறையில்லை. மக்களின் படங்கள்தான்.
கும்பல் கும்பலாக மக்கள் கூட்டமும் அவர்களின் நிலையும், உணவுக்காக நிற்பதும், சொந்த நாட்டிலேயே அகதிகளாய் இருப்பதும்.... காலத்தின் கட்டாயம்?.
அவற்றையெல்லாம் மீறி எனக்குத் தெரிந்தது அவர்களுடைய நம்பிக்கைதான். இந்தத் துன்பமும் கடந்து போகும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
Tough Times never last. But tough people do.
இவர்கள் நிச்சயமாக இந்தத் துன்பத்தைக் கடந்து வருவார்கள். வருங்காலத்தில் நிச்சயமாக நன்றாக இருப்பார்கள்.
தமிழகமும் தமிழகத் தலைவர்களும் ஏதாவது செய்வார்கள் என்று நம்பியிருப்பார்களேயானால் அது ஒன்றுதான் அவர்களுடைய தவறாக இருக்க முடியும்.
====
இது இவ்வாறிருக்க, தமிழக திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகளும் உணவகங்களும் மூடியுள்ளன. பேருந்துகள் சென்னையில் இயங்கவில்லை. மற்ற இடங்களில் எப்படி என்று தெரியவில்லை.
அரசியல் தலைவர்கள் வழக்கம் போல் அறிக்கைப் போர்களில் இறங்கியுள்ளனர். கலைஞரின் அறிக்கைகளை இப்போது படிக்கும் போது அது அவர் எழுதுவதுதானா என்ற சந்தேகம் எழுகிறது. இன்று சோனியா தெரிவித்த கருத்துகள் ஆறுதலளிப்பதாக(?!) எழுதியுள்ளார். சன் டிவியும், கலைஞர் டிவியும் சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்புகின்றன.
வாழ்க வளமுடன் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
====
நல்ல வேளையாக இந்த கூத்துகள் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதைத் தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஒரு வேளை தெரிய வரும்போது ?
6 comments:
:-(((
உண்மை
//"நல்ல வேளை இந்த கூத்தெல்லாம் அவர்களுக்குத் தெரியாது"//
தெரியனும்..தெரிஞ்சே ஆகனும் இவர்களைப் பற்றி...
engea anna sakkaraveyukam
தல..,, வனவாசம் போதும்..., தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன் வாங்க..,
இளைய பல்லவரே, சக்கர வியூகம் என்னாயிற்று?
Post a Comment