இப்போதெல்லாம் சினிமா டைட்டிலுடன் ஒரு வாக்கியம் வருவது ஃபேஷன் ஆகி விட்டது. சிவாஜி, தி பாஸ் என்பது போல்.
இதை ஏன் பதிவில் அமல் படுத்தக் கூடாது என்ற எண்ணம் எழுந்த போது வந்ததுதான் இந்த டைட்டில்.
ஏன் என்ற கேள்வியை வைத்து ஏன் டைட்டில் வைக்க வேண்டும் என்ற கேள்வி ஏற்பட்ட போது தோன்றியதுதான் இந்த சப் டைட்டில்.
ஏன் என்றால் இப்போது 32 கேள்வி பதில் தொடர் ஓடிக்கொண்டிருக்கிறதல்லவா? ஏன் என்ற பதிவு கேள்வி பதில் தொடருக்கானதாக இருக்கலாம் என்று யாராவது இதைப் படிக்காமல் போய்விட்டால் என்ற எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த சப் டைட்டில்.
சரி ஏன் ஏன் என்ற கேள்வி நீங்கள் கேட்கலாம் தப்பில்லை. நான் அதற்கு ஏன் ஏன் கூடாது என்று பதிலிறுக்கலாமல்லவா?
ஏன் இப்போதெல்லாம் இளைய பல்லவன் மொக்கையாகவே எழுதுகிறார் என்ற கேள்வியும் உங்களுக்குத் தோன்றலாம். ஏன் எழுதக்கூடாது என்று நான் நினைப்பதில் தப்பில்லையல்லவா? மொக்கையில்லாத பதிவு, காதலில்லாத வாழ்க்கையைப் போன்றது என்பது நீங்கள் அறிவீர்கள்தானே.
இதை ஏன் படித்துத் தொலைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் உண்டாக வாய்ப்பிருக்கிறது. ஆனால்...
எனக்கு மட்டும் இதன் சம்பந்தமாக ஏன் ஒன்றும் தோன்ற மாட்டேன் என்கிறது என்றுதான் தெரியவில்லை.
ஆகக் கூடி, ஏன் பதிவுலகிற்கு வந்தோம் என்று நீங்கள் எண்ணுவீர்களேயானால் அதுவே இந்தப் பதிவின் வெற்றியாக ஏன் இருக்கக் கூடாது என்று நான் ஏன் எண்ணக்கூடாது.
டிஸ்கி:-
1. இப்போது எத்தனை ஏன் என்று எண்ணுங்கள்...
2. பின்னூட்டங்களில் ஏன் என்ற வார்த்தையைத் தவிர்க்கவும்.
13 comments:
/பின்னூட்டங்களில் ஏன் என்ற வார்த்தையைத் தவிர்க்கவும்//
ஏன் ? ? ?
@#)($*&$*%^^&@*%($(*$)
why ?
KYUN??
///
சூரியன் said...
/பின்னூட்டங்களில் ஏன் என்ற வார்த்தையைத் தவிர்க்கவும்//
ஏன் ? ? ?
////
ஏன் ஏன் ரெண்டு எடத்துலயும் வரணும்னுதான்!
//
☀நான் ஆதவன்☀ said...
@#)($*&$*%^^&@*%($(*$)
///
ரிப்பீட்டே !!!
//
நட்புடன் ஜமால் said...
why ?
//
//
உருப்புடாதது_அணிமா said...
KYUN??
//
அவ்வ்வ்வ்வ்வ்.
ஏன் இப்படியெல்லாம்? இதுதான் மாத்தி யோசிக்கிறதா??
எப்டிலாம் விளம்பரம் பன்றாங்கய்யா...
நல்லா இருங்க!!
இது வரை நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு?
//
கலையரசன் said...
எப்டிலாம் விளம்பரம் பன்றாங்கய்யா...
நல்லா இருங்க!!
//
டாங்க்சுங்க.
//
VIKNESHWARAN said...
இது வரை நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு?
//
ஏன்? இப்ப என்ன ஆச்சு?!!
.....என்ற கேள்வி கேட்க்காமல் வாழ்க்கையில்லை......
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை.......
எப்பிடி கேக்காமலே வாசிச்சீங்களா?
பிரியமுடன் வசந்த்
அந்தக் கேள்வியை நான் கேட்கப் போவதில்லை!!
Post a Comment